Wednesday, February 28, 2018

கார்த்தி சிதம்பரம் கைது ஏன்..?......

கார்த்தி சிதம்பரம் 1 மில்லியன் டாலர்கள் பெற்றார்: இந்திராணி முகர்ஜி பரபரப்பு வாக்குமூலம்
கடந்த 2007-ஆம் ஆண்டு, மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் அனுமதி வழங்கியதில் பெருமளவில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த முறைகேடுக்கு ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் உடந்தையாகச் செயல்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்திராணி மற்றும் அவரது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோருக்குச் சொந்தமான ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரிய விதிகளுக்குப் புறம்பாக வெளிநாட்டில் இருந்து நிதி பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. சிதம்பரம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி உதவியதாகக் கூறப்படுகிறது. அதற்காக சில ஆதாயங்களை அவர் பெற்றதாகவும் புகார்கள் உள்ளன.
இந்நிலையில், , ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அந்நிய நேரடி முதலீடு பெறுவதற்கு தங்களிடம் கார்த்தி சிதம்பரம் 1 மில்லியன் டாலர்கள் பெற்றதாக சிபிஐ விசாரணையில் இந்திராணி முகர்ஜி தெரிவித்துள்ளார். எனவே இந்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

காஞ்சிமஹா பெரியவா⚘ சொன்ன, வாழ்க்கைக்கு வேண்டிய எளிய பரிகாரங்கள்.

(1) வீட்டில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு ஏதேனும் உடல் நல கோளாறுகள் வந்து கொண்டே இருந்தால் கோவிலிலோ அல்லது ஆன்மீக மையங்களிலோ
பகல் வேலையில் முழு மஞ்சள் பரங்கிக்காய் தானம் 
செய்ய குடும்பம் உடல் கோளாறுகளிலிருந்து விடுபடும். இதன் சக்தியை
மூன்றே நாட்களில் உணரலாம்.
(2) நல்ல சம்பாத்தியம் இருந்தும்
பணம் வீண் விரயமாகி கொண்டே இருந்தால் தினமும் காலை
வேளையில் பறவைகளுக்கு
இனிப்பு பிஸ்கட்கள் வழங்க
வீண் விரயம் கட்டுப்படும்.
(3) மன வருத்தம், என்னவென்றே தெரியாத குழப்பம், மன அழுத்தம்,
சோர்வு போன்றவை
நாள் முழுதும் இருப்பின்
இரவு படுக்கும் பொழுது
தலைக்கு அருகில் ஒரு டம்ப்ளர் தண்ணீர் வைத்து
கொண்டு படுக்கவும். காலையில் சோர்வு, மன அழுத்தம் நீங்கி இருப்பதை நீங்களே உணரலாம். நீரை மரத்திலோ வெளியிலோ ஊற்றி விட வேண்டும்.
அதை குடிக்க கூடாது.
(4) காரணமில்லாத பய உணர்வு
இருந்து கொண்டே இருப்பின், வலது கையில் ஸ்டைன்லெஸ்
ஸ்டீல் வளையம் ஒன்று
மாட்டி வர பய உணர்ச்சிகள்
குறையும்.
(5) தற்கொலை எண்ணங்கள்
மேலும் வாழ பிடிக்காதது
போன்ற உணர்வுகள் தொடர்ந்து இருந்து கொண்டிருந்தால் வெள்ளி
கம்பியால் மூக்கில் சிறு துளை போட அந்த எண்ணங்கள் மாற
ஆரம்பிக்கும். ஆண்களுக்கும் செய்யலாம். மூக்குத்தி
அணிய வேண்டியதில்லை.
(6) வாகனங்களில் பயணம் செய்யும் பொழுது
கூடவே சிறிது காகித பூ
எடுத்து செல்ல விபத்துக்கள்
ஏற்படாது.
(7) காலை எழுந்ததும் தங்க
நாணயம் அல்லது
தங்கங்கள் நிறைந்த
படம், ரூபாய் நோட்டுகள்
நிறைந்த படம் ஒன்று
பார்த்து வர செல்வ வளம்
பெருகும்.
(8) இடது கை கீழே
இருக்கும் படி படுத்துறங்க
ஆயுள் விருத்தியாகும்.
(9)வீட்டை சுற்றி நீரோட்டங்கள் இருந்தாலோ செயற்கையாக அமைத்து கொண்டாலோ பண புழக்கம் உடனடியாக உயரும்.
(10) காரணமில்லாமல் இரவில்
குழந்தைகள் தூங்காமல்
அழுது கொண்டே இருந்தால் அறையில் கல் உப்பு கலந்த நீரை
வைக்க, குழந்தை நன்றாக
தூங்கும்.
(11)சமையலறையும், படுக்கையரையும் அருகருகே
இருக்கும் படி அமைத்து
கொண்டால் தம்பதியர்
ஒற்றுமை ஓங்கும். இல்லறம் இனிக்கும்.
(12) துர் சக்திகள் நம்மை
அண்டாதிருக்க வீட்டு
வாசலில் மருதாணி
கொத்தை தொங்க விட
வேண்டும்.
வாழ்வோம் வளமுடன் நலமுடன்.

'N' என்ற எழுத்து.

சீனாவில் N என்ற ஆங்கில எழுத்தை இணையதளங்களில் பயன்படுத்த அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. அதிபர் ஷி ஜின்பிங்கை குறித்து ஆன்லைனில் விமர்சனங்கள் எழுந்ததை அடுத்து இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலம் மட்டுமின்றி சீன மொழியான மாண்டரின் மொழியிலும் 'N' என்ற எழுத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சீன இணையதளங்களில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளில் கிட்டத்தட்ட 20 வார்த்தைகள் வரை தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தடை இன்று முதல் அமலுக்கு வருகிறது. சீன அதிபர் ஷி ஜின்பிங் பெயரில் 'N' என்ற வார்த்தை இரண்டு முறை இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.
அரசுக்கு எதிராக எந்த கருத்தும் எழக்கூடாது என்ற நோக்கத்தில் இந்த தடை அமல்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தடை மக்களின் கருத்து சுதந்திரத்துக்கு முற்றிலும் எதிரானது என்ற கருத்துக்களும் கூறப்பட்டு வருகின்றன.

அனைவரும் பின்பற்ற வேண்டிய 40 நாகரிகங்கள்:

