நமது
பண்பாடு, கலாசாரம் என்பவற்றை பாரம்பரியமாகவே கட்டி காப்பவர்கள் தமிழர்கள் .
பண்டிகைகள், விழாக்கள் , சடங்குகள் எல்லாம் அன்றில் இருந்து இன்று வரை
பின்பற்றி வருகிறார்கள் . தைமாதத்தில் வரும் தைப் பொங்கல் விசேசமானது .
புதிய வருடத்தை இனிப்பாக , சந்தோசமாக வரவேற்பார்கள் தமிழர்கள் .
விவசாயிகள்
காலை சேற்றில் மிதித்தால் தான் நாம் சோற்றில் கை வைக்கலாம் .
விவசாயிகளுக்கு நன்றி செலுத்த வேண்டும் . அதே போல் நாம் எமக்கு ஒளி
கொடுக்கும் , உலக மக்கள் எல்லோருக்கும் ஒழி கொடுக்கும் சூரிய பகவானுக்கு
நன்றி செலுத்தும் நாளும் இந்த தைத்திருநாள் தான்.
தைத்திருநாள்
இல்லமெல்லாம் தளிர்த்திடும் தைப்பொங்கல் . இத்தனை நாள் காத்திருந்தோம்
இனிய தமிழ் பொங்கல் என்று நாம் எல்லோரும் சந்தோசமாக வரவேற்க காத்திருப்போம்
. பழையன கழிந்து , புதியன போகுதல் வேண்டும் . துன்பங்கள் நீங்கி
இன்பங்கள் உண்டாக வேண்டும் . புதிய பானையில் புது அரிசி இட்டு , கரும்பு
கட்டி , சர்க்கரை இட்டு பொங்கும் பொங்கலோ பொங்கல் .
சூரியன்
இல்லையென்றால் இவ்வுலகமே இல்லை . இதனால் தான் நாம் தைத்திருநாள் அன்று
பொங்கலை சூரியனுக்கு படைத்து விட்டு அதன் பின்பு நாம் உண்கின்றோம் .
தைப்பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது .
உழவுத்தொழிலுக்கு உதவியாக இருக்கும் கால்நடைகளுக்காக கொண்டாடப்படுகிறது .
தைபிறந்தால்
வழி பிறக்கும் என்பது நம் முன்னோரின் கூற்று . எல்லோருக்கும் ஒரு நல்ல
வழி பிறக்க வேண்டும் என்று உழவர்களும் , நாம் எல்லோரும் நம்பிக்கை கொள்ளும்
நாளும் இதுதான் . மனதில் உவகை உண்டாகி இனிப்பாக பொங்கல் உண்ணும் நாளும்
இதுவே .
எமது
பண்பாடுகளில் விருந்தோம்பல் மிகவும் முக்கியமானது . பசித்தோருக்கு உணவு
கொடுப்பதிலும் , தானங்களில் சிறந்த அன்னதானம் கொடுப்பதிலும் நாம் எங்கும் ,
எப்போதும் பின்னிப்பதில்லை . கோவில் திருவிழாக் காலங்களிலும் , பண்டிகைகள்
போன்ற விசேச தினங்களிலும் மற்றவர்களுக்கு கொடுத்து உண்பதில் எப்போதும்
தமிழர்கள் பின்னிப்பதில்லை .
“எந்நன்றி
கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகர்க்கு” என்பது
வள்ளுவன் வாக்கு அந்த வாக்கிற்கு ஏற்ப நமக்கு ஒருவர் செய்த உதவியை மறக்காது
பிரதியுபகாரம் செய்தல் வேண்டும் .விவசாயிகளுக்கு பயிர்ச் செய்கைக்கு
சூரிய ஒளி அவசியமாகும் அந்த ஒளியை வாரி வழங்குவது சூரியன் . எனவே
நாம் சூரியனுக்கு எமது நன்றியை செலுத்தும் விதமாக சூரியனை வழிபட்டு
பொங்கலிட்டு பூசை செய்து தைத்திருநாளை தமிழர்கள் கொண்டாடுவது வழக்கம்.
அன்று தொடக்கம் இன்று வரை தமிழர்கள் தைத்த்ருநாளை சிறப்பாக
கொண்டாடுகின்றனர் .
இந்த தைத்திருநாளை
சந்தோசமாக வரவேற்று புத்தாடை அணிந்து சூரியனுக்கு நன்றி செலுத்தி , அதேபோல்
விவசாயிகளுக்கும் நன்றி செலுத்தி தைமகளை புன்னகையுடன் வரவேற்போம் . இந்த
ஆண்டு சிறப்பான , சந்தோசம் தரும் ஆண்டாக அமைய வேண்டும் என உவகையுடன்
வரவேற்போம் தைமகளை . .........
No comments:
Post a Comment