Friday, January 2, 2015

எழிலான வாழ்வுதரும் 4 x 7 – ஒரு பார்வை

vidhai2virutcham 222
எழிலான வாழ்வுதரும் 4 x 7 – ஒரு பார்வை
என்ன‍ இது, தலைப்பே வித்தியாசமா இருக்கே, எழிலா ன வாழ்வுக்கும் 4×7க்கும் என்ன‍ சம்பந்தம் என்று தானே நீங்கள் கேட்கிறீர்கள். சற்று பொறுமையாக
கீழுள்ள‍ 4 தலைப்புக்களில் உள்ள‍ 7 விஷ யங்களைப் படித்துப்பாருங்கள். நீங்களே உணர்வீர்கள். ஆம்! 4 தலைப்புக்ளின் கீழுள்ள‍ 7 விஷயங்களை நாம் உணர்ந்து செயல்பட்டால், கண்டிப்பாக எழிலான வாழ்வு தரும் 4 x 7 என்றே சொல்வீர்கள்
நம்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள்
1) ஏழ்மையிலும் நேர்மை
2) கோபத்திலும் பொறுமை
3) தோல்வியிலும் விடாமுயற்சி
4) வறுமையிலும் உதவிசெய்யும் மனம்
5) துன்பத்திலும் துணிவு
6) செலவத்திலும் எளிமை
7) பதவியிலும் பணிவு
வழிகாட்டும் ஏழு விஷயங்கள்
1) சிந்தித்து பேசவேண்டும்
2) உண்மையே பேசவேண்டும்
3) அன்பாக பேசவேண்டும்.
4) மெதுவாக பேசவேண்டும்
5) சமயம் அறிந்து பேசவேண்டும்
6) இனிமையாக பேசவேண்டும்
7) பேசாதிருக்க பழக வேண்டும்
நல்வாழ்வுக்கான ஏழு விஷயங்கள்
1) மகிழ்ச்சியாக இருக்க பழகுங்கள்
2) பரிசுத்தமாக சிரிக்கக் கற்று கொள்ளுங்கள்
3) பிறருக்கு உதவுங்கள்
4) யாரையும் வெறுக்காதீர்கள்
5) சுறுசுறுப்பாக இருங்கள்
6) தினமும் உற்சாகமாக வரவேற்கத் தயா ராகுங்கள்
7) மகிழ்ச்சியாக இருக்க முயற்ச்சி மேற் கொள்ளுங்கள்
கவனிக்க ஏழு விஷயங்கள்
1) கவனி, உன் வார்த்தைகளை
2) கவனி, உன் செயல்களை
3) கவனி, உன் எண்ணங்களை
4) கவனி, உன் நடத்தையை
5) கவனி, உன் இதயத்தை
6) கவனி, உன் முதுகை
7) கவனி, உன் வாழ்க்கையை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...