Sunday, January 11, 2015

‘தாலி’ சரடில் உள்ள‍ ஒன்பது இழைகளும்! அவற்றின் தத்துவங்களும்! – அரிய தகவல்

தாலி சரடில் உள்ள‍ ஒன்பது இழைகளும்! அவற்றில் உள்ள‍ ஒன்பது தத்துவங்களும்! – அரிய தகவல்
ஆரம்பத்தில் தமிழர் திருமணங்களில் தாலி இருந்த தாக, இலக்கியங்களில்
குறிப்பிடப்படவில்லை.
இந்துக்களிடையே மஞ்சள் நிறம் என்றாலே அது புனித மான நிறம் என்றே கருத்து ஆழ மாக பதிந்துள்ள‍து. திருமணப் பரி சும் மஞ்சள் நிறத்தில் தரப்பட்டது என்று விளக்குகிறார்கள்
சங்ககாலத்தின்போது நடந்த திருமணங்களில்  பரப்பி, விளக்கு ஏற்றி, வயதில் மூத்த பெண்கள், மணப்பெண் ணைநீராட்டி வாழ்த்தி அவள் விரும்பிய வனுடன் அவளை ஒப்படைத்தனர். நாளடைவி ல் ”தாலம்” என்றபெயர்தான் தாலியாக மாறியிருக்கிறது. பதினோராம் நூற்றாண்டில்தான் திருமணச் சின்னம் என்ற ரீதியில் தாலி என்ற பெயர் உபயோகப்படுத்தப் பட்டது என்கிறது உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டிருக்கும்“தமிழர் திருமணம்” என்கிற புத்தக ம். மாங்கல்யச் சரடானது ஒன்பது இழைகளைக் கொ ண்டது.
ஒவ்வொரு இழைகளும் ஒவ்வொரு நற்குணங்களைக் குறிக்கிறது.
1.தெய்வீகக் குணம்
2.தூய்மைக் குணம்
3.மேன்மை & தொண்டு
4.தன்னடக்கம்
5.ஆற்றல்
6.விவேகம்
7.உண்மை
8.உள்ளதை உள்ளபடி புரிந்து கொள்ளுதல்
9.மேன்மை
இந்த ஒன்பது குணங்களும் ஒரு பெண்ணிடம் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஒன்பது இழைகள் கொண்ட திரு மாங்கல்யச்சரடு (தாலி சரடு) அணிவிக்க‍ப்படுகிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...