01. ஒருவரோ , பலரோ உறங்கிக் கொண்டிருக்கும் அறையில் நுழையும் போது டமால் டுமீல் தட் புட் தடால் பணால் என்று சத்தம் போடாதீர்கள். வியாக்ர பாதர் , தேனீ உட்காராத பூக்களைக் கண்டுபிடிக்க புலிப்பாதம் வேண்டிக் கொண்டாராம். அப்படி நீங்களும் புலி/பூனைப் பாதத்துடன் நடந்து சென்று காரியத்தை முடித்துக் கொள்ளுங்கள்.
02. பொது இடங்களில் நிற்கும் போது யாருடைய வழியையேனும் அடைத்துக் கொண்டு நிற்கிறீர்களா என்று உறுதி செய்து கொள்ளுங்கள். ரயிலில் பஸ்ஸில் தேவை இல்லாமல் எழுந்து நிற்காதீர்கள். த்ரீ சீட்டர் சீட்களில் உங்கள் இடத்தை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். பைகளை சீட்டில் வைக்காதீர்கள். ரயிலில் இரவுப் பயணத்தில் ஏதேனும் காரணத்துக்காக லைட்டைப் போட்டால் மீண்டும் அணைக்க மறக்காதீர்கள்.
03. நண்பர்கள் / உறவினர்கள் வீடுகளுக்கு செல்லும்போது அவற்றின் அமைப்பைக் குறை சொல்லாதீர்கள். (பாத்ரூம் இங்கே இருந்திருக்கலாம்!) அமைப்பை மாற்ற யோசனை சொல்லாதீர்கள். (இந்த பிரிட்ஜை இங்கே வெச்சுக்கலாமே! -none of your business !). அவர்கள் படுக்கையறைக்கு செல்லாதீர்கள். அவர்கள் போனைக் கேட்காதீர்கள். அவர்கள் வைஃபை பாஸ்வேர்ட் கேட்காதீர்கள்.
04. கடனைத் திருப்பிக் கேட்கும் முன்னர் அதற்கு ஒரு குறிப்பிட்ட குறைந்தபட்ச நாட்கள் காத்திருங்கள்.
05. ஒருவர் கைபேசி அழைப்பை எடுக்கவில்லை என்றால் தொடர்ந்து விடாமல் மீண்டும் மீண்டும் அழைப்பது வேண்டாம். அது கொஞ்சம் சைக்கோத் தனம் . அவர்களையும் தேவையில்லாமல் பயமுறுத்தும்.
06 ஒருவரிடம் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். அவரை விட வயதிலோ, அந்தஸ்திலோ , பதவியிலோ , முக்கியத்துவத்திலோ உயர்ந்த ஒருவர் உங்களை அழைக்கிறார். பலர் அந்த முதல் நபரை அப்படியே அம்போ என்று விட்டுவிட்டு பரபரப்புடன் இரண்டாம் நபரிடம் ஓடி விடுவார்கள்.
அவரிடம் குறைந்தபட்சம் 'ஒரு நிமிடம் , போய் வந்துவிடுகிறேன் ' என்று சொல்லிச் செல்லவும்.
07. பரபரப்பான சாலைகளில் குழந்தைகளை / குடும்பத்தை போட்டோ எடுக்காதீர்கள். கேமெராவுக்கும் போட்டோ எடுக்கப்படுபவருக்கும் இடையே நடக்க நிறைய பேர் தயங்கித் தயங்கி நின்றிருப்பார்கள்.
08. பொதுக் கழிப்பிடங்களை உபயோகித்தபின் நிறைய தண்ணீர் ஊற்றிவிட்டு வாருங்கள்.
09. பஸ்ஸிலும், ரயிலிலும், லிப்டிலும் முதலில் உள்ளே இருப்பவர்கள் இறங்கிய பின் தான் நீங்கள் எற வேண்டும்.
10. பொது இடங்களில் பேசும்போது கத்திப் பேசாதீர்கள். மொபைல் கால் வந்தால் தனியாகப் போய் ஓரிடத்தில் பேசி விட்டு வாருங்கள். டாக்சிதான் ஏறிவிட்டோமே என்று டாக்சியில் கத்திப் பேசாதீர்கள். அது ஓட்டுனரை தொந்தரவு செய்யும். ஹெட்செட்டில் பாட்டு கேட்டுக்கொண்டே சத்தமாகப் பேசவோ , பாடவோ, டான்ஸ் ஆடவோ வேண்டாம்.
11. நீங்கள் ஓட்டுனராகவோ , அல்லது சேவை வழங்குநராகவோ (எலக்ட்ரீசியன், பிளம்பர் , பெயிண்டர் etc ) இருந்தால் கஸ்டமரின் personal விஷயங்களை/தகவல்களைக் கேட்காதீர்கள் . உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்.
12. சூப்பர் மார்க்கெட்டில் உங்களுக்குப் பின்னே கியூ நிற்கிறது. அப்போது பில் போடுபவரிடம் தேவையில்லாத தகவல்களைக் கேட்டுக்கொண்டு இருக்காதீர்கள். (இந்த ஸ்கீம் பத்தி டீட்டெயில்ட்டா சொல்றீங்களா?). அதே போல இருங்க , ப்ரெஷ் வாங்க மறந்துட்டேன் என்று ஓடாதீர்கள். Consider others !
13. ஒருவர் உங்களுக்கு treat தரும் போது இதுதான் சாக்கு என்று விலையுயர்ந்த அயிட்டங்களை ஆர்டர் செய்யாதீர்கள்.
14. ஒருவர் வீட்டுக்குப் போகும் முன்னர் பல மணி நேரங்களுக்கு முன்னரே தகவல் சொல்லுங்கள். no surprises ! நீங்கள் சர்ப்ரைஸ் விசிட் என்று நினைத்துக் கொண்டு போவது அவர்களை எரிச்சல் படுத்தும்.
15. நீங்கள் guest ஆக ஒரு உறவினர் வீட்டுக்கு சென்றால் உங்களுக்குத் தேவையான மாத்திரை மருந்துகளைக் கொண்டு செல்லுங்கள். அங்கே போய் ராத்திரி 9 மணிக்கு 'ரகு, எனக்கு இந்த மாத்திரை வாங்கி வந்திடறியா ' என்று கடுப்பேற்றாதீர்கள்.
16. முதல் சந்திப்பிலேயே ஒருவரைப் பற்றிய opinion களைத் தவிருங்கள். 'நீங்க ரொம்ப shy டைப்பா? '. வந்ததில் இருந்து பத்து வார்த்தை கூட பேசி இருக்க மாட்டீங்க.
17. நீங்கள் சந்திக்கும் நபரைப்பற்றி அதிகம் கேளுங்கள் /பேசுங்கள். உங்களைப் பற்றி அல்ல. (நான் எப்படின்னா, நான் இப்படித்தான், எனக்கு இது பிடிக்காது, ஒருநாள் நான்...etc )
18. யாராக இருந்தாலும் ஒருவர் வாசலை விட்டு நகர்ந்த அடுத்த மைக்ரோ வினாடி கதவை அடைக்காதீர்கள் . அவர்கள் கொஞ்ச தூரம் போகும்வரை காத்திருங்கள்.
19. வயது, சம்பளம் , விவாகரத்து காரணம் , இவைகளைக் கேட்காதீர்கள். தம்பதிகளிடம் எப்போது குழந்தை என்று கேட்காதீர்கள்.
20. உங்களை விட வயதில் சிறியவர்களிடம் உரையாடும்போது அட்வைஸ் செய்யாதீர்கள். No one likes advices.
21. வீட்டில் உறவினர்கள் வருகிறார்கள் என்றால் அவர்களுக்கு அன்றாடம் தேவையானவற்றை வாங்கி வையுங்கள். அவர்களை பாத்ரூம் சென்று என்றோ தீர்ந்து போன பேஸ்டை பிதுக்க வைக்காதீர்கள்.
22. புதுமனைப் புகுவிழாவின் போது வீடு வாங்கியவரை முந்திரிக் கொட்டை போல 'ஸ்கொயர் பீட் எத்தனை ?' என்று கேட்காதீர்கள். 'எங்க ஏரியாவில் கம்மி ரேட் ' என்றெல்லாம் சொல்லாதீர்கள். 'வீடு நல்லா இருக்கு , கங்கிராட்ஸ் ' என்று முதலில் சொல்லுங்கள்.
23. உங்கள் பிள்ளைகளின் நண்பர்கள் வீட்டுக்கு வந்தால் அவர்களை பேச விடுங்கள். நடுநாயகமாக உட்கார்ந்து கொண்டிருக்காதீர்கள். Allow them freedom ! அதே போல இளைஞர்களின் விஷயத்தில் தலையிடாமல் ஒதுங்குங்கள் . 70 வயதானாலும் ஜோவியலாகப் பேசுகிறேன் பேர்வழி என்று 'என்னடா அஷோக் ,நேத்து ராத்திரி அஜால்ஸ் குஜால்ஸ் தானா ?' என்றெல்லாம் கேட்காதீர்கள்.
24. ஒருவர் உங்களிடம் அன்பளிப்பை கிஃப்ட் ரேப் செய்து கொடுத்தால் 'பிரிக்கலாமா?' என்று கேட்டுவிட்டுப் பிரியுங்கள் . 'ஓ , சாண்டிவிட்ச் மேக்கரா, ஏற்கனவே என் கிட்ட இருக்கே' என்றெல்லாம் சொல்லாதீர்கள். Accept it .
25. பழைய நண்பர்கள் சந்திப்பில் உங்களைப் பற்றி/உங்கள் குழந்தைகள் பற்றி உயர்வாகவோ தாழ்வாகவோ பேசிக் கொள்ளாதீர்கள். உங்கள் designationஐ கேட்டால் மட்டும் குறிப்பிடுங்கள்.
26. ஒருவருடைய மதம்/இனம்/ஜாதி பற்றி கேட்கவோ பேசவோ செய்யாதீர்கள்.
27. உறவினர்களுக்கு சமைக்கும்முன் இந்த அய்ட்டம் உங்களுக்குப் பிடிக்குமா என்று கேட்டுவிட்டு சமையுங்கள்.
28. ராத்திரி 8 மணிக்கு மேல் ஒருவருடைய வீட்டுக்கு செல்ல வேண்டாம். 9 மணிக்கு மேல் போன் செய்ய வேண்டாம் (unless they are your spouse / lovers ).
நீங்கள் guest ஆக சென்றிருந்தால் காலை சீக்கிரம் எழுந்து கொள்ளுங்கள். 10 மணிவரை குறட்டை விட்டுத் தூங்க வேண்டாம்.
29. வெளியில் போகையில் சில்லறை கொண்டு செல்லுங்கள். 100 ரூபாய் பில்லுக்கு 2000 ரூபாய் நீட்டி சர்ப்ரைஸ் தராதீர்கள். அதே போல முதலிலேயே ரூபாயை எடுத்து பாக்கெட்டில் போட்டுக் கொள்ளுங்கள். சிலர் அவர்கள் முறை வந்த பின்பு தான் நிதானமாக ஹேண்ட் பேக்கை அகழ்வாராய்ச்சி செய்வார்கள்.
30. ஒருவரை 3 வினாடிகளுக்கு மேல் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பது offensive . (அந்த ஒருவர் உங்கள் காதலியாகவோ காதலனாகவோ இல்லாத பட்சத்தில்!). அதேபோல் ஒருவர் சமையல் செய்யும்போதோ, கோலம் போடும்போதோ , வரையும்போதோ பின்னால் நின்று கொண்டு உற்றுப் பார்த்துக்கொண்டே இருக்காதீர்கள்.
31. கைக்குழந்தைகளை தியேட்டர்-களுக்குக் கூட்டிப் போகாதீர்கள்.
32. பாடல்களை எப்போதும் இயர் போனிலேயே கேளுங்கள்.சைனா செட்டை இயக்கி மற்றவர்களை கதிகலங்க வைக்காதீர்கள்.
33. ஒருவரின் உடல் அமைப்பைப் பற்றி comment செய்யாதீர்கள். என்ன சார்? தொப்பை பெருசாயிருச்சு போல!
34. டாய்லெட் யூரினலில் ஏற்கனவே ஒருவர் இருந்தால் அவர் பக்கத்தில் இருக்கும் யூரினலைத் தவிருங்கள்.
35. Service industry யில் இருப்பவர்கள் எல்லாரிடமும் அப்படித்தான் பேசுவார்கள். அதை சிக்னல் என்று எடுத்துக்கொண்டு வழியாதீர்கள்.
36. மற்றவரின் taste /preference களைக் குறை சொல்லாதீர்கள். இந்த புக்கெல்லாம் எப்படித்தான் படிக்கிறீர்களோ / இந்தப் பாட்டெல்லாம் எப்படி கேட்கறீங்களா!
37. ஒருவர் போட்டோ பார்க்க போனை உங்களிடம் நீட்டினால் அந்த போட்டோவை மட்டும் பாருங்கள்.
38. அளவுக்கதிகமான பெர்ப்யூம் போட்டுகொண்டு போய் எல்லாருக்கும் தலைவலி வரவழைக்காதீர்கள்.
39. முகநூலில் நட்பு கிடைத்தவுடன் அவர் அனுமதி கேட்காமல் video Chat அழைப்பு விடுக்காதீர்கள்
40. குழந்தை இன்னும் இல்லை என்றால் அத்துடன் விட்டு விடுங்கள். ஏன் என்று என்று குடையாதீர்கள்.

