Wednesday, January 28, 2015

லிப் ஸ்டிக் (உதட்டுச்சாயம்) போடும் பெண்களின் அதீத கவனத்திற்கு . . .

லிப் ஸ்டிக் (உதட்டுச் சாயம்) போடும் பெண் களின் அதீத கவனத்திற்கு . . .
லிப் ஸ்டிக் (உதட்டுச் சாயம்) போடும் பெண் களின் அதீத கவனத் திற்கு . . .
பெண்கள் பொதுவாக உதட்டுச் சாயம் அதாவது லிப் ஸ்டிக் பயன்படுத்தும்போது
தங்களது தோல் நிறத்தி ற்கு ஏற்றவாறு போட்டுக் கொ ள்ள வேண்டும். அப்ப‍டியில்லா மல் ஏனோ தானோ வென்று போட்டுக் கொண்டால் பாரப்ப‍வ ர்களின் ஏளன பார்வைக்கும் நையாண்டி சிரிப்புக்கும் ஆளாக நேரிடும்.
இதோ லிப்ஸ்டிக் அதாவது உதட்டுச்சாயம் போட்டுக் கொள்ள‍ எளிய குறிப்புக்களை பார்ப்போமா?
* சிவப்பு நிற பெண்கள் ஆரஞ்சு, சிவப்பு, பிங்க் நிற லிப் ஸ்டிக் பூச வேண்டும்.
* மாநிறப்பெண்கள் லைட்பிரவு ன், லைட் செர்ரி நிற லிப் ஸ்டிக் பூச வேண்டும்.
*உதடு பெரிதானவர்கள், சின்ன உதடாக உள்பக்கம் வரைந்து, அதில் லிப்ஸ்டிக் பூச வேண்டும்.
இதழ்கள் ஈரமாக இருந்தால், முகப்பவுடரை தடவி, அதன் பிறகு லிப்ஸ்டிக் போட வேண்டும்.
* லிப்ஸ்டிக் பூசும் போது, இடமிரு ந்து வலமாக, வலமிருந்து இடமா க பூச வேண்டும்; மேலும், கீழும் போட்டு இழுக்கக் கூடாது.
*அதிகமாக லிப்ஸ்டிக் பூசி விட்டால், டிஷ்யூ பேப்பரால் ஒற்றி எடுத்து, சரி செய்யுங்கள்.
* பகல் நேரத்தில் இள நிறத்திலும், மாலை நேரத்தில் அடர் நிறத்திலும் பூசுங்கள்.
* லிப்ஸ்டிக் பூசிய பிறகு, உதட்டால் ஈரப்படுத்துவதோ, பானங்கள் அருந்துவதோ கூடாது.
* முதலில் லிப் லைனரால் உதடு களை அவுட் லைன் செய்து, பிறகு, அதன் மூலமே உதடுகளை நிரப்ப வும். முதலில் லிப்ஸ்டிக்கை தடவி, பிறகு லிப் லைனரால் அவுட் லைனும் செய்யலாம். இம்முறை உதடுகளை மென்மையானதாக, கவர்ச்சியா னதாக காட்டும்.
* இரவு படுக்கச் செல்வதற்கு முன், உதடுகளில் வாசலைன் தடவிக் கொள்ளலாம். லிப் ஸ்டிக் தடவுவதற்கு முன், வாசலைன் உபயோகித்தா லும், உதடுகள் பளபள க்கும்.
* முதலில் லிப் பென்சிலால், லிப்ஸ்டிக் போட வேண்டிய பகுதியில், அவுட்லைன் போட வேண்டும். மெலிதானஉதடுகளைக்கொண்டவர்கள், உதடுகளின் வெளிப்பகுதியி ல் அவுட் லைன் வரைய வேண்டும். பருமனான உதடு கொண்டவர்கள், உதடுகளின்உள்பகுதியிலேயேஅவுட் லைனை போட வேண்டும்.
மேல் உதடு தடிமனாக இருப்பவர் கள், மேல் உதட்டின் உள் பகுதியி லுமாக அவுட் லைன் போட வேண் டும். அவுட் லைன் போட்ட பகுதிக ளில் லிப் பிரஷ் மூலம் லிப்ஸ்டிக்கை போடவும்.
* அதிக குளிரும் சரி, அதிக வெயிலும் சரி, இரண்டுமே லிப்ஸ்டிக்குக்கு எதிரிகள்; கார ணம், உதடுகள் வறண்டு விடும். பொதுவாக லிப்ஸ்டிக் போடுவத ற்குமுன், தேங்காய்எண்ணெயை உதடுகளில் தடவி, 10 நிமிடம் கழித்து வெது, வெதுப்பான வெந் நீரில் ஒரு துணியை நனைத்து, உதடுகளை துடைக்க வும். அதன் பிறகு, லிப்ஸ்டிக் போடுவது நல்லது.
*லிப்ஸ்டிக் போட்டவர்கள்அதிக நேரம் வெயிலில் அலைவதோ, ஒரு லிப்ஸ்டிக்கை ஆறு மாதத்துக்கு மேல் பயன் படுத்துவதோ கூடாது.
என்ன‍ பெண்களே! இனி உதட்டுச்சாயம் அதாவ து லிப் ஸ்டிக் பயன்படுத்தும்போது தங்களது தோல் நிறத்திற்கு ஏற்றவாறு மேற்கூறிய கூற் றுப்படி போட்டுக்கொண்டு அழகுபதுமைகளாக வலம் வாருங்கள்
 

