Friday, January 9, 2015

கொள்கை பிடிப்பில் உறுதியானவர் யார்? பெரியாரா…! அண்ணாவா…!

கொள்கை பிடிப்பில் யார் உறுதியானவர் பெரியாரா… அண்ணாவா … நிச்சயம் பகுத்தறிய வேண்டிய விஷயமே. எல்லா வரலாறுகளையும் கேள்விக்குட்ப டுத்துவது நல்லது. “மனிதகுல வரலாற்றில் நிகழும் நிகழ்ச்சிகள் எல்லாம் உண்மைகளை மட்டுமே எடுத்துரைத்து தொகுக்கப்பட்ட வர லாறுகள் என்பது, எப்போதுமே உண்மையா ய் இருப்பதில்லை. வரலாற்றை யார் யார் எழுதுகிறார்கள் என்பதைப் பொறுத்து உண் மைகள் மாறுபடுகின்றன” என்பது ஹங்கேரி ய சிந்தனையாளர் மான்ஹீம் கூறிய பொன்மொழி, சத்திய மான வார்த்தை.
ஏன் இதை இங்கே சொல்கிறோம் என்றால் – தமக்கு சாதகமானவைகளையே தொகுத்து, துதிபாடி யே தம் தலைவர்களின் வரலாறு எழுதப்படுகிறது. தமது மோசமான செய்கைகளை மறைக்கப்பட ப்ரயத் தனப்படுகிறார்கள். அதற்கு காந்தியா ரும் விதிவிலக்கல்ல. பெரியாரும் விதிவிலக்கல்ல. காந்தியை பற்றி நாம் பள்ளி யில் படித்ததற்கு மாறாக – இன்று பல உண்மைகள் வெளிச்சத் திற்கு வருகிறது. சரி… இந்த விஷய த்தில் பெரியார் எப்படி. எல்லா தரப்பு கருத்துகளையும் வாசித்து முடித்த பிறகு தான், ஒருவரை “மகாத்மா” என்றோ, “பகுத்தறிவு பகலவன்” என்றோ அழைக்க முடியும்.
“வரலாறுகள் எல்லாமே வெறுமனே எழுதி வைக்கப்பட்ட விஷயங்கள் மட்டுமல்ல. அதேபோ ல் எழுதி வைக்கப்பட்டவை எல்லாமே மிகச் சரியான செய்திகளாகவும் இருக்கத் தேவையுமில்லை, காலம், சூழல், வசதி, வாய்ப்பு என்று பல காரணிகள் – எழுதி வை க்கப்பட்டவைகளில் உண் மையும் பொய்மையும் கல ந்தே வைக்கும். அதோட ன்றி, காது வழிச் செய்திகளாக பல காலம் இருந்து வந் தவைகளும், தொகுக்கப்பட்டவைகளும், வரலாற்றின் பின்னால் கிடைக்கும். இது போன்ற சான்றுகளும் வரலாற்றின் மூலங்களாக நமக்குக் கிடைக்கின்றன” என்று மூத்த படைப்பாளி மற்றும் பேராசிரிய ர் ஒருவரின் அனுபவம் பேசுகிறது.

