Sunday, January 18, 2015

லிங்க வடிவில் காட்சித் தரும் சனீஸ்வரர்!

ஆதிகாலத்தில் சிவ வழிபாடும், திருமால் வழிபாடுமே மிகப் பிரதா னமாக இருந்தன. சோழர்கள் கட்டிய ஆலயங்களில் நவக்கிரங்க ளுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை. வைணவ ஆலயங்களி லும் அந்த நிலையே அக்காலத்தில் இருந் தது. பல ஆண்டுகளுக்கு முன்பு திருவரங் கத்தில் நவக்கிரங்களை வழிபட ஏற்பாடு கள் செய்யப்படவில்லை. ஆனால், இப் பொழுது சக்கரத்தாழ்வார் சன்னதியில் நவக்கிரகங்களை வழிபட ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
எல்லாக் கோள்களும், உலகில் உள்ள எல் லா உயிரினங்களும் சிவன் மற்றும் நாரா யணனின் கட்டுப்பாட்டில்தான் இயங்குகி ன்றன. எனவே அவ்விருவரை வணங்கி னாலே போதும் என்று ஆதிகாலத் தமிழர்கள் எண்ணினர். ஆனால், பிற்காலத்தில் திருஞானசம்பந்தர் காலத்திலிருந்து நவக்கிரக வழி பாடு மேன்மை பெற்றது. அவர் அருளிய கோளறு பதிகம் நவக்கிரக வழிபாட்டைச் சிறப்பிக்கிறது.
நவக்கிரகங்களில் ஒன்றான சனியை சனீஸ்வரன் என்று அழைப் பார்கள். அவன் ஈஸ்வரனையே சில காலம் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததால் அப்பெயர் ஏற்பட்டது. திருநள்ளாறு சனீஸ்வரன் சன்னதியும், குச்சனூர் சனீஸ்வரன் சன்னதியும் மிகவும் பிரபலமாக விளங்குகின்றன. சில ஆலயங்களில் நவக்கிரகங்கள் தங்களின் நாயகிகள் மற்றும் வாகனங்களுடன் காட்சி தருகிறார்கள். கங் கைகொண்ட சோழபுரத்திலுள்ள சிவாலயத்தில் நவக்கிரகங்களை ஒரே கல்லில் வெகு சிறப்பாக வடிவமைத்துள்ளனர்.
யந்திர சனீஸ்வரர் : காகத்தை வாகனமாகக் கொண்ட சனீஸ்வரர் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள காரிகைக் குப்பம் என்ற சிற் றூரில் வேறெங்கும் காண முடியாத வகையில் லிங்க வடிவில் காட்சியளிக்கிறார். ஆலயக் கருவறையில் லிங்க வடிவில் சனீஸ்வ ரன் காட்சியளிப்பது அந்த ஆலயத்தின் தனிச் சிறப்பு.
மூலவரின் மேனியில் யந்திரம் பொருத்தப்பட்டுள்ளதால் லிங்க வடி வில் காட்சித் தரும் அவரை யந்திர சனீஸ்வரர் என்றும் கூறுகிறார்க ள். ஆறடி உயரமும், இரண்டரை அடி அகலமும் உள்ள அந்த யந்திர சனீஸ்வரர் தாமரைப் பீடத்தில் நின்று கிழக்கு நோக்கிக் காட்சியளி க்கிறார் என்பதும் அந்த ஆலயத்தின் மற்றொரு சிறப்பு. யந்திர சனீ ஸ்வரர் நின்றிருக்கும் பீடத்தில் மகாலட்சுமி யந்திரமும், ஆஞ்சநே யர் யந்திரமும், சனியின் தாயாரான சாயா தேவியின் யந்திரமும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. கண்களைக் குறிக்கும் வகையில் வலதுபுறம் சூரியனும், இடதுபுறம் பிறைச் சந்திரனும் பொறிக்கப்பட் டுள்ளனர்.
வாகனமாகிய காகம் இவை இரண்டிற்கும் இடையில் பொறிக்கப் பட்டுள்ளது. மார்புப் பகுதியில் அறுகோண யந்திரம் உள்ளது. சிவன், திருமால், பிரம்மா ஆகிய மும்மூர்த்திகள் அரூப வடிவில் உள்ளனர். மொத்தத்தில் எல்லாவகைச் சிறப்பு அம்சங்களும் கொண்டவராக யந்திர சனீஸ்வரர் விளங்குகிறார்.