சோம்பு ............

சோம்பு மருத்துவ பயன்கள் எளிதில் செரிமானம் ஆகாத உணவுகளைக் கூட செரிக்கச் செய்யும் தன்மை சோம்பிற்கு உண்டு. உணவுக்குப்பின் சிறிதளவு சோம்பை வாயில் போட்டு மென்று சாறை கொஞ்சம் கொஞ்சமாக இறக்கி வந்தால் உண்ட உணவு எளிதில் சீரணமாகும்.
சாப்பிட்ட உணவினால் குடலில் அலர்ஜி ஏற்பட்டு வாய்வுக்கள் சீற்றமடைகின்றன. இதனால் குடல் சுவர்கள் பாதிக்கப்பட்டு குடலில் புண்கள் ஏற்படுகின்றன. இந்தப் புண்கள் ஆற சோம்பை தினமும் உணவில் சேர்த்து வந்தால் குடல்புண் நாளடைவில் குணமடையும்.
அஜீரணக் கோளாறுகளால் வயிற்றில் வாய்வுக்களின் சீற்றம் அதிகமாகி வயிற்றுவலி, வயிற்று பொருமல் ஆகியவை ஏற்படுகின்றன. இவர்கள் உடனே சிறிதளவு சோம்பை எடுத்து வாயில் போட்டு மென்று தின்றால் சிறிது நேரத்தில் குணம் தெரியும்.
கருப்பை பாதிக்கப்பட்டால் கருத்தரிப்பு நடக்காது. இதனால் சிலர் குழந்தை பேறு இல்லாமல் கூட அவஸ்தைப்படுவார்கள். பெருஞ்சீரகத்தை இளம் வறுவலாக வறுத்து பொடித்து, வேளையொன்றுக்கு 2 கிராம் வீதம் தனியாகவோ அல்லது பனங்கற்கண்டு கலந்தோ சாப்பிட்டு வந்தால் கருப்பை சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் விலகும்.
உடலின் செயல்பாடுகள் அனைத்திற்கும் முக்கிய காரணியாக இருக்கும் உறுப்பு ஈரல்தான். ஈரல் பாதிக்கப்பட்டால் பித்தம் அதிகமாகி பல நோய்களுக்கு ஆளாக நேரிடும். ஈரல் நோயைக் குணப்படுத்த சோம்பும் ஒரு மருந்தாகப் பயன்படுகிறது.
சோம்பை இளம் வறுவலாக வறுத்து பொடிசெய்து அதனுடன் தேன் கலந்து காலை மாலை 1 டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் ஈரல் நோய் குணமாகும்.
நாள்பட்ட வறண்ட இருமல், இரைப்பு இவைகளால் அவதிப்படுபவர்கள் சோம்பை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரைப் பருகி வந்தால் நாள்பட்ட இரைப்பு, மூக்கில் நீர் வடிதல் குணமாகும்.
அதிக குளிர் சுரம் இருந்தால் சோம்பை நீரில் கொதிக்க வைத்து கொடுத்தால் குளிர் சுரம் கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.
பசியில்லாமல் அவதிப்படுபவர்கள் சோம்பை தனியாக மென்று சாப்பிட்டு வந்தால் நன்கு பசியெடுக்கும்.

நாம் பிறருக்கு கொடுக்கும் அனைத்தும் தானம் ஆகுமா?

தானம்..!
ஒரு நாட்டில் சித்தர் ஒருவர் இருந்தார். அவருக்கு மேளம் அடிப்பதில் அதிக விருப்பம் கொண்டவராக இருந்தார். அவர் தன் கையில் எப்போதும் ஒரு மேளத்தை வைத்துக் கொண்டுதான் இருப்பார். தன்னைத் தேடி வருபவர்கள், அவருக்கு பெரிய அளவில் காணிக்கை கொடுத்தால், அப்போது மகிழ்ச்சியுடன் அந்த மேளத்தை அடித்துத் தானம் அளித்தவரின் பெருமையை அங்கே கூடியிருப்பவர்களின் முன்பாக சொல்லி மகிழ்வார்.

அந்த நாட்டு மன்னனுக்கு அந்த சித்தரின் செயல் பற்றிய தகவல் தெரிய வந்தது. இந்த நாட்டில், தானம் அளிப்பதில் தன்னை விட உயர்ந்தவர் யாரும் இருக்கக்கூடாது. தனக்கு மட்டுமே அந்தப் பெருமை சேரவேண்டும் என்ற எண்ணத்தில் யானைகளில் முத்து, பவளம், வைரக்கற்கள், தங்கக்கட்டிகள், பழம், உணவு வகைகளை ஏற்றிக்கொண்டு அந்த சித்தரை காண சென்றார்.
அப்போது மன்னர் செல்லும் வழியில் ஒரு மூதாட்டி வந்தார். அந்த மூதாட்டி மன்னரிடம்! மன்னரே, சித்தரைத் தரிசிப்பதற்காகப் நான் போய்க் கொண்டிருக்கிறேன். ஆனால் எனக்கு மிகவும் கடுமையான பசியாக இருக்கிறது! சாப்பிட ஏதாவது தாருங்கள் என்று வேண்டினார்.
உடனே அந்த மன்னன் அவரை நோக்கி, ஒரு மாதுளம்பழத்தை வீசினார். சிறிது நேரத்தில், மன்னர் சித்தரின் இருப்பிடத்தை அடைந்து தான் கொண்டு வந்த அனைத்தையும் தானமாகப் சித்தரிடம் செலுத்தினார். அந்த மன்னர், தன் தானத்தின் அளவிற்குப் சித்தர் ஒரு அரைமணி நேரமாவது மேளம் அடித்து மகிழ்வார் என்று நினைத்தார். ஆனால் சித்தர் எழுந்திருக்கவே இல்லை.
அந்த சமயம் மன்னர் அதிர்ச்சியில் உறைந்திருந்த நேரத்தில், அவரிடம் மாதுளம்பழம் பெற்ற மூதாட்டி அங்கு வந்தார். சித்தரின் காலடியில் மன்னனிடம் பிச்சையாகப் பெற்ற மாதுளம்பழத்தை சமர்ப்பித்தார். உடனே சித்தர் எழுந்து மகிழ்ச்சியுடன் தான் வைத்திருந்த மேளத்தை வேகமாக அடித்தார்.
அதைக்கண்ட மன்னனுக்குக் கடுமையான கோபம் ஏற்பட்டது. உடனே மன்னர் புத்தரைப் பார்த்து, சித்தரே, இதென்ன அநியாயம்! இந்தக்கிழவி ஒரு பழத்தைத் தந்ததற்காக மேளம் அடித்தீர்கள். நான் அதிக காணிக்கை கொடுத்தும் எழாமல் இருந்தீர்களே! இது உங்களுக்கு சரியாகப்படுகிறதா? என்று கேட்டார்.
அதற்கு சித்தர், மன்னா, நீங்கள் காணிக்கை அளித்ததன் நோக்கம் உங்கள் புகழ் வெளிப்பட வேண்டும் என்ற உள்நோக்கத்திற்கானது. ஆனால் இந்த மூதாட்டியோ, உங்களிடம் இரவலாக பெற்ற பழத்தை, தனது கடும் பசியிலும் கூட சாப்பிடாமல், தன்னுயிர் போனாலும் போகட்டும் என்று நினைத்து என்னிடம் கொண்டு வந்து கொடுத்திருக்கிறார். அதனால் தானத்திலேயே உயர்ந்த தானம், தன்னுயிர் பிரியும் நிலை இருந்தாலும், அதையும் பொறுத்துக் கொண்டு பிறருக்கு உதவுவதே! அந்த மகிழ்ச்சியில் தான் மேளத்தை அடித்தேன் என்றார். இதைக்கேட்ட மன்னர் குனிந்த தலை நிமிரவில்லை.