நாள்பட்ட தலைவலி, தலைபாரம், ஒற்றைத் தலைவலி போன்றவை குணமாக . . .

நாள்பட்ட தலைவலி, தலைபாரம், ஒற்றைத் தலை வலி போன்றவை குணமாக . . .
தலைவலி, நாள்பட்ட தலைவலி, தலைபாரம், ஒற்றை த் தலைவலி போன்ற
தலைவலி பிரச்ச‍னைகளில் இருந்து குணமடைய எளியதொரு தீர்வு நம் முன்னோர்க ள் சொல்லி வைத்துள்ளார்கள். அது எளி மையானதும் நீங்களே வீட்டில் தயார் செய்தும் பயன்படுத்தினால், மேற்படி தலைவலிகள் முற்றிலும் குணமைந்து சுகம்காண்பீர்கள். இதோ அந்த எளிய தீர்வுதரும் மா மருந்து
அதிமதுரம், ஏலக்காய், சித்தரத்தை, சீர கம், சுக்கு, சோம்பு, தனியா, மகிழம்பூ, ரோஜாப்பூ, போ ன்ற ஒவ்வொன்றிலும் தலா 25 கிராம் அளவு சேர்த்து தூள் செய் த கலலை மருந்தினை காலை- மாலை இருவேளையும் அரை தேக்கரண்டியளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் மேற்படி தலைவலிகள் முற்றிலும் குணமடைவீர் என் பது திண்ண‍ம்.

கணிணியில் பணிபுரிபவரா நீங்க? – அதிரவைக்கும் எச்ச‍ரிக்கைத் தகவலும்! தப்பிக்கும் வழிமுறைகளும்!