ஆலய அமைவிடம் : ஆலயம் சுமார் அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியை ஆண்ட சம்புவராய மன்னர்களால் கட்டப்பட்ட து. சம்புவராய மன்னர்களின் படைத் தளபதி ஒருவர் அந்த வழியாக த் தன் படைகளுடன் சென்ற பொழுது விபத்து ஏற்பட்டு அந்த ஆலய ம் உள்ள இடத்தில் விழுந்துவிட்டார். உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. அப்பொழுது உனக்குச் சனிதோஷம் இரு ப்பதால் இந்த விபத்து ஏற்பட்டது.
உன்னுடைய சனிதோஷத் திற்குப் பரிகாரமாக இந்த இடத்தில் சனீஸ்வரர் சிலை யை மூல மந்திரத்துடன் பிர திஷ்டை செய்து ஆலயம் கட்டவும் என்று அசரீரி கூறியது. உடனே அந்தத் தளபதி, மன்னரிடம் சொல்ல, மன்னரின் அனுமதியுடன் லிங்க வடிவில் மூல மந்திரத்துடன் சனீஸ்வரர் சிலையைப் பிரதிஷ் டை செய்தார்.
மன்னராட்சியில் அந்த ஆலயம் மிகப் பிரபலமாக விளங்கியது. மன் னராட்சி மறைந்து அன்னியர் ஆட்சியில் அந்த ஆலயம் பொலிவிழ ந்து சரிவரக் கவனிக்கப்படாமலிருந்தது. அதன்பின்பு பல ஆண்டு கள் அவ்வூர் மக்களின் கவனிப்பில் இருந்தது. பின்னர் அது ஒரு தனி ப்பட்டவரின் கட்டுப்பாட்டிலிருந்தது.
புகழ்பெற்ற கணபதி ஸ்தபதி அவர்களின் ஆலோசனைப்படியும், கேரளாவிலுள்ள உன்னிகிருஷ்ணன் என்பவரின் ஆலோசனைப் படியும் பழைய ஆலயம் இருந்த இடத்திற்கு வெகு அருகில் நேர் மேற்கே ஆலயம் சிறப்பான முறையில் முறையாகக் கட்டப்பட்டு ள்ளது. வேறு எந்த சனீஸ்வரர் ஆலயத்திலும் காணாத வகையில் யந்திர சனீஸ்வரர் மேற்குக் கோபுரம் இல்லாமல் திறந்தவெளியில் நின்று காட்சியளிக்கிறார்.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆரணியிலிருந்து சந்த வா சல் செல்லும் வழியில் 10 கி.மீ. தொலைவில் உள்ள ஊர் ஏரிக் குப் பம். அந்த ஊருக்குத் தெற்கே 1 கி.மீ. தொலைவில் உள்ள காரிகைக் குப்பம் என்ற சிற்றூரில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. வேலூரி லிருந்து போளூர் செல்லும் பிரதான சாலையில் உள்ள சந்தவாசல் என்ற இடத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து ஆரணி செல்லும் வழியில் 5 கி.மீ. தொலைவில் உள்ளது ஏரிக் குப்பம். நகரப் பேருந்து வசதி உள்ளது. சனிக்கிழமைகளில் ஷேர் ஆட்டோ வசதி உண்டு.
பாஸ்கரத் தீர்த்தம் : சனியின் தந்தை சூரியன். சூரியனை பாஸ்கரன் என்றும் அழைப்பர். அந்த ஆலயத்தின் அருகில் மேற்குத் திசையில் உள்ள தீர்த்தத்தின் பெயர் பாஸ்கரத் தீர்த்தம். அந்தத் தீர்த்தத் திலிருந்து கொண்டு வரும் தீர்த்தத்தில் தான் சனிபகவானுக்கு அபிஷேக ம் செய்கின்றனர். அந்த அபிஷேகத் தீர்த்தம் சனி மற்றும் சூரிய தோஷங்களைத் தீர்க்கவல்லது என்பது ஐதீகம்.
