Friday, January 9, 2015

கருப்பு வெளுக்குமா? – கனவல்ல‍ நிஜம்“கருப்புத்தான் எனக்கு பிடிச்ச கலரு …” என்று ஆனந்தமாய் இந்திய பணக்காரர் கள் வெளிநாடுகளில் இரகசியமாய் பாது காத்து வரும் கருப்புப் பணம் மீட்கப்படுமா? கருப்புப் பணத்தைப் பதுக்கியவர்களின் பட்டியல் முழுமையாய் கிடைக்குமா? அப்ப‍டியேக் கிடைத்தாலும் வரி ஏய்ப்பு சட்ட‍த்தின்கீழ் அத்த‍னைப் பேரையும் தண்டிக்க‍ இயலுமா? அப்ப‍டியேத் தண்டிக்க‍ வாய்ப்பும் வழியும் இருந்தாலும் நம் அரசியல் திமிங்கலங்கள் அதை நிறைவேற்ற‍
ஒத்துழைக்குமா?மீட்கப்பட்ட‍ கருப்புப் பணம் தேசத்தின் கஜானாவிற்குப் போய்ச் சேரு மா?
-அப்பப்பா எத்த‍னைக் கேள்விகள்? இந்திய சேசமே எக்க‍ச்சக்க‍ எதிர்பார்ப் புடன் இருக்கும் இந்த கேள்விகளுக்கெ ல்லாம் பதில் சொல்ல‍ வேண்டிய  கடந்த கால காங்கிரஸ்  அரசோ மௌனம் சாதித்தது.
100 நாட்களுக்குள் கருப்புப்பணத்தை மீட்போம்…. அந்தப் பணத்தை ஒவ்வொரு குடிமகனுக்கும் பகி ர்ந்து கொடுப்போம். (மெகா பூச்சுற்ற‍ல்) என்பது இது தானோ என்று வாய்க்கிழிய செவிப்பறை அதிர வாக்குறுதி தந்த பாரதிய ஜனதா கட்சி, சொன்ன‍து போலவே இதற்கென ஒருகுழுவை நியமித்து, வெளி நாட்டு வங்கிகளிடமிருந்து குறிப்பிட்ட‍ (நோட் திஸ் பாயிண்ட்) சில பட்டியலை வாங்கியது. பின் செயல் பாட்டில் பின்வாங்கியது.
இதென்ன‍டா கருப்புப் பணத்திற்கு வந்த சோதனை? என்று எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டியதும் நாட்டாமை உச்ச‍ நீதி மன்றம் உத்த‍ரவிட, பேருக்கு மூன்றுபேரின் பெயரைமட்டும் ஒப்புக்கு அறிவித்தது. முழுமையான பட்டியலை வெளியிட என்ன‍தயக்க‍ம்? யாரைப் பாது காக்க‍ இப்ப‍டி மெத்த‍னம்? ஒழுங்காகப் பட்டியலை ஒப்ப‍டையுங்கள். என்று உச்ச நீதி மன்றம் செவிட்டில் அறைந்து கேட்ட‍தும் பா.ஜ  க• அரசு பயபக்தியுடன் 624பேர் அடங்கிய பட்டிய லைச் சமர்ப் பித்தது.
இந்தியத் தொழிலான வர்க்கத்தின் உழைப் பை உறிஞ்சி அவன் வியர்வை உப்பாவதற் குள்தான் சம்பாதித்த‍க் கணக்கில் காட்டா மல், வரியும் செலுத்தாமல், இத்தேசத்தின் வங்கியிலும் வைக்காமல்… வெளிநாட்டி ல் பணம் சேர்ப்பார்கள் இந்த தேசத்தின் கருப்பு ஆடுகள் தானே.
ஆயிரத்தில் வரியேய்ப்பு செய்பவ னை வலை வீசித் தேடித்தேடி தண் டிக்கிற சட்ட‍ம், வரி ஏய்ப்பு செய்து இந்திய பொருளாதாரத்தையே கடத்துகிறவர் களை, கண்டும் காணாமல் இருப்ப‍து எந்த வகையில் நியா யம்?
நல்லாத்தானே இருந்தாரு நரேந்திரமோடி.. பின்ன‍ ஏன் இப்ப‍டி? என்று நையாண்டி செய்யும் அளவுக்கு கருப்புப் பண விவகாரத்தில் அப்ப‍டி என்ன‍ தான் சிதம்பர ரகசியம்?
வெளிநாட்டு வங்கிகளில்வட்டிக்கு மேல் வட்டியுடன் தூங்கும்பணம் இந்தியாவிற்கு வந்தால் நம்மால் அமெரிக்காவிற்கே கடன்கொடுக்க‍முடியும்.(கனவல் ல‍ நிஜம்) கருணையும் கண்டிப் பும் நிறைந்த பிரதமரான நரேந்தி ர மோடியின்அரசு இந்த கனவை நன வாக்க வேண்டும்.
கருப்பை வெளுப்பாக வேண்டும், வெளுப்பான பொருளாதாரத்தை  இந்திய தேசத்தில் பாய்ச்சி பாரத  ஒளிரச் செய்ய வேண்டும் என்ப தே வெள்ள‍ந்தியான ஒவ்வொரு இந்திய குடிமகனின் பிரார்த்த‍னை.

No comments:

Post a Comment