கணிணியில் பணிபுரிபவரா நீங்க? – உங்களை அதிர வைக்கும் எச்ச‍ரிக்கைத் தகவலும்! தப்பிக்கும் வழி முறைகளும்!
நாம் எப்போதெல்லாம்
கை கழுவுகிறோம்? சாப்பிடுவதற்கு முன்னும் பின்னு ம், கழிவறையைப் பயன்படு த்தியபிறகு, குப்பைகளைச் சுத்தம் செய்தபிறகு எனத் தே ர்ந்தெடுத்த சில வேலைக ளைச் செய்யும்போது மட்டும் சுத்தமாக இருக்க வேண்டு மென எதிர்பார்த்து இப்படிச் செய்கிறோம்.
அதேநேரம் கம்ப்யூட்டரையோ செல்போனையோ பய ன்படுத்திய பிறகு நாம் கைகளைக் கழுவுகிறோமா? அதற்கும் சுத்தத்துக்கும் என்ன சம்பந்தம் என்று நினை க்கலாம். ஆனால், கழிப்பறையைவிட ஆறு மடங்கு அதிகமான கிருமிகள் நாம் தினசரிப் பயன்படுத்தும் கம்ப்யூட்டரிலும் செல்போனிலும் இருப்பதாக ஆராய்ச் சிகள் சொல்கின்றன.
அழுக்குப் படிய வாய்ப்பே இல்லாத, அப்படியே அழுக் கடைந்தாலும் அடிக்கடி சுத்தப்படுத்துவதாக நாம் நி னைக்கிற எலெக்ட்ரானிக் பொருட்களில்தான் கிருமிக ள் அதிகமாக இருக்கின்றன. கம்ப்யூட்டர் கீ-போர்டில் பாக் டீரியா இருப்பதே தெரியாமல், நாமும் அதன் மீது விரல்களை நடனமாட விடுவோம். பிறகு அதே கையுடன் செல்போனை எடுத்துப் பேசு வோம். கண்ணைக் கசக்குவோம். சில சமயம் கம்ப்யூ ட்டரில்தானே வேலை பார்க்கி றோம் என்ற அசட்டையாகக் கை கழுவாமல் சாப்பிட்டும் விடுவோம். கீ போர்டில் இரு ந்த கிருமிகள் அப்போது நம் உடலுக்குள் புகுந்து, தங்கள் வேலை யைக் காட்டத் தொடங்கிவிடும்.
கிருமிகளின் பட்டியல்
லண்டனில் ஒரு அலுவலகத்தில் இருந்த கீ போர்டுகளைப்பரிசோதனைக்கு உட்படுத் தினார்கள். அதில் ஒரு கம்ப்யூ ட்டரில் அனுமதிக்கப்பட்ட பாக்டீ ரியா அளவை விட 150 மடங்கு அதிகமான கிருமிகள் இருந்திரு க்கின்றன. பெரும்பாலான கீ போர்டுகள் பயன்பாட்டுக்குத் தகுதி இல்லாத அளவில் கிருமிகளின் கூடாரமாக இருந்திருக்கின்றன.
அவற்றில் கழிவறைக் கதவின் கைப்பிடியிலும் கழிவ றை பேஸினிலும் காணப்படக்கூடிய ஈகோலி, கோலி பார்ம்ஸ், ஸ்டெஃபைலோகாக்கஸ் ஆரஸ், எண்டிரோ பாக்டீரியா போன்ற கிருமிகள் இருப் பதைப் பார்த்து ஆராய்ச்சியாளர்க ளே அதிர்ச்சியடைந்து விட்டார்கள். இப்படிக் கிருமிகள் நிறைந்திருக்கும் கீ போர்டைத் தொடர்ந்து பயன்படுத் தி வந்தால் வயிற்று வலி, தொடர்ச்சியா ன வயிற்றுப் போக்கு போன்றவை ஏற்படலாம் என்று மருத்துவர் கள் எச்சரிக்கிறார்கள்.

