Wednesday, January 14, 2015

காளகஸ்தி கோவிலில் கருணாநிதி குடும்பத்தினர்.

கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி தோல்வி அடைந்தது. அக்க ட்சியால் எதிர்க்கட்சி அந்தஸ்தைகூட பெற முடியாத நிலை ஏற் பட்டது. இதே சமயத் தில் ஸ்பெக்ட்ரம் மு றைகேடு தொடர்பாக கனிமொழி கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி செய்யப் பட்டன. இதனால் அவர் தொடர்ந்து சிறையில் அடைக்கப் பட்டார்.  
இந்நிலையில் கருணாநிதி, மு.க.ஸ்டாலின், கனிமொழிஆகியோருக்கு காளக ஸ்தி கோவிலில் ராகு -கேது தோஷ சர்ப்ப நிவாரண பூஜை நடத்த கருணாநிதி மகள் செ ல்வி முடிவு செய்தார். இதன்படி அவர் தனது குடும்பத்தினருடன் சென்னை யில் இருந்து காரில் புறப்பட்டார்.
முதலில் கருணாநிதி குடும்பத்தினர் திருப்பதி கோவிலுக்கு சென்றனர். அங்கு வி.ஐ.பி. வரிசை யில் சென்று ஏழுமலையானை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர்.   பின்னர் அங்கிருந்து புறப்பட்டு காளகஸ்தி வாயு லிங் கேஸ்வரர் கோவிலுக்கு சென்றனர். அங்கு சென்றதும் செல்வி உள்ளிட்ட அனை வரு ம் மிருத்யுஞ்ஜெயலிங்கம் முன்பு அமர்ந்தனர்.
கருணாநிதி, மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் பெயர் களில் ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜை நடத்தினர். இந்த தோஷ நிவாரண பூஜை முடிந்ததும் அவ ர்கள் கோவிலு க்குள் சென்று கருவறையில் உள்ள வாயு லிங்கேஸ்வரர், ஞான பிரசுனாம்பிகா தாயா ருக்கு கருணாநிதி, மு.க. ஸ்டாலின், கனிமொழி பெயர் களில் சிறப்பு பூஜை, அர்ச்ச னை செய்து பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர். அதன்பிறகு அவர்கள் மிருத்யுஞ் ஜெயலி யங்கம் அருகே சென்று வேத பண்டிதர்களிடம் சிறப்பு ஆசி பெற்றனர்.  
காளகஸ்தி கோவிலில் கரு ணாநிதி குடும்பத்தினர் ராகு- கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜை நடத்துவதை அறிந்த தும் பத்திரிகை புகைப்பட நிபுணர்கள் மற்றும் தனியார் டி.வி. வீடியோகிராபர்கள் அங்கு மின்னல் வேகத்தில் வந்தனர். தோஷ நிவாரண பூஜை நடத்திய செல்வி மற்றும் உறவின ர்களை பத்திரிகை புகைப்பட நிபுணர்கள் படம் பிடித்தனர்.
அப்போது செல்வி புடவையால் முக த்தை மூடிக்கொண் டார். அவருடன் வந்தவர்கள் புகைப்பட நிபுணர்கள் போட்டோ- வீடியோ எடுக்ககூடாது என்று எச்சரித்தனர். ஆனால் அதை யும் மீறி போட்டோ எடுத்தனர். இத னால் புகைப்பட நிபுணர்களுக்கும் கருணாநிதி குடும்பத்தினருக்கும்  கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையறிந்ததும் வேத பண்டிதர்கள் அங்கு ஓடிச் சென்று இருதரப்பினரிடமும் சமரச பேச்சு வார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். காளகஸ்தி கோவிலில் கருணாநிதி-கனி மொழி பெயர்களில் அவர்களது குடும்பத் தினர் ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜை நடத்திய சம்பவம் பெரும் பரப ரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...