Wednesday, January 7, 2015

ஃபேஸ்புக்கில் தவிர்க்க வேண்டிய 7 முக்கியமான தவறுகள்

ஃபேஸ்புக் தளத்தை பாதுகாப்பாக பயன்படுத்த, தவிர்க்க வேண்டிய 7 முக்கியமான தவறுகள்/செயல் களை பட்டியலிட்டிருக்கிறார்கள் சி ல வலைப்பின்னல் துறை வல்லு னர்கள். அவை….
1. சுலபமான ஒரு கடவுச்சொல்லை பயன்படுத்துவது (Using a Weak Password)
பெயர்கள், களஞ்சியத்தில் உள்ள சில சுலபமான வார்த்தைகள், அவ ற்றுக்கிடையில் எண்களை சேர்த்து பயன்படுத்துவது போன்றவற்றை உங்கள் கடவுச்சொல்லாக பயன்படுத்துவதை தவிர்த்தல் அவசிய ம்! அதற்க்கு பதிலாக, பெரிய மற்றும் சிறிய எழுத்துக்களுடன் (upper- and lower-case letters) எண்கள் மற்றும் குறியீடுகளை (symbols) கடவுச்சொல்லாக பயன்படுத்துவது மிகவும் உறுதியா னது! ஒரு கடவுச்சொல் குறைந்தது 8 எழுத்துக்களைக் கொண்டிரு த்தல் நலம். மற்றுமொரு வழி, ஒரு வார்த்தையின் நடுவில் எண் கள்/குறியீடுகளை சேர்த்து கடவுச்சொல்லாக பயன்படுத்துவது மிகவும் சிறந்தது. உதாரணமாக, “houses” என்னும் வார்த்தையை hO27usEs என்று மாற்றிப் பயன்படுத்துவது!
2. உங்களின் முழு பிறந்த தேதியை வெளிப்படையாக குறிப்பிடு வது (Leaving Your Full Birth Date in Your Profile)
இணையத்தில் உலவும், அடையாளத் திருடர்களுக் கு (identity thieves), ஒரு வரின் பிறந்ததேதிதான் முத ன்மையான இலக்கு. அதைத் திருடி என்ன செய்வாங்கன் னு கேக்குறீங்களா? உங்க பிறந்த தேதியை வச்சி, உங்களின் மேலதிக தகவல்களை சேகரி த்து, உங்க வங்கி கணக்கு/க்ரெடிட் கார்டு கணக்கு போன்றவற்றை கட த்தக் கூடும்?! அய்யய்யோ…அப்படீன்றீங்களா? சரி சரி, உடனே உங்க ஃபேஸ்புக் கணக்கை  திறந்து, profile  பக்கத்துக்கு போய், Info tab-அ கிளிக் பண்ணி, Basic Information பகுதியில வெறும் பிறந்த தேதி மட்டும்/மாதம் மட்டும் இல்லைன்னா பிறந்ததேதியே குறிப் பிடாம விட்டுடுங்க. சரிங்களா?!.
3. சுய பாதுகாப்பு கட்டுப்பாடு வாய்ப்புகளை அலட்சியப்படுத்துவது (Overlooking Useful Privacy Controls)
உங்க ஃபேஸ்புக் பக்கத்துல, மத்தவங்களுக்கு தொடர்பு வழங்க நண் பர்கள் மட்டும் (only friends) நண்பர்களின் நண்பர்கள் மட்டும் (friends of friends) அல்லது நீங்கள் மட்டும் (yourself) இப்படி பல கட்டுப்பாடுகள் வச்சிக் கலாம். இந்தப் பக்கத்துல, உங்க படங்கள், பிறந்த தே தி, மத பார்வை மற்றும் குடும்ப விவரங்கள், இது எல் லாத்தையும் மேற்குறிப்பிட்டபடி ஒரு வகையான கட்டுப்பாட்டுக்குள் வைங்க! மிக முக்கியமா, உங்க  தொலைபேசி எண், முகவரி போன்ற தொ டர்பு விவரங்கள மத்தவங்க பார்க்குற மாதிரி வை க்கா தீங்க!!
4. உங்களின் குழந்தையின் பெயரை புகைப்பட தலைப்புகளாக பயன்படுத்துவது (Posting Your Child’s Name in a Caption)
உங்க குழந்தைங்க பெயரை பட ங்களின் தலைப்புகளாகவோ, குறி யீடுகளாகவோ (photo tags) பயன் படுத்துவதை தவிர்ப்பது நல்லது. வேறு யாராவது உங்க குழந்தை ங்க பெயரை பயன்படுத்தியிருந் தா, Remove Tag என்னும் தொட ர்பை அழுத்தி நீக்கிடுங்க இல்லை ன்னா அவங்கள நீக்கச் சொல்லு ங்க!
