சிவனை மக்கள் மட்டுமல்லாமல் அஃறிணை உயிர்களும் வழிபட்டுள்ளன.
குரங்கு வழிபட்ட கோயில்கள், வட குரங்காடுதுறை, தென் குரங்காடுதுறை எனவும்,
நாரை வழிபட்ட கோயில் திருநாரையூர் எனவும்,
நண்டு வழிபட்டது திருந்துதேவன்குடி எனவும்,
யானை, சிலந்தி வழிபட்டது திருவானைக்கா எனவும்,
ஈ வழிபட்டது திருவீங்கோய் மலை எனவும்,
எறும்பு வழிபட்டது திருவெறும்பூர் எனவும்,
பசு வழிபட்டது ஆவூர், பட்டீச்சுரம், கருவூர், பேரூர் எனவும்,
பாம்பு வழிபட்டது திருப்பாம்புரம் எனவும்,
கழுதை வழிபட்டது கரவீரம் எனவும்,
கரிக்குருவி வழிபட்டது வலிவலம் எனவும்,
ஆடு, ஆனை வழிபட்டது திரு ஆடானை எனவும்,
குரங்கு, அணில், காக்கை வழிபட்டது குரங்கணில் முட்டம் எனவும்,
மயில் வழிபட்டது மயிலாப்பூர் எனவும்
இன்றும் வழக்கத்திலுள்ள அஃறிணை உயிர்கள் வழிபட்ட தலங்களாகும்.
சிவவழிபாடு ஒன்றே இம்மைக்கும் மறுமைக்கும் எப்பிறவிக்கும் நற்பேற்றை அருளவல்லது.






No comments:
Post a Comment