சனிக்கிழமை சனிபகவானுக்கு உகந்த நாளாகக் கருதப்படுவதால், அன்று பக்தர்களின் வருகை அதிகமாக உள்ளது. ஒரு சனிக்கிழமை நான் அங்கு சென்றபொழுது அந்த ஆலயத்தின் பிரதான அர்ச்சகர் ராஜராம் குருக்கள் அந்த ஆலயத்தின் சிறப்பம்சங்களை விளக்கி னார்.
மற்ற எல்லா ஆலயங்களின் சனி சன்னதிகள் மேற்கு நோக்கி உள் ளன. ஆனால், யந்திர சனீஸ்வரர் கிழக்கு நோக்கிக் காட்சியளிக்கி றார். பழைய ஆலயத்திலிருந்த யந்திர சனீஸ்வரர் சிலையை ஆய்வு செய்த தொல்லியல் துறையினர் அதில் சனீஸ்வரர் மூலமந்திரம் பொறிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளனர்.
மேலும் அவர்கள் அந்தச் சிலையைப் பற்றியும், அதிலுள்ள மந்திரம் பற்றியும் அமெரிக்காவிலுள்ள நாசா விண்வெளிக் கழகத்திற்கு விரிவான தகவல்கள் அனுப்பினர். அந்தத் தகவல்களைப் பரிசீலித்த நாசா விண்வெளிக் கழக நிபுணர்கள் சனிக்கிரத்தின் வடதுருவமு ம், அந்தச் சிலை உள்ள இடத்தில் உள்ள யந்திர சனீஸ்வரரின் மூல மந்திர பிரதிஷ்டையும் நேர்கோட்டில் இருப்பதாகவும் தெரிவித்துள் ளனர்.
எல்லாவித நோய்களிலிருந்து நிவாரணம் பெறவும், குடும்பச் சிக் கல்களைப் போக்கவும், வியாபார அபிவிருத்தி, கல்வியில் முன் னேற்றம், வேலைவாய்ப்பு, திருமணம் கைகூடல், கடன் பிரச்சினை, பிள்ளைப் பேறு, எதிரிகளின் பில்லி, ஏவல், சூன்யம் போக்குதல், விவசாய முன்னேற்றம் என அனைத்திற்கும் யந்திர சனீஸ்வரரை வணங்கினால் பலன்கள் நிச்சயம் கிடைக்கும்.
புதிய தொழில் தொடங்குபவர்கள், வழக்கில் சிக்கி அவதிப்படுபவர் கள், புதிய கணக்குத் தொடங்குபவர்கள், வீடு கட்டுபவர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து அவற்றிற்குரிய ஆவணங்களை யந்திர சனீஸ் வரர் மடியில் வைத்து வணங்குகின்றனர். பூசை நேரம் : நாள்தோ றும் காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரையும் ஆலயம் திறந்திருக்கும். சனிக்கிழ மைகளில் பக்தர்களின் வருகை அதிகமாக இருப்பதால் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை ஆலயம் திறந்திருக்கும்.
சனிக்கிழமைகளில் சனி ஓரை நேரமான காலை 6 மணி முதல் 7 1/2 மணி வரை அபிஷேகம் நடைபெறும். பின்னர் யாகசாலையைச் சுத்தம் செய்து, கலசத்தில் தீர்த்தத்தை எடுத்து வந்து வைத்துக் கலச த்தை அலங்கரிப்பர். விநாயகர் பூசை நடைபெறும். பின்னர் சனீஸ் வரர் மூலமந்திரத்தை ஓதி, கலசத்திற்குப் பூசை செய்து தீபாரா தனை செய்வர்.

மீண்டும் யந்திர சனீஸ்வரருக்கு அபிஷேகம் செய்வர். சனிப்பெயர்ச்சியின்
போது திருநள்ளாறு சனீஸ்வரர் ஆலயத்தில் செய்வது போலச் சிறப்பு பூசைகள் செய்வர்.
சில ஆண்டுகள் இந்த ஆலயம் தனியார் ஒருவரி ன் கட்டுப்பாட்டிலிருந்தது. கடந்த ஒன்றரை ஆண் டுகளாக இந்த ஆலயம் இந்து அற நிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.



No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...