உற்று நோக்கினால் இதிலுள்ள உண் மைகள் பிடிபடாமல் போகாது. அந் த வகையில் உலகில் எல்லாவற் றையும் தம் அறிவு கொண்டு சிந்தி த்தாலே சரியான முடிவுக்கு வர முடியும். கீழ்க்காணும் கட்டு ரையை வாசித்து முடிக்கையில் – கொள்கை பிடிப்பில் பெரியார் கொண்டிருந்த உறுதியை நினைத்து இறுமாப்புடன் இருந்தவர்களின் இறுமாப்பு சடசட வென்று கலைகிறது. “சே… இவ்வள வுதானா” என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை. “அண்ணா வை நினைத்து வியக்காமல் இருக்க முடியவில்லை” . வாசியுங் கள். மனச் சான்றுக்கு மாறாகப் போகாமை” என்கிற தலைப்பில் டாக்டர். அண்ணா பரிமளம் அவர்கள் எழுதிய கட்டுரை இது.
 1941-ஆம் ஆண்டில், இராசா சர். அண் ணாமலைச் செட்டியாரின் அறுபதாம் ஆண்டு நிறைவு விழா, மிகப் பெருஞ் செலவில், மிக ஆடம்பரமான முறையி ல் செட்டி நாட்டிலும், அண்ணாமலை நக ரிலும் கொண்டாடப்பட்டது. இரண்டு இடங்களிலும் இயல், இசை, நாடகம், நடனம் போன்ற பல்வேறு அரங்கங்களு ம், தான தருமங் களும் நடைபெற்றன.
தான தருமங்கள் எல்லாம் பெரும்பாலு ம் பார்ப்பனர்க்கே வழங்கப்பட்டன. அறு பதாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் அறிகுறியாக பார்ப்பனர்களுக்கு அறுபது வீடுகள், அறுபது அடுக்கு, வீட்டு சாமான்கள், அறுபது அம்மி ஆட்டுக்கற்கள், அறுபது பசு மாடுகள் போன்ற இன்னபிறவற்றை இராசா சர் தானமாக வழங்கி னார்.
அப்பொழுது அறிஞர் அண்ணா அவர்கள் சென்னையில் விடுதலைஇதழின் ஆசிரியராகப் பணி யாற்றி வந்தார்கள். பார்ப்பன ர்க்குத் தானம் கொடுத்தல் என்னும் குருட்டு நம்பிக்கை யான மூடப்பழக்க வழக்கத் தைக் கண்டிக்கவேண்டும் என்பதோடு, பார்ப்பனரல்லா தான் இயக்கத்தைச் சார்ந்த இராசா சர் சமூகத் துறையில் பார்ப்பனர்க்கு அடிமைபோகு ம் தன்மையையும் வன்மையாகக் கண்டிக்க வேண்டும் என்ற எண் ணம் அறிஞர் அண்ணா அவர்கள் உள்ள த்தைக் குடைந்து கொண்டி ருந்தது.
அண்ணாமலைச் செட்டியாரின் போக்கைக் கண்டித்து விடுதலையி ல் தலையங்கம் ஒன்று ஏபதுவது என்று அண்ணா அவர்கள் எண் ணினார்கள். இந்த எண்ணத்தைப் பெரியார் அவர்களிடம் வெளியி ட்டார்கள். பெரியார் அவர்களுக் கு அப்பொழுது அண்ணாமலைச் செட்டியாரிடத்தில் மிக்க சினம் பொங்கி எழுந்திருந்தது. இராசா சர் அறுபாதாம் ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி யார் யாருக்கோ ஏராளமான நிதி வழங்கியதோடு, தேசீயப் பத்திரிகைகளுக்கு மிகக நிதி வழங்கியிருந்தார். விடுத லைக்கு ஏதொரு உதவியும் புரியவில்லை. இது பெரியாருக்கு மிக் க சினத்தை மூட்டியது. எனவே அண்ணாவின் எண்ணத்தைப் பெரி யாரும் ஆதரித்தார்.
யார் யாருக்கோ கொள்ளை கொள்ளையாகப் பணம் கொடுக்கிறா ன். பார்ப்பனர்களுக்கு நன் கொடை தந்திருக்கிறான். பார்ப்பனர்களு க்கு இலட்சம் இலட்சமாக அள்ளித் தருகி றான் அவனை ஓயாமல் திட்டிக்கொண்டிருக்கிற தேசீ யப் பத்திரிகைகளுக்கு நன் கொடை தந்திருக்கிறான். நாம் ஒரு பத்திரிகை வைத்து நடத்துகிறோம்.
தேவையான பொழுதெல்லா ம் அவனுக்கு ஆதரவு தருகி றோம். அப்படி இருந்தாலும், நமது பத்திரிகையைக் கவனிக்காமல் இருக்கிறான் என்றால் என்ன நியாயம்? அவனது அடிமைத்தனத் தைக் கண்டித்து எழுதுங்கள்! என்னும் கருத்துப்பட பெரியார் அவர் கள் அண்ணாவிடம் கூறினார்கள்.
அண்ணா அவர்களும் அண்ணாமலைச் செட்டியாரின் போக்கைக்காரசாரமாகக் கண்டித்துத் தலையங்கம் ஒன்று தீட்டி னார்கள். தலையங்கம் தீட் டி அச்சேற்றுவதற்குள், எதி ர்பாராதவிதமாக இராசாச ர் அண்ணாமலைச் செட்டி யாரிடமிருந்து விடுதலை க்கு என்று ரூ.1000 நன்கொ டை செக் வந்து சேர்ந்தது. செக்கை எடுத்துக் கொண் டு பெரியார் அவர்கள் அண்ணாவிடம் வந்து பைத்தியக்காரன் இப் பொழுது ரூ.1000-க்குச் செக் அனுப்பியிருக்கிறான். கண்டித்துச் தலையங்கம் தீட்டிவிட்டீர்களா? என்று கேட்டார். முன்பே எழுதி க்கொடுத்துவிட்டேன். அச்செறும் நிலையில் இருக்கிறது என்று அண்ணா கூறினார்கள். அவனை ச் சாதாரணமாகப் பாராட்டி ஒரு தலையங்கம் எழுதுங்கள் என்று பெரியார் அவர்கள் அண்ணாவி டம் கூறினார்கள்.
அண்ணா அவர்கள் அவரது போக் கைக் கண்டித்து நான் எழுதிவிட் டேன். பாராட்டி எழுத என் மனம் இடந்தரவில்லை. வேண்டுமானால் நீங்கள் எழுதுங்கள்; நான் எழு தமாட்டேன் என்று உறுதியாக விடையிறுத்துவிட்டார்கள். பெரி யார் அவர்கள் எவ்வளவோ வற் புறுத்தியும் அண்ணா அவர்கள் பாராட்டி எழுத மறுத்துவிட்டார்கள். பிறகு அண்ணாவின் தலையங்கத்தை நிறு த்திவிட்டுப் பெரியாரே ஒன்று எழுதி வெளியிட்டார்கள்.
மனச்சான்றுக்கு மாறாக போ கக்கூடாது என்பதிலே அண் ணா அவர்கள் எவ்வளவு அழுத்தமாக இருந்து வருகி றார்கள் என்பதற்கு, இது சீரியதொரு எடுத்துக்காட்டா கும். “மனச்சான்றுக்கு மாறா கப் போகாமை” என்கிற த லைப்பில் டாக்டர். அண்ணா பரிமளம் (மன்றம்: 15.06. 1956) எழுதிய கட்டுரை இது.
பணமென்றால் பிணமும் வாயை திறக்கும் என்பார் கள். பணம் பாதாளம் வரை பாயும் என்பார்கள்,  அப்படிப்பட்ட உலகில் மனித ர்களை குற்றம் சொல்லக்கூடாது தானோ?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...