Tuesday, January 18, 2022

நாம் மட்டும் நமது நேரத்தை வீணடிக்கவில்லை.

 கடலின் அலையும், நகரும் நேரமும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை என்பார்கள்.

யாரிடமும் வாங்க முடியாத, யாருக்கும் கொடுக்க முடியாத ஓர் உன்னதப் பொருள் 'நேரம்'.
உங்கள் கடிகாரத்தைக் கொஞ்ச நேரம் உற்றுப் பாருங்கள்.
எவ்வளவு நேர்த்தியாக வினாடிகள், நிமிடங்கள், மணிகள் என ஓடிக் கொண்டே இருக்கிறது.
காலையில் வேகமாகவும், மதியம் சோர்வாகவும், மாலையில் தூங்கியபடியும் அது ஓடுவதில்லை.
ஆனால் நாமோ நம்முடைய மனநிலைக்கு ஏற்ப, ' நேரம் வேகமாக ஓடிடுச்சு', 'நேரம் போகவே மாட்டேங்குது' எனக் காலத்தைக் குறை சொல்கிறோம்.
ஒன்பது மணிக்குத் துவங்கும் அலுவலகத்திற்கு எத்தனை பேர் சரியான நேரத்தில் வருகிறார்கள்?
ஏழு மணிக்கு நடைபெறும் கூட்டத்திற்கு எத்தனைப் பேர் தாமதமின்றி வந்து சேர்கிறார்கள்?
பத்து நிமிடம் தாமதமாகச் சென்றால் ஒண்ணும் குடி முழுகிப்'போவாது என்பது தானே பலருடைய மனநிலையாக இன்று இருக்கிறது.
ஜார்ஜ் வாஷிங்டன் அமெரிக்க அதிபராக இருந்த சமயம் ஒரு நாள் அவரது அலுவலத்திற்குத் தலைமை செயலாளர் தாமதமாக வந்தார்.
வெகுநேரம் அவருடைய ஒரு அலுவலுக்காக காத்து இருந்த அதிபர்,’’ என்ன இன்று இவ்வளவு தாமதமாக வருகின்றீர்கள்? என்று கேட்டார்..
அதற்கு அந்த தலைமைச் செயலாளர், மன்னிக்க வேண்டும். எனது கைக்கடிகாரம் தாமதமாக ஓடியதால் இப்படி ஆயிற்று.
என் மீது தவறு இல்லை என்று சொல்லித் தன் கைகடிகாரத்தை அவரிடம் காண்பித்தார்..
அதற்கு அதிபர் வாஷிங்டன்,
ஐயா,’’இதற்கு இரண்டு தீர்வுகள் உண்டு.ஒன்று நீங்கள் உங்கள் கைக்கடிகாரத்தை சரி செய்ய வேண்டும்.*
*அல்லது நான் வேறு ஒரு தலைமைச் செயலாளரை நியமித்துக் கொள்ள வேண்டும்’’ என்றார்.
உயர்ந்த பதவியில் இருப்பவர் இப்படிப் பொறுப்பு இல்லாமல் பேசுவது தவறு என்று அதிபர் வாஷிங்டன் சரியாகச் சுட்டிக் காட்டினார்.
சரியான நேரத்தில் கலந்து கொள்ள வேண்டும்' என எப்போதுமே நினைக்க வேண்டாம்.பத்து நிமிடம் முன்னதாக இருக்க வேண்டும் என்று நினையுங்கள்.
அப்போது தான் சரியான நேரத்திலாவது நீங்கள் அங்கே இருக்க முடியும்.
தாமதமாக வரும் போது நாம் மட்டும் நமது நேரத்தை வீணடிக்கவில்லை..
நம்மைச் சார்ந்தவர்களின் நேரத்தையும் வீணடிக்கிறோம் என்பது தான் வேதனையானது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...