சுத்தத்துக்குப் பேர் போனவர்கள் என்று நாம் நினைக் கும் வெளிநாடுகளில் இந்த நிலைமை என்றால், நம்அலுவலகத்திலோ, வீடுகளிலோ பயன் படுத்தும் கம்ப் யூட்டர்களைப் பற்றிக் கொஞ்சம் நினைத்துப்பாருங் கள்.
சுத்தம் உங்கள் கையில்
தனிநபர்கள் சுத்தமாக இருக்கும் பழக்கத்தைப் பொறு த்தே கம்ப்யூட்டரில் கிருமிகள் சேர்வதற்குள்ள வாய்ப் பும் அமைகிறது. பலர் கழிப்பறை யைப் பயன்படுத்திய பிறகு கைகளைச் சரியாகச் சுத்த ம் செய்வதே இல்லை. இன்னும் சிலர் கம்ப்யூட் டரின் முன்னால் அமர்ந் து கொண்டு கைக்குட்டை யால் முகத்தை மூடாமல் இருமுவதும் தும்முவது ம் சகஜம்.
இதுபோன்ற பழக்கங்களா லும் கீ போர்டில் கிருமிகள் பல்கிப் பெருகும். அலுவலகத்தில் யாருக்காவது சளி யோ,இரப்பை குடல்அழற்சியோ இருந்தால், அவர்பயன்படுத்திய கீபோர்டையோ மவுஸையோ நாமும் பயன்படுத்தினால் போ தும். அவருடைய நோய்கள் நம க்கும் மிக எளிதாகத் தொற்றி  விடும்.
நேரத்தை மிச்சப்படுத்துகிறோம் என்று சொல்லிக் கொ ண்டு ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளைச் செய்வ துதான், நமக்குக் கைவந்த கலையா யிற்றே. அதனால் கம்ப்யூட்டரில் வே லை செய்துகொண்டே எதையாவது கொறிப்பது அல்லது குடிப்பது என்ப தைப் பலரும் வழக்கமாக வைத்திரு க்கிறார்கள்.
அப்படிச் சாப்பிடும் உணவுப்பொருள் தெரியாமல் கம்ப் யூட்டர் கீ போர்டில் விழுந்துவிடும். அப்படி விழுகிற உண வுத் துணுக்கை ஆதாரமாகக் கொண் டு பாக்டீரியாக்கள் பல்கிப் பெருகி விடும்.
சுய சுத்தத்தை விடுங்கள். நம்மில் எத்தனை பேர் கம்ப் யூட்டரையும் மவுஸையும் அடிக்கடி சுத்தம் செய்கி றோம்? கீ போர்டில் தூசுப் படலம் பரவினாலும் சுத்தம் செய்யாமல், அப்புறம் பார் த்துக் கொள்ளலாம் என்ற மனநிலைதான் பலருக்கும் இருக்கிறது. அப்படி இல் லையென்றால் இது அலுவ லக கம்ப்யூட்டர்தானே, அவர்கள் சுத்தம் செய்துகொள் வார்கள் என்றநினைப்பு, சுத்தத்தைத்துரத்திவிடுகிறது.
சிலஅலுவலகங்களில் இடம்மாறியோ, வேலைநேரம் மாறியோ ஷிப்ட்களில் வேலை செய்வார்கள். அப்போது ஒரே கம்ப்யூட்டரைப் பலர் பயன்படு த்த நேரிடும். இதுபோன்ற சூழ்நி லையில் சுத்தம் செய்வது எவ்வ ளவு தூரம் கேள்விக்குறியோ, அவ்வளவு தூரம் கிருமிகள் பரவுவதும் நிச்சயம்.
என்ன செய்யலாம்?
குறிப்பிட்ட கால இடைவெளி யில் கீ போர்டு, மவுஸ், செல் போன் ஆகியவற்றைச்சுத்தப் படுத்தவேண்டும். கீபோர்டை த் தலைகீழாகக் கவிழ்த்து மெதுவாகத் தட்டுவதன் மூல ம் அதனுள்ளே சிக்கியிருக்கு ம் உணவுத் துணுக்குகளையோ, சிறியகுப்பையையோ அகற்றலா ம். மெல்லிய துணியின் மூலம் இவற்றைத் துடைத் தெடுக்கலாம்.
இவை அனைத்தையும்விட ரொம்ப முக்கியம் சுயச் சுத் தம். எங்கெல்லாம் கிருமித்தொ ற்றுக்கு வாய்ப்பு இருக்கிறதோ, அங்கெல்லாம் சென்றுவந்த பி றகு கைகளைச் சுத்தம் செய்வது நல்லது. அதுவும் வெறும் தண் ணீரிலோ அல்லது சுத்திகரிப் பான் மூலமாகவோ சும்மா கழுவுவதால், பாக்டீரியாக் கள் முழுமையாக அழிவதில்லை. சுத்திகரிப்பானைப் பயன்படுத்திக்கு றைந்தபட்சம் 30 விநாடிகள் தேய்த்து க் கழுவ வேண் டும்.
அதேபோலச் சாப்பாடோ, கொ றிப்போ எதையும் தூசி பறக்கு ம், மனிதர்கள் அதிகம் நடமாடு ம் பகுதிகளிலோ சாப்பிடுவதை த் தவிருங்கள். இப்படிச் சுத்தத் தைப் பரா மரிக்கத் தவறினால் பின்னால், அவதிப்படப் போவது வேறு யாருமல்ல, நாம்தான்.