Tuesday, February 27, 2018

மோரை உடல் ஆரோக்கியத்துக்கு எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்!.

மோருடன் இஞ்சி, மிளகு மற்றும் சீரகம் போன்றவற்றை சேர்த்து குடித்து வந்தால், செரிமானம் நன்கு நடைபெறும். தினமும் ஒரு டம்ளர் மோர் குடித்து வந்தால், வைட்டமின் குறைபாடு ஏற்படுவதைத் தடுக்கலாம்.
Image may contain: food


இயற்கையான ப்ளீச்சிங்காக செயல்படுகிறது. அதிக லாக்டிக் அமிலம் இருப்பதால் கருமையை போக்கும். முகப்பரு தழும்பை மறையச் செய்யும். சருமத்தை இறுக்கும். சரும அலர்ஜிகளை குணப்படுத்தும். சூரியக் கதிர்களால் உண்டாகும் பாதிப்புகளையும் அலர்ஜிகளை தடுக்கும்.
சருமத்தை சுத்தப்படுத்தும். இறந்த செல்களை அகற்றும். எண்ணெய் பசையை குறைக்கிறது. கடலைமாவு, பயிற்றம் மாவு முல்தானி மட்டி என இவைகளுடன் கலந்து உபயோகித்தால் மாசு பரு இல்லாத சுத்தமான சருமம் கிடைக்கும்.
No automatic alt text available.
முட்டையை அடித்து அதனுடன் மசித்த வாழைப்பழம், ஆலிவ் எண்ணெய் மற்றும் கால் கப் மோர் கலந்து தலையில் மாஸ்க் போல் போட்டால் கூந்தல் வளர்ச்சி இரட்டிப்பாகும். வாரம் ஒரு முறை அல்லது இருமுறை செய்யலாம்.
மோரில் நிறைந்துள்ள நன்மைகளில் முக்கியமானது அசிடிட்டி பிரச்சனைக்கு நிவாரணம் தரும் என்பது தான். மோர் வயிற்றை குளிர்ச்சி அடையச் செய்து, அமில படலத்தால் ஏற்படும் வயிற்று எரிச்சலை குறைத்து உடனடி நிவாரணத்தைத் தரும்.

ஆயில்யம் நட்சத்திரம் உடைய ஒரு பெண்ணை மணந்தால்?

< ( [ { ஓர் இணையத்தில் கண்டெடுத்த‍து } ] ) >
ஆயில்யம் நட்சத்திரம் உடைய ஒரு பெண்ணை மணந்தால், அப் பெண்ணுடைய மாமனாரோ, மாமியாரோ இறந்து விடுவார்கள் என்று சொல்கிறார்கள். இது உண்மையா? 

இதெல்லாம் பொதுவாக சொ ல்லப்படுவது. மகம் என்றால் ஜகத் தை ஆள்வார் என்பது பொதுவானவை. மகம் நட்சத் திரத்தில் பிறந்து மாடு மேய்ப் பவர்களையும் பார்க்கிறோம். மகம் நட்சத்திரத்தில் பிறந்து ஐ.பி.எஸ். அதிகாரிகளாக இருப்பவர்களையும் பார்க்கி றோம். நட்சத்திரத்தை மட்டு மே அடிப்படையாக எடுத்து நாம் எதையும் சொல்லக்கூடாது. 
கடந்த மாதம் கூட ஒரு பெண் வந்திருந்தார். அவருடைய பையனு க்கு பெண் பார்‌‌த்து‌க் கொ‌ண்டிரு‌ப்பதாக‌க் கூ‌றினா‌ர். அப்பொழுது ஆயில்யம் நட்சத்திரம் இருந்த பெண் ஜாதகத்தை எடுத்துக் கொடு த்ததும் அவர்கள் தயங்கினார்கள். நான் நல்லா இருக்கிறேனே உங் களுக்குப் பிடிக்கலையா? என்றார்கள். 
மாமியார் ஸ்தானம் அந்தப் பெண்ணிற்கு நன்றாக இருக்கிறது. மாமியார் ஸ்தானம் நன்றாக இருந்தால் ஆயில்யமாவது, விசாக மாவது தைரியமாக பெண் எடுக்கலாம். நீங்க நல் லா இருக்கணும் னு சொல்லி தானே இதை எடுத்துத் தருகி றேன் என்று சொன்னேன். 
பொதுவாக ஆயில்யம் நட்சத் திரத்தில் பிறந்தவர்கள் கல கலப்பாக பேசுவார்கள். முகத் தை உம்மென்று வைத்திருக்க மாட்டார்கள். கஷ்டமான சூழ்நிலை யிலும் லட்சுமி கடாட்சமாக இருப்பார்கள். ஆயில்யம் நட்சத்திரத் தில் பிறந்தவர்களுக்கு எழுத்தாற்றல், பேச் சாற்றல் எல்லாம் அதி கமாக இருக்கும். விட்டுக் கொடுக்கும் குண ம் அதிகமாக இருக்கும். 
கடக ராசிக்கார்கள்தா‌ன் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். கடக ராசி யில் புனர்பூசம், பூசம், ஆயில்யம் என்று மூன்று நட்சத்திரங்கள் இருக் கிறது. ஆனால் ஆயில்யத்தில்தான் “ப்ளக்சிபிளிட்டி ஸ்டார்” என்று எங்க தாத்தா சொல்வார். எந்தத் தருணத் திலும் தன்னை மாற்றிக்கொண்டு மற்றவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என் ற நட்சத்திரம் அது. 
யார் இதனுடைய அதிபதி? 
புதன். புதனுடைய நட்சத்திரம். புதன் கூட்டுக் குடும்பங்கள், பாரம்பரிய பெருமைகள் இதையெல்லாம் காப்பாற்றுவதற்கு உரிய கிரகம். அது ந‌ன்றாக இரு‌ந்தா‌ல் இ‌ந்த ந‌ட்ச‌த்‌திர‌ங்களை‌‌த் த‌வி‌ர்‌க்கவே கூ டாது. இ‌தி‌ல் ந‌ல்ல அ‌றிவா‌ளிக‌ள், பு‌த்‌திசா‌லிக‌ள், பெரு‌ம் பண‌க்கா ர‌ர்க‌ள், ‌நிறுவன‌ங்க‌ள் நட‌த்து‌கிறவ‌ர்க‌ள், அர‌சிய‌ல் தலைவ‌ர்‌க‌ள் இது போ‌ன்று பல கோண‌ங்க‌ளி‌ல் பல மேதைகளை நா‌ம் பா‌‌ர்‌த்து‌க் கொ‌ண்டிரு‌க்‌கிறோ‌ம். 
ஆ‌யி‌ல்ய‌ம் ந‌ட்ச‌த்‌திர‌ம் பெ‌ண்க‌ள் 90 ‌விழு‌க் காடு, மாமனா‌ர், மா‌மியாரை ந‌ல்ல முறை‌ யி‌ல் அனுச‌ரி‌த்து‌ப் போ‌கிறவர்க‌ள் இரு‌க்‌கி றா‌ர்க‌ள். அதனா‌ல் ஆ‌யி‌ல்ய‌ம் ந‌ட்ச‌த்‌திர‌ம் இரு‌க்கு‌ம் பெ‌ண்களை ஏ‌ற்று‌க் கொ‌ள்வது ந‌ல் லது. மா‌‌மியா‌ர் ‌ஸ்தான‌ம் ந‌‌ன்றாக இரு‌க்கு‌ம் ப‌ட் ச‌த்‌தி‌ல் ஒ‌ன்று‌ம் பா‌தி‌ப்பு இ‌ரு‌க்காது.

மாசிமகம் தினத்தில் நிகழ்வுற்றதாக புராணங்கள் கூறும் சில சம்பவங்கள் !

1. மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள திருக்குறுக்கை வீரட்டானேஸ்வரத்தில் மாசி மகத்தன்று காம தகனவிழா நடைபெறும். சிவபெருமான் ஆழ்ந்த தியானத் திலிருக்கும்போது, தேவர்களின் வேண்டுகோளின்படி சிவபெருமான் மீது மலரம்பு எய்தான் மன்மதன். கோபம் கொண்ட அவரின் நெற்றிக் கண்ணிலிருந்து புறப்பட்ட தீப்பொறிகள் மன்மதனை எரித்து சாம்பலாக்கியது. பிறகு அவன் மனைவி ரதிதேவியின் வேண்டுதலால், மீண்டும் மன்மதன் அவள் கண்களுக்கு மட்டும் தெரியும் படி சிவபெருமான் அருளினார். இந்த நிகழ்வை நினைவுபடுத்தும் விழாவாக காம தகனவிழா மாசிமகத்தன்று நடைபெறும்.
2. இரண்யன் என்ற அசுரன் பூமாதேவியைக் கடத்திச் சென்று பாதாள லோகத்தில் ஒளித்து வைத்தான். இதனை அறிந்த மகாவிஷ்ணு, வராக அவதாரம் எடுத்து பாதாள லோகம் சென்று அந்த அசுரனை வதம் செய்து, பூமாதேவியை வெளிக்கொணர்ந்தது மாசி மக நட்சத்திரத் திருநாளில்தான் என்று விஷ்ணு புராணம் கூறும்.
3. கன்னிப் பெண்ணான குந்திதேவி, சூரிய பகவானை நேரில் வரவழைக்கும் மந்திரத்தை உச்சரித்ததால், சூரிய பகவான் அவள்முன் தோன்றினார். அதன் விளைவால் குந்திதேவி குழந்தை பெற்றாள். பழிச்சொல்லுக்கு அஞ்சி அந்தக் குழந்தையை (கர்ணன்) ஒரு பெட்டியில் வைத்து ஆற்றில் விட்டாள்.
அந்தப் பாவம் அவளை வாட்டியது. அதற்குப் பிராயச்சித்தம் செய்ய வேண்டி, உரோமச முனிவரைச் சந்தித்தாள். அவர், "மாசி மக நட்சத்திரத்தன்று ஏழு கடல்களில் ஒரே சமயத்தில் நீராடினால் உன் பாவம் நீங்கும்' என்று சொன்னார். "அது எப்படி ஒரே நாளில் ஏழு கடல்களில் நீராட முடியும்?' என்று பலத்த யோசனையில் ஆழ்ந்த குந்திதேவி, வழி காட்டியருளுமாறு இறைவனை இறைஞ்சினாள். அப்போது, "திருநல்லூர் கோவிலுக்குப் பின்புறம் ஒரு தீர்த்தம் உள்ளது. அதை ஏழு கடலாக நினைத்து மாசி மகத்தன்று நீராடு வாயாக' என்று அசரீரி ஒலித்தது. குந்திதேவியும் அப்படியே செய்து தன் பாவத்திலிருந்து விடு பட்டாள். அவள் நீராடிய தீர்த்தம்- சப்த சாகர தீர்த்தம் என்று அழைக்கப் படுகிறது.
4. தட்சன், சிவபெருமானை நோக்கி பல வருடங்கள் கடுமையாக தவம் மேற்கொண்டான். அதன் பலனால் சிவபெருமான் அவன்முன் தோன்றி, "வேண்டும் வரம் என்ன?' என்று கேட்க, "உமையவள் எனக்கு மகளாகக் கிடைக்க வேண்டும். நான் உமையவளை வளர்க்க வேண்டும். அதன்பின் தக்க பருவத்தில் தாங்கள் மணம்புரிய வேண்டும்' என்று வரம் கேட்டான். இறைவனும் அவன் கேட்டபடி அருளினார். அந்த வரத்தின் படி உமையவள் காளிந்தி நதியில் ஒரு தாமரைப் பூவில் வலம்புரிச்சங்கு வடிவாய் மாசி மக நட்சத்திரத்தன்று தோன்றினாள். அன்றைய தினம் தட்சன் தன் மனைவியுடன் அந்த நதியில் நீராட வந்தபோது, தாமரை மலரில் தோன்றிய வலம்புரிச்சங்கு குழந்தையாக மாறியது. அந்தப் பெண் குழந்தையைக் கண்டெடுத்து வளர்த் தான் தட்சன்.
5. மாசி மகத்தன்றுதான் சுவாமிமலை திருத் தலத்தில், தன் மகன் முருகனிடம் சிவபெருமான் உபதேசம் பெற்றார் என்று சிவபுராணம் கூறுகிறது. அதனால் புதிதாகக் கல்வி கற்பவர்கள்- எந்தக் கல்வியாக இருந்தாலும்- அன்று தகுந்த ஆசிரியரிடம் கற்றால் சிறந்து விளங்கலாம் என்பர்.
6. வல்லாள மகாராஜனுக்கு இறைவனே மகனாக எழுந்தருளினார் என்பதால், ஒவ்வொரு வருடமும் திருவண்ணாமலையார் மாசி மகம் நட்சத்திரத்தில் பள்ளிகொண்டாப் பட்டு என்னும் ஊருக்கு எழுந்தருளி, அந்த மன்னனுக்காக நீத்தார் கடனுக்குரிய வழிபாட்டினை நடத்திவரும் விழா திருவண்ணாமலையில் நடைபெறுகிறது.
பல பெருமைகளைக் கொண்ட மாசி மக நட்சத்திரத்தன்று புனித நீர்நிலையில் நீராடி, விரதம் மேற்கொண்டு இறைவனை வழிபடுவோருக்கு புனிதம் கிட்டுவதுடன், பல பேறுகளும் பெற்று வளமுடனும் நலமுடனும் வாழ்வர்.

எது ஆன்மீகம்? எது பகுத்தறிவு.

