அவளுக்கு என்று
ஒரு மனம் இருக்கிறது
நினைத்தது போல் செய்யட்டும்...!
அவளுக்கு என்று
ஒரு குணம் இருக்கிறது
பிடித்தது போல் நடக்கட்டும்...!
அவளுக்கு என்று
ஒரு விருப்பம் இருக்கிறது
எதிர்பார்ப்பது போல் கிடைக்கட்டும்...!
அவளுக்கு என்று
ஒரு கனவு இருக்கிறது
காண்பது போல் நிகழட்டும்...!
அவளுக்கு என்று
ஒரு உறவு இருக்கிறது
நேசிப்பது போல் உயிராகட்டும்...!
அவளுக்கு என்று
ஒரு வாழ்க்கை இருக்கிறது
இரசிப்பது போல் அழகாகட்டும்...!
அவளுக்கு என்று
ஒரு உலகம் இருக்கிறது
எனில்
அவள் அவளாகவே இருக்கட்டும்...! Happy daughters day

No comments:
Post a Comment