Monday, January 26, 2015

இண்டர்நெட் இன்றி செய்திகளைப் பரிமாறிக்கொள்ள‍ ‘நவீன‌ சிம்கார்டு’ -தொழில்நுட்பத்தின் பூகம்ப புரட்சி

இண்டர்நெட் வசதி இன்றி செய்திகளைப் பரிமாறிக் கொள்ள‍ நவீன‌ சிம்கார்டு – தொழில்நுட்பத்தின் பூகம்ப புரட்சி
 இண்டர்நெட் இல்லாமலேயே
‘வாட்ஸ்-ஆப்’பை பயன் படுத்தலாம்
இன்றைய காலகட்டத்தில் வாட்ஸ் -ஆப் ஒருதகவல் தொடர்புமுறையா கவே மாறிவிட்டது. ஸ்மார்ட்போன் கள் வந்துவிட்ட பிறகு ஒவ்வொரு வரும் ‘வாட்ஸ்-ஆப் ‘பை பயன்படு த்தி வருகின்றனர். ஆனால், ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் இதை பயன்படுத்த முடிவதில்லை. ஏனென்றால், டேட்டா கனெக்ஷன் வவுச்சர்லிமிட் தீர்ந்துவிட்ட பிறகு மீண்டும் ரீசார்ஜ் செய்ய வேண்டியுள்ளது.
உலகம் முழுவதும் படுபாப்புல ராகிவிட்ட இந்த வாட் ஸ்-ஆப் பை இண்டர்நெட் இல்லாமலே யே பயன்படுத்தும் வகையில் புதிய சிம்மை தயாரித்து அசத்தி யிருக் கிறது இத்தாலியை சேர்ந்த ஒரு மொபைல் நிறு வனம். இந்த சிம்மை பயன்படுத்தி வை-ஃபை, டேட்டாகனெக்ஷன், ரோமிங் இல் லாமல் மெசேஜை அனுப்ப லாம். இந்த சிம்மிற்கு ‘வாட் ஸிம்’ எனபெயரிடப்பட்டுள் ளது. இந்தஅபூர்வ சிம்மை ‘ஜீரோமொபைல்’ நிறுவனத்தின் இயக்குனர் மானு வேல் ஜனிலியா கண்டுபி டித்திருக்கி றார்.
இந்த சிம் எப்படி வேலை செய்கிறது?
‘வாட்ஸிம்’ உலகம் முழுவதிலுமு ள்ள 150 நாடுகளில் 400-க்கும் மேற் பட்ட மொபைல் ஆபரேட்டர்களுட ன் இணைந்து சேவையை வழங்கு கிறது. நீங்கள் ஒரு நா ட்டிலிருந்து வேறு நாட்டிற்கு சென்றாலும் உடனடியாக சர்வீஸ் புரொவைடரை ஆட்டோமேட்டிக்காகவே மாற்றிக் கொள்கிறது ‘வாட்ஸிம்’. ஒருவேளை அருகில் ஏதாவது ஒரு நெட்வொ ர்க்கில் ‘சிக்னல்’ நன்றாக இருந் தால் தானாகவே