பொதுவாக எந்த ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் பெரும்பாலோருக்கு “தான்” என்கின்ற எண்ணமே முன் வந்து நிற்கிறது. “எதுவாக இருந்தாலும் நாங்கள் உணர்ந்தால் தான் நம்புவோம், நாங்கள் கண் கூடாகப் பார்த்தால் தான் நம்புவோம். நாங்கள் பகுத்தறிவுவாதிகள். பகுத்தறிவிற்கு அப்பாற்பட்ட எதையுமே ஏற்க இயலாது” – இதுதான் பலரது உரத்த குரலாக இருக்கிறது.
சரி. எது பகுத்தறிவு? மனிதன் மட்டுமே பகுத்தறிவு படைத்தவன் என்று எந்த உறுதிப்பாட்டில் கூற முடியும்? மிருகங்களுக்கு பகுத்தறிவு இல்லை என்று நிச்சயமாகக் கூற முடியுமா?
ஒளி வட்டம்
மனிதன் மட்டுமல்ல; எல்லா உயிரினங்களுக்குமே ‘பகுத்தறிவு’ உள்ளது என்பதுதான் உண்மை. அந்தந்த உயிரினங்களின் பரிணாம வளர்ச்சிக்கு ஏற்றவாறு அந்த அறிவு அமைந்துள்ளது. ஒரு நாயைப் பார்த்து கல்லை விட்டு எறிந்தால் அது ஏன் ஓடுகிறது? நாம் அடிக்கப் போகிறோம் என்று தெரிந்து கொள்வதினால் தானே! அந்த உணர்வுக்குப் பெயர் என்ன? ‘அனிச்சைச் செயல்’ என்றா சொல்ல முடியும்? அதே போல் ஒரு காகத்தை விரட்டினாலும், குருவியை அதட்டினாலும் அவை பறந்து சென்று விடுகின்றனவே ஏன்? இவன் நம்மை விரட்டுகிறான், தாக்க வருகிறான் என்று அவற்றால் உணர முடிவதால் தானே, அந்த உணர்விற்குப் பெயர் என்ன? – பகுத்தறிவாகத் தானே இருக்க முடியும்? அவை வாழும் உணர்வு உலகத்திற்கேற்ப அந்தப் பகுத்தறிவானது செயல்படுகிறது. அவ்வளவுதான். அதே சமயம் அவற்றின் பகுத்தறிவை மனிதனின் பகுத்தறிவோடு ஒப்பிடுவது மதியீனம். ஏனென்றால் மனிதன் பரிணாம வளர்ச்சியின் உச்சத்தில் இருப்பவன். அவன் அறிவை, அவனை விடக் குறைவான பரிணாம வளர்ச்சி கொண்ட உயிரினங்களுடன் ஒப்பிட இயலாது. எப்படிக் குறைவான பரிணாம வளர்ச்சி கொண்ட குழந்தையின் அறிவுடன், நன்கு வளர்ந்த இளைஞனின் அறிவை ஒப்பிட முடியாதோ அப்படித்தான் இதுவும்.
உண்மையைப் பார்க்கப் போனால் ஐம்புலன்களுக்குத் தான் ஐந்தறிவு. புலன்களுக்கு அப்பாற்பட்ட அறிவான ஆறாம் அறிவைக் கொண்டவன்தான் மனிதன். ஆனால் அவற்றை உணராமல், அதைப் பயன்படுத்தத் தெரியாமல் ஐந்தறிவு படைத்த மிருகங்களைப் போலவே அவன் நடந்து கொள்கிறான். வாழ்கிறான்.
அறிய அறிய விரிவது தான் அறிவு. அறிந்து கொண்ட உண்மைகளை முன் தரவாக வைத்து, அவற்றை அடிப்படையாக வைத்து ஆராய்ந்து, அதன் முடிவுகளைப் பற்றிப் பேசுவது தான் அறிவியல். அறியாத அல்லது அறிய இயலாத உண்மைகளைப் பற்றி அதனால் எப்போதும் முடிவு கூற இயலாது. அதனால் தான் விஞ்ஞானத்திற்கும் மெய்ஞ்ஞானத்திற்கும் அடிக்கடி சச்சரவு ஏற்படுகிறது. ஆனால் ஒரு உண்மையை நாம் முற்றிலும் மறந்து விடுகின்றோம். புத்தம் புதியதாக, இல்லாத ஒன்றை நாம் உருவாக்கி விடவில்லை. ஏற்கனவே வேறு ஒரு ரூபத்தில் இருந்ததை தற்போழுது வெளிக் கொணருகின்றோம், அவ்வளவுதான்.
“இயற்கைக்கு மாறாக எதுவுமே இருக்க முடியாது. அப்படி இருந்தால் அது நிச்சயம் பொய். யாராவது நிரூபித்தால் நான் ஒரு இலட்சம் ரூபாய் தருகின்றேன்.” அறைகூவல் விடுத்தார் திரு. ஆபிரகாம். டி. கோவூர். ஆனால் அவரது அறைகூவலை யாரும் ஏற்கவில்லை. அவரும் நிறைய ஆராய்ச்சிகள் செய்து, பேய், பிசாசுகள் ஆவிகள் இல்லை, எல்லாம் மனநோயின் பல்வேறு வடிவங்களே என்று சிலவற்றை நிரூபிக்கவும் செய்தார். கடவுள் என்ற ஒன்று இருக்கவே முடியாது. ஆத்மா என்ற ஒன்றெல்லாம் கிடையவே கிடையாது என்பது அவர் வாதம். ஆனால் நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும். நம்முடைய அளவிடும் திறன் என்ன? கடவுளைக் கண்ணால் காண முடியவில்லை. ‘ஆத்மா’ என்பதை உணர முடிவதில்லை. உடனே ‘எதுவுமே இல்லை’ என்று கூறிவிடுகின்றோம். நாம் பார்க்க முடியாததெல்லாம் உலகில் இல்லாத பொருள்களா என்ன?
சரி, ஒரு நாயின் கண்களுக்கு, ஒரு மாட்டின் கண்களுக்குத் தெரிவதை உங்களால் காண இயலுமா?( ஓ, மிருகங்களோடு ஒப்பிடக் கூடாது இல்லையா? மன்னியுங்கள். ஆனால் இங்கே வேறு வழியில்லை. அப்படிப் போய்த் தான் உண்மையை ஆராய வேண்டியுள்ளது.) சில வருடங்களுக்கு முன்னால் ஏற்பட்ட சுனாமியின் போது பல இடங்களில் பறவைகளும், ஆடு, மாடுகளும் அதை முன்னரே உணர்ந்து கொண்டு பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று தம்மைக் காப்பாறிக் கொண்டன என்ற செய்தி நாளிதழ்களில் வெளியாகி இருந்தது. பறவைகளும், விலங்குகளும் அதை எப்படி முன்னரே உணர்ந்து கொண்டன? அந்த உணர்விற்குப் பெயர் என்ன? மிருகங்களை விட மிக உயர்ந்த “பகுத்தறிவு” படைத்த மனிதனால் ஏன் அதை முன்னரே உணர முடியவில்லை? உணர்ந்து ஏன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள இயலவில்லை?
சில சமயம் நாய் போன்றவைகள், காதினை விடைத்துக் கொண்டு அங்கும் இங்கும் குரைத்துக் கொண்டு ஓடுவதைப் பார்க்கலாம். அவை ஏன் அப்படிச் செய்கின்றன, நமக்குத் தெரியாது. ஆனால் நம் கண்ணுக்கு எதுவும் தெரிவதில்லை. அது போன்றே மாடுகளும் சில சமயம் மிரளும். ஆனால் நம்மால் அதன் சரியான காரணத்தினை உணர இயலாது. அது ஏன்? இவ்வாறு சில மிருகங்களின் கண்ணுக்குத் தெரிவது, அவை கேட்பது, அவை உணருவது, மற்றும் சில பறவைகளின் கண்களுக்குத் தெரிவது, நம் கண்களுக்குத் தெரிவதில்லை. கேட்பதில்லை. நம்மால் உணர முடிவதில்லை. அது ஏன்? ஆராய்ச்சி செய்திருக்கிறோமா, இல்லை.
நாம் உயர்ந்த பகுத்தறிவு கொண்டவர்களாக இருந்தால் மிருகங்களை விட உயர்ந்த அறிவு நிலையில் இருப்பவர்கள் என்பது உண்மையானால் நம்மால் சுனாமி போன்ற பேரழிவுகளில் இருந்து ஏன் காப்பாற்றிக் கொள்ள முடியாமல் போய் விட்டது? மிருகங்களை விட நாம் மட்டமா? அல்லது நமது அறிவுத்திறனில் ஏதாவது குறைபாடு உள்ளதா?
ஆம். அதுதான் உண்மை. சில விஷயங்களில் நாம் ஐந்தறிவு உயிரினங்களை விட மிக மிக மேம்பட்ட நிலையில் இருந்தாலும், சில விஷயங்களில் அவற்றை விட மிகவும் பின்தங்கியே இருக்கிறோம். அதற்கு காரணமும் உள்ளது. முக்கிய காரணம் ஒருகாலத்தில் இயற்கையோடு இயைந்த வாழ்வை மேற்கொண்டிருந்த நாம், காலச் சூழல் காரணமாக அதற்கு மாறான வாழ்க்கையை நடைமுறையில் வாழ்ந்து கொண்டிருப்பது தான்.
நம்முடைய கேட்கும் திறன் 20-20000 டெசிபல் தான். அதற்கு மேற்பட்ட ஒலியையோ, கீழான ஒலியையோ நம்மால் கேட்க இயலாது. [இப்போதுதான் EVP (Electronic Voice Phenomenon) முறையில் இது போன்ற ஒலிகளைப் பதிவு செய்யும் முறையில் விஞ்ஞானிகள் வெற்றி பெற்று வருகிறார்கள்]. நுண்ணோக்கி இல்லாமல் சிலவற்றைப் பார்க்க முடியவில்லை. உடல் உறுப்புக்களைப் பார்க்க எக்ஸ்ரேயை, ஸ்கேனைப் பயன்படுத்துகின்றோம். இன்னும் தொலைநோக்கி, லேசர் என்று பல வகைகளைப் பயன்படுத்தித் தான் சிலவற்றைப் பார்த்து இன்னதென்று அடையாளம் கண்டுபிடிக்கின்றோம்.
இப்படி பார்வைத்திறனிலே குறைபாடு, கேட்கும் திறனிலே குறைபாடு என்று பலவற்றை நமக்குள் வைத்துக் கொண்டு, அமானுஷ்ய விஷயங்களை, கடவுள் போன்றவற்றை நாம் அளக்க முயன்றால் எப்படிச் சரியான விடை கிடைக்கும்? தவறான அளவு கோலால் அளக்கப்படுவது எதுவானாலும் தவறான முடிவினைத்தானே தரும்?.
ஒருகாலத்தில், இயற்கையோடு இயைந்த வாழ்வு மேற்கொண்டிருந்த காலத்தில் நமக்கு இத்தகைய திறமைகள் இயற்கையாகவே இருந்து, தற்போது பரிணாம வளர்ச்சியின் காரணமாக அவை நம்மை விட்டு நீங்கியிருந்தால்..?? இயற்கைக்கு மாறாக வாழ்ந்து நாம் அவற்றை இழந்திருந்தால்…. நம்மால் எதையும் சரிவர உணர முடியாது அல்லவா?
பரிணாம வளர்ச்சியின் காரணமாக, படிப்படியாக வால், உடலெங்கும் முடி, மிக நீண்ட கூரிய நகங்கள் போன்றவற்றை இழந்த நாம் இது போன்ற பல் வகை ஆற்றல்களையும் இழந்திருந்தால் நம்மால் எந்த விதக் கருவி, உபகரணம் ஏதும் இல்லாமல் எதையுமே தெளிவாகக் காண முடியாது அல்லவா?
ஒரு வேளை கடவுள், ஆவிகள், தேவதைகள் போன்றவர்கள் காலம், இடம், பொருள் என்று எல்லாவற்றையும் கடந்த, வேறு பரிமாணத்தில் இருக்கின்றவர்களாக இருந்தால்! (அது தான் உண்மையும் கூட). நம் தவறான அளவுகோலால் எப்படிச் சரியான மதிப்பீடு பெற முடியும்? ஆகவே இதற்குத் தேவை நுண்ணிய ஆராய்ச்சி மட்டுமே. அதை விடுத்து அரை குறைக் கருவிகளை வைத்துக் கொண்டு அளப்பதால் எந்தப் பயனும் ஏற்படாது.
உடலின் ஏழு சக்கரங்கள்
நிலவில் நீர் இருப்பதை இன்று தான் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆனால் நமது இந்திய வானியல் சாத்திரத்தில் இதையெல்லாம் முன்பே சொல்ல்யிருக்கிறார்கள்.
ஆகவே, சாதாரண மானுடர்களால் ஒரு செயல் முடியாது என்றால் அது நிகழவே நிகழ முடியாது என்பது பொருளல்ல. நம் மூளையின் ஆற்றலை நாம் வெறும் 8% சதவிகிதம் கூட சரிவரப் பயன்படுத்துவதில்லை. மீதிப் பகுதியையும் நாம் உணர்ந்து, அறிந்து, தெளிந்து பயன்படுத்த ஆரம்பித்தால் நாம் கடவுளை அடையலாம்.