5. நான் வெளியூருக்குச் செல்கி றேன் என்று குறிப்பிடுவது (Mentioning That You’ll Be Away From Home)
அதாவது, வெளியூருக்குச் செல்வ தாயிருந்தா, “no one’s home” அப்ப டீங்கிற மாதிரியான விஷயங்கள எழுதுவதை தவிர்த்திடுங்க! நீங்க திரும்பி வந்து உங்க சுற்றுலா எப் படி இருந்ததுன்னு சொல்லிக்கலா ம். அதேமாதிரி சுற்றுலா செல்லும் தேதியை மறந்தும் குறிப்பிடாதீ ங்க!!
6. கூகுள் போன்ற தேடியந்திரங்க ளின் பார்வையில் இருப்பது (Letting Search Engines Find You)
பரிச்சயமில்லாதவர்கள் உங்கள் ஃபேஸ்புக் பக்கங்களை, கூகுள் போன்ற தேடியந்திரங்கள் மூலம் அடைவதை தவிர்க்க, ஃபேஸ் புக் கின் சுயபாதுகாப்பு பகுதிக்குள் இருக்கும் தேடுதல் பகுதியில் (Search section of Facebook’s privacy controls) நண்பர்கள் மட்டும் என்பதை தேர்ந்தெடுங்கள் (select Only Friends for Facebook search results). முக்கியமா பொதுத் தேடுதல் முடிவகள் என்பதை தேர்ந் தெடுக்காமல் இருக்கிறதா என்று உறுதிபடுத்திக்கொள்ளுங்கள்! (Be sure the box for public search results isn’t checked)
7. மேற்பார்வையில்லாமல் குழந்தைகளை ஃபேஸ்புக் தளத்தை பயன்படுத்த அனுமதிப்பது (Permitting Youngsters to Use FacebookUnsupervised)
இதுவரைக்கும் பார்த்ததி லேயே ரொம்ப முக்கிய மானது இதுதான்! அதா வது, ஃபேஸ்புக் பக்கம் 13 வயது மற்றும் அதற்க்கு மேற்பட்ட வர்கள் மட்டு மே ஃபேஸ்புக்கை பயன்ப டுத்தவேண்டும் என்று வி தி முறைப்படுத்தியிருந்தாலும், 13 வயதுக்கு குறைவானவர்களும் பயன்படுத்துகிறார்களாம். இவ்வயதுக்குட்பட்ட உங்க குழந்தை  /குழந்தைகளும் ஃபேஸ்புக்கை பயன்படுத்தும் பட்சத்தில், அவர்க ளை மேற்பார்வையிட மிகவும் சுலபமான வழி, அவர்களின் நண் பர்களில் ஒருவராகச் சேர்ந்து கொண்டு, அவர்களின் தொடர்பு மின்னஞ்சல் பகுதியில் உங்கள் மின்னஞ்சலைக் கொடுத்து, அவர் களுக்கு வரும் தகவல்கள் உங்க ளுக்கு வரும்படியாக செய்து கொ ள்வதுதான்!
“குழந்தைகள் தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் தாங்கள் எழுதும் சில வற்றை பெரிதாக எடுத்துக்கொள் வதில்லை” என்கிறார், இணைய தளத்தின் குற்றப்புகார் மைய மேற்பார்வையாளர் சார்லஸ் பேவலிட்ஸ் (Charles Pavelites, a supervisory special agent at the Internet Crime Complaint Center). உதாரணமாக, “அம்மா வர நேர மாச்சு, நான் சீக்கிரம் வீட்டைச் சுத்தப்படுத்தியாகனும்” அப்படீன் னு எழுதும் ஒரு குழந்தைக்கு, தினமும் தம் பெற்றோர் அலுவலகம் செல்லும் அல்லது வீடு திரும்பும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை,  தங்களையறியாமலேயே ஃபேஸ்புக் தளத்தில் குறிப்பிடுகிறார்கள் என் று உணர்வதில்லை அப்படீங்கிறாரு சார்லஸ். இதுல இருக்குற சாதக பாத கம் என்னன்னு உங்களுக்குப் புரிஞ்சிருக் கும்னு நென க்கிறேன்.
இப்படி இன்னும் நிறைய விளக்கங்கள எழுதிக்கிட்டே போகலா முங்க. அதனா ல, இந்தப்  குறிப்பிட்டிருக்கிற 7 தவறுகளை முடிஞ்ச வரைக்கும் செய் யாமப் பார்த்துக்குங்க!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...