அந்த நெட்வொ ர்க்கில் ‘கனெக்ட்’ ஆகிவிடும். இந் த சிம் அதிகம் பயணம் செய்பவர் களுக்கு ஒரு வரப்பிரசாதம். அதைவிட, அவர்கள் தங்களுக்கு அன்பானவர்களுடன் எந்த தடையும் இல்லாமல் ‘வா ட்ஸ்-ஆப்’பில் எப்போதும் இணைந்திருக்க முடியும். இ தற்கு எந்த ரோமிங் கட்டணங்களும் கிடையாது என்பது கூடுதல் ‘பெனிபிட்’.
‘வாட்ஸிம்’ வாங்க எவ்வளவு செலவாகும்?
இந்த சிம்மின் விலை வெளிநாட்டு பண மதிப்பில் 10 பவுண்டுகள் செல வாகும். அதாவது, இந்திய பண மதிப் பில் ரூ.714. இது ஒரு மாதத்திற்கு மட்டுமல்ல, வருடம் முழுவதும் உலகெங்கிலும் உள்ள நண்பர்களுடன் ‘ சாட்’செய்து மகிழலாம். ‘வாட்ஸிம் ‘முக்கு மாதாந்திரகட்டணங்களோ, பிக்ஸட் கட்டணங்களோ, எதுவும் கிடையாது. அதுமட்டுமல்ல இது ஒரு போதும் எக்ஸ்பைரி ஆகவே ஆகாது.
போட்டோ, வீடியோ, பாடல்களை இலவசமாக அனுப்ப முடியுமா?
மெசேஜைபோல மல்டிமீடியா கண்டென்ட்டு(போட்டோ, வீடி யோ, ஆடியோ) பைல்களை இலவசமாக இதில் அனுப்பமுடியாது. அதற்கு தனியா க நாம் ரீசார்ஜ் செய்துதான் ஆகவேண்டும். எனினும், சில கிரெடிட் பாயிண்டுகளை கலெ க்ட் செய்துகொண்டால் அதற்கு ஏற்றவாறு இலவசமாக அனுப்ப முடியும். இதுஒவ்வொரு நாட்டிற்கு ம்வேறுபடும். குறிப்பாக, இந்தியா வில் 150 கிரெடிட்டுகளை கலெக்ட் செய்தால் போட்டோக்களையும், 600கிரெடிட்டுகளை பெற்றால் வீடியோ மெசேஜ்களையும், 30கிரெடிட்டுக ளை பெற்றால் வாய்ஸ் மெசே ஜ்களையும் இலவசமாக அனுப் பலாம். ஆனால், கான்டாக்ட் மற்றும் லொகேஷன் ஷேரிங் செய்வதற்கு எந்த கட்டணமும் இல்லை. அதற்கு கிரெ டிட்டுகளும் தேவையில்லை.

வயிற்றில் ஏற்படும் வலி, எரிச்சல், அடிக்கடி ஏப்பம், வாயில் கசப்பு, அடிக்கடி பசி ஆகியவற்றிலிருந்து விடுபட . . .