மதுவால் மரணமடைந்த ஸ்ரீதேவி: துபாய் போலீஸ் தகவல்..

போதையில் நீரில் மூழ்கியவருக்கு இந்தியாவின் குடியரசுத்தலைவர் முதல் நடிகர்கள் வரை இறங்கல்....
மீடியா இடைவிடமா BREAKING NEWS....

பசிக்கு 1 கிலோ அரிசி திருடயதற்கு கொல்லப்பட்டது பற்றி செய்திகள் இல்லை
12 வயது சிறுமியை கற்பழித்தது பற்றிய செய்திகள் இல்லை. தலைவர்களின் கண்டனங்கள் இல்லை.....
1590 பேரை கொன்றவனை போற்றி புகழுது உலகம் ,, அவருக்கு எந்த தலைவனும் கண்டனம் தெரிவிக்க வில்லை ,, எந்த ஊடகமும் முச்சே விடவில்லை
Image may contain: 1 person, smiling, closeup
ஒரு ராணுவர் வீரர் போன வாரம் இறந்து போனார். அவர் மனைவியும் ராணுவ வீராங்கனை, பிறந்து 10 நாளான கை குழந்தையுடன் , ராணுவ உடையுடன் வந்து இறுதி மரியாதை செய்தார். அதை இந்திய சில ஊடகங்கள் சிறிதாக காட்டி போய் விட்டது. தமிழக ஊடகங்கள் அதை காட்டவே இல்லை
பண்பாடு, ஒழுக்கம் இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டு விலங்குகள்போல் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்ற கோட்பாட்டோடு வாழும் இவர்களுக்கெல்லாம் இவ்வளவு மரியாதை தேவையல்ல.
இவருக்கு கொடுத்த மரியாதையை பாருங்கள் ,, திரையுலகம் அதிர்ச்சியாம்,, தலைவர்கள் வேதனை அடைந்தனராம் ..
நாம் எந்த மாதிரி சமுதாயத்தில் வாழ்கிறோம்.
இது தான் நம் நாட்டின் சாபக்கேடு...

Monday, February 26, 2018

வாழ்வில் வெற்றி தரும் ராசிகளுக்கு உண்டான எந்திரங்களும் மூலிகையும் :