வயிற்றில் ஏற்படும் வலி, எரிச்சல், அடிக்கடி ஏப்பம், வாயில் கசப்பு சுவை, அடிக்கடி பசி எடுத்தல் ஆகிய வற்றிலிருந்து விடுபட . . .
பொதுவாக உண்ணும் உணவு செரிமானமாவதற்கு இரைப்பையில்…
சுரக்கும் அமிலம் தான் உதவியாக உள் ளது. ஆனால் இந்த அமிலமானது அளவுக்கு அதிகமாக சுரக்கும்போது,அவை இரைப்பையை அரிக்க ஆரம்பி த்து, வயிற்றில்எரிச்சலை உண் டாக்குகிறது. இவ்வாறு வயிற்றி ல் ஏற்படும் அதிகப்படியான எரிச்சலைத்தான் அமில சுரப்பு அதாவது acidity என்று சொல்வார்கள். இத்தகைய அமில சுரப்பு ஏற்படுவதற்கு ப் பல காரணங்கள் உள் ளன. அவற்றில் சரியான நேரத்திற்கு உணவு சாப் பிடாமல் இருப்பது, வறு த்த மற்றும் காரமான உணவுகளை அதிகம் சாப்பிடுவது, அதிகமாக புகைப் பிடிப்பது மற்றும் மது அருந்துவது போன்றவைக் குறி ப்பிடத்தக்கவை. மேலும் காலை உணவைத் தவிர்ப்ப து, வெறும் வயிற்றுடன் நீண்ட நேரம் இருப்பது கொழுப்புள்ள உணவுகளை அதிகம் சாப்பிடுவது போன்றவையும் அமில சுரப்பை ஏற்படுத்தக்கூடிய வையே. இத்தகைய அமில சுரப்பைச் சில அறிகுறிகள் கொண்டு அறியலா ம்.
அவை நெஞ்செரிச்சல், குமட்டல், வாந்தி, உணவு உண் ட பின் ஒரு மணி நேரத்தில் இருந்து நான்கு மணி நேர த்திற்குள் வயிற்றில் வலி அல்லது எரிச்சல் ஏற்படுவது, அடிக்கடி ஏப்பம், வாயில் கசப்பு சுவையை உணர்வ து, அடிக்கடி பசி எடுத்தல் போன்றவை. ஆக வே இத்தகைய அறிகுறிகள் இருந்தால், அப்போது உடனே அத னை குணப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். இல்லாவிட்டால், அவை பெரும் பிரச்சனை யை உண்டாக்கிவிடும். அதிலு ம் அமில சுரப்பைப் போக்குவத ற்கு எங்கும் செல்லவேண்டாம் . அதனை சரி செய்ய பல இயற் கை முறைகள் உள்ளன. அவை களைப் பின்பற்றி வந்தாலே, அமிலசுரப்பை எளிதில் குணப் படுத்தலாம்.
தண்ணீர் 
தினமும் காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் இரண்டுகோப் பை தண்ணீர் குடித்து வந்தால், அமில சுரப்பு வராமல் தடுக்கலாம்.
முட்டைகோஸ்
இதன் சாறை நாள்தோறும் அருந்தி வந்தால் அமில சுரப்பில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
மோர்
மோருடன் ஒரு மேசை கரண்டி கொத்து மல்லி சாறு கலந்து தினமும் குடித்து வந்தால், அமில சுரப்பு க்கு நல்ல தீர்வு கிடைக்கும்.
கிராம்பு
கிராம்பு மிகவும் காரமாகத்தான் இருக்கு ம். இருப்பினும் அதனை வாயில் போட்டு மென்று சாப்பிட்டால், அமில சுரப்பு பிரச்ச னையைப் போக்கலாம்.
தேன் மற்றும் ஆப்பிள்
உணவு உண்ணுமுன் ஒரு மேசை கரண்டி தேனுடன், இரண்டு மேசை கரண்டி ஆப்பிள் சாறு கலந்து குடித்தால், அமில சுரப்பு வராமல் தவிர்க்கலாம்.
புதினா சாறு
உணவைச் சாப்பிட்டு முடித்தபின், கொதிக்கு ம் நீரில் புதினா இலையைப்போட்டு கொதி க்கவிட்டு, பின்குளிர வைதது குடித்தால், அமில சுரப்புக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக் கும்.

இளநீர்
பல மருத்துவ குணம் கொண்ட இளநீரை, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் அமில சுரப்பு குணமடையும்.
வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. அத்தகைய வெள்ளரிக்கா யை தினமும் சாப்பிட்டு வந்தால், அமில சுரப்புக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.
துளசி இலை
அமில சுரப்பு, வாயுதொல்லை, குமட்ட ல் போன்றவற் றிற்கு துளசி இலை ஒரு சிறந்த நிவாரணி யாகும்.

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...