வாழ்வில் வெற்றி அடைய வேண்டும் என்றே ஒவ்வொரு மனிதனும் உழைத்துக்கொண்டு இருக்கிறான். மலையளவு நாம் உழைத்தாலும் கடுகளவாவது அதிர்ஷ்டம் வேண்டும் என்கிறது ஒரு முதுமொழி, அப்படி அதிர்ஷ்டங்களை வாரி வழங்குவது ஒவ்வொரு ராசியினருக்குமான யந்திரமும் அதற்க்கு உண்டான மூலிகைகளும் ஆகும். இந்த எந்திரங்களை உரிய தகட்டில் எழுதி ஒரு இலட்சம் மந்திர உருவேற்றி தாயத்தில் அடைத்து கழுத்தில் அணிந்துகொள்ள சகல காரியங்களும் வெற்றியடையும். கீழே வாழ்வில் வெற்றி அடைய எந்திரங்களும் அதற்க்கு உண்டான மூலிகைகளும் 12 ராசிகளுக்கும் தரப்பட்டுள்ளது.
1.மேஷம் : வாழ்வில் வெற்றி அடைய
பால ஷண்முகா எந்திரம்
வைகுண்ட மூலிகை
மேஷம் இராசியில் பிறந்தவர்கள் பால ஷண்முகா எந்திரம் எழுதி வைகுண்ட மூலிகை என்னும் தும்பை செடிக்கு ஞாயற்று கிழமையும் அஷ்டமியும் கூடிய நாளில் முறைப்படி காப்பு கட்டி படையலிட்டு பலி கொடுத்து வேர் எடுத்து மேற்படி எந்திரத்துடன் தாயத்தில் அடைத்து மந்திர உரு ஒரு இலட்சம் உருவேற்றி அணிந்து கொள்ள சகல காரியங்களும் சித்தியாகும், வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும்.
2. ரிஷபம் : வாழ்வில் வெற்றி அடைய
மஹா லக்ஷ்மி எந்திரம் அம்மன் பச்சரிசி
ரிஷப இராசியில் பிறந்தவர்கள் ஸ்ரீ மஹா லக்ஷ்மி எந்திரம் எழுதி அம்மன் பச்சரிசி மூலிகை செடிக்கு வளர்பிறை செவ்வாய் கிழமை குரு ஹோரையில் முறைப்படி காப்பு கட்டி படையலிட்டு பலி கொடுத்து வேர் எடுத்து மேற்படி எந்திரத்துடன் தாயத்தில் அடைத்து மந்திர உரு ஒரு இலட்சம் உருவேற்றி அணிந்து கொள்ள சகல காரியங்களும் சித்தியாகும், வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும்.
3.மிதுனம் : வாழ்வில் வெற்றி அடைய
ஸ்ரீ தன ஆகர்ஷண எந்திரம்
அற்ற இலை ஒட்டி
மிதுன இராசியில் பிறந்தவர்கள் ஸ்ரீ தன ஆகர்ஷண எந்திரம்
எழுதி அற்ற இலை ஒட்டி மூலிகை செடிக்கு வளர்பிறை வியாழக்கிழமை நவமி திதியும் கூடிய நாளில் முறைப்படி காப்பு கட்டி படையலிட்டு பலி கொடுத்து வேர் எடுத்து மேற்படி எந்திரத்துடன் தாயத்தில் அடைத்து மந்திர உரு ஒரு இலட்சம் உருவேற்றி அணிந்து கொள்ள சகல காரியங்களும் சித்தியாகும், வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும்.
4.கடகம் : வாழ்வில் வெற்றி அடைய
ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி எந்தரம்
சிவப்பு நத்தைச்சூரி
கடக இராசியில் பிறந்தவர்கள் ஸ்ரீ துர்காபரமேஸ்வரி எந்திரம்
எழுதி சிவப்பு நத்தைச்சூரி மூலிகை செடிக்கு தேய்பிறை புதன்கிழமை நவமி திதியும் கூடிய நாளில் முறைப்படி காப்பு கட்டி படையலிட்டு பலி கொடுத்து வேர் எடுத்து மேற்படி எந்திரத்துடன் தாயத்தில் அடைத்து மந்திர உரு ஒரு இலட்சம் உருவேற்றி அணிந்து கொள்ள சகல காரியங்களும் சித்தியாகும், வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும்.
5.சிம்மம் : வாழ்வில் வெற்றி அடைய
சிதம்பர சக்கர எந்திரம்
வெள்ளை விஷ்ணு கிராந்தி
சிம்ம இராசியில் பிறந்தவர்கள் ஸ்ரீ சிதம்பர சக்கர எந்திரம்
எழுதி வெள்ளை விஷ்ணு கிராந்தி மூலிகை செடிக்கு வளர்பிறை ஞாயற்றுக்கிழமை நாளில் சூர்யோதய வேளையில் முறைப்படி காப்பு கட்டி படையலிட்டு பலி கொடுத்து வேர் எடுத்து மேற்படி எந்திரத்துடன் தாயத்தில் அடைத்து மந்திர உரு ஒரு இலட்சம் உருவேற்றி அணிந்து கொள்ள சகல காரியங்களும் சித்தியாகும், வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும்.
6.கன்னி : வாழ்வில் வெற்றி அடைய
ஸ்ரீ சுதர்ஷன எந்திரம்
கருந்துளசி
கன்னி இராசியில் பிறந்தவர்கள் ஸ்ரீ சுதர்சனசக்கர எந்திரம்
எழுதி வெள்ளை கருந்துளசி மூலிகை செடிக்கு வளர்பிறை வெள்ளிக்கிழமை நாளில் சூர்யோதய வேளையில் முறைப்படி காப்பு கட்டி படையலிட்டு பலி கொடுத்து வேர் எடுத்து மேற்படி எந்திரத்துடன் தாயத்தில் அடைத்து மந்திர உரு ஒரு இலட்சம் உருவேற்றி அணிந்து கொள்ள சகல காரியங்களும் சித்தியாகும், வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும்.
7.துலாம் : வாழ்வில் வெற்றி அடைய
ஸ்ரீ சூலினி எந்த்ரம்
செந்நாயுருவி
துலாம் இராசியில் பிறந்தவர்கள் ஸ்ரீ சூலினி எந்திரம்
எழுதி செந்நாயுருவி மூலிகை செடிக்கு வளர்பிறை செவ்வாய்க்கிழமை நாளில் ரோஹிணி நட்சத்திரமும் கூடிய வேளையில் முறைப்படி காப்பு கட்டி படையலிட்டு பலி கொடுத்து வேர் எடுத்து மேற்படி எந்திரத்துடன் தாயத்தில் அடைத்து மந்திர உரு ஒரு இலட்சம் உருவேற்றி அணிந்து கொள்ள சகல காரியங்களும் சித்தியாகும், வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும்.
8.விருச்சிகம் : வாழ்வில் வெற்றி அடைய
பால ஷண்முக சடாச்சர எந்தரம்
தலைச்சுருளி
விருச்சிகம் இராசியில் பிறந்தவர்கள் ஸ்ரீ பால ஷண்முக சடாச்சர எந்திரம் எழுதி தலைச்சுருளி மூலிகை செடிக்கு வளர்பிறை வியாழக்கிழமைநாளில் பூரட்டாதி நட்சத்திரமுமகூடிய வேளையில் முறைப்படி காப்பு கட்டி படையலிட்டு பலி கொடுத்து வேர் எடுத்து மேற்படி எந்திரத்துடன் தாயத்தில் அடைத்து மந்திர உரு ஒரு இலட்சம் உருவேற்றி அணிந்து கொள்ள சகல காரியங்களும் சித்தியாகும், வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும்.
9.தனுசு : வாழ்வில் வெற்றி அடைய
ஸ்ரீ தனாகர்ஷன குபேர எந்த்ரம்
சிவனார் மூலி
தனுசு இராசியில் பிறந்தவர்கள் ஸ்ரீ தனாகர்ஷன குபேர எந்திரம்
எழுதி சிவனார் மூலி மூலிகை செடிக்கு வளர்பிறை வியாழக்கிழமை நாளில் ஏகாதசி திதியும் கூடிய வேளையில் முறைப்படி காப்பு கட்டி படையலிட்டு பலி கொடுத்து வேர் எடுத்து மேற்படி எந்திரத்துடன் தாயத்தில் அடைத்து மந்திர உரு ஒரு இலட்சம் உருவேற்றி அணிந்து கொள்ள சகல காரியங்களும் சித்தியாகும், வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும்.
Image may contain: 1 person, smiling
10.மகரம் : வாழ்வில் வெற்றி அடைய
ஸ்ரீ கால பைரவ எந்த்ரம்
யானை வணங்கி
மகரம் இராசியில் பிறந்தவர்கள் ஸ்ரீ கால பைரவ எந்திரம்
எழுதி யானை வணங்கி மூலிகை செடிக்கு விநாயகர் சதுர்த்தி நாளில் முறைப்படி காப்பு கட்டி படையலிட்டு பலி கொடுத்து வேர் எடுத்து மேற்படி எந்திரத்துடன் தாயத்தில் அடைத்து மந்திர உரு ஒரு இலட்சம் உருவேற்றி அணிந்து கொள்ள சகல காரியங்களும் சித்தியாகும், வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும்.
11.கும்பம் : வாழ்வில் வெற்றி அடைய
ஸ்ரீ கணபதி எந்த்ரம்
தகரை
கும்பம் இராசியில் பிறந்தவர்கள் ஸ்ரீ கணபதி எந்திரம்
எழுதி தகரை மூலிகை செடிக்கு வைகாசி மாதம் தேய்பிறை சதுர்த்தி நாளில் முறைப்படி காப்பு கட்டி படையலிட்டு பலி கொடுத்து வேர் எடுத்து மேற்படி எந்திரத்துடன் தாயத்தில் அடைத்து மந்திர உரு ஒரு இலட்சம் உருவேற்றி அணிந்து கொள்ள சகல காரியங்களும் சித்தியாகும், வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும்.
12.மீனம் : வாழ்வில் வெற்றி அடையஸ்ரீ தனாகர்ஷண குபேர எந்த்ரம்
குப்பை மேனி
மீன இராசியில் பிறந்தவர்கள் ஸ்ரீ தனாகர்ஷண குபேரஎந்திரம்
எழுதி குப்பை மேனி மூலிகை செடிக்கு சூரிய கிரகண நாளில் முறைப்படி காப்பு கட்டி படையலிட்டு பலி கொடுத்து வேர் எடுத்து மேற்படி எந்திரத்துடன் தாயத்தில் அடைத்து மந்திர உரு ஒரு இலட்சம் உருவேற்றி அணிந்து கொள்ள சகல காரியங்களும் சித்தியாகும், வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும்.
மேற்படி எந்திரங்கள் உரிய மூலிகைகளுடன் வைத்து ஒருலட்சம் உருவேற்றப்பட்ட தாயத்துகள் கிடைக்கும்.

கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள்!

கருஞ்சீரகத்தில் நறுமண எண்ணெய் உள்ளது. அது வயிற்று உப்புசம் மற்றும் வலியை நீக்கி, கழிவுகளை எளிதாக வெளியேற்றும்தன்மை கொண்டது. இரைப்பையில் பக்டீரியாவால் உண்டாகும் நோய்த் தொற்று மற்றும் குடலில் உள்ள தேவையற்ற பூச்சிகளை அழிக்கும்.

கருஞ்சீரக பொடியை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து, சுடுநீரில் கலந்து, சிறிதளவு தேனும் சேர்த்து பருகினால் சிறுநீரக கற்களும், பித்தப்பை கற்களும் கரையும். இதை காலை, மாலை இருவேளை சாப்பிடலாம்.Image may contain: outdoor
கருஞ்சீரகத்தில் "தைமோகியோனின்" என்ற வேதிப்பொருள் உள்ளது. இது சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. இதில் உடலுக்கு நன்மை செய்யக்கூடிய கொழுப்பு உள்ளதால் கெட்ட கொழுப்பு குறையும். ஒவ்வாமையும் நீங்கும்.
தோல் நோய்களுக்கு கருஞ்சீரகம் சிறந்த மருந்து. இதனை பொடி செய்து கரப்பான் மற்றும் சொரியாஸிஸ் நோய் இருப்பவர்கள் தேய்த்து குளித்து வரலாம். புண்களால் ஏற்படும் தழும்புகளும் மறையும். குளியலுக்கு பயன்படுத்தும் பொடிகளில் கருஞ்சீரகத்தை அரைத்து சேர்த்து, பயன்படுத்துவது நல்லது.
Image may contain: food
சில பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் இருக்கும். அந்த நாட்களில் அடிவயிறு கனமாகி, சிறுநீர் வெளியேறுவதில் சிரமம் ஏற்படும். இதற்கு கருஞ்சீரகம் மருந்தாக பயன்படுகிறது. அதனை வறுத்து லேசாக வெடிக்க விட்டு தூள் செய்து வைத்துக்கொண்டு மாதவிடாய் ஏற்படும் தேதிக்கு பத்து நாட்கள் முன்பிருந்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தினமும் இருவேளை தேன் அல்லது கருப்பட்டி கலந்து சாப்பிடவேண்டும். இது மாதவிடாய் சிக்கலை போக்கும். வயிறு கனம் குறைந்து, சிறுநீர் நன்றாக பிரியும்.
பிரசவத்திற்கு பின்பு கருப்பையில் உள்ள அழுக்கை நீக்க, குழந்தை பெற்ற மூன்றாவது நாளில் இருந்து, ஒரு தேக்கரண்டி கருஞ்சீரக பொடியுடன் பனைவெல்லம் கலந்து உருண்டை செய்து காலை, மாலை ஐந்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும். கருஞ்சீரகம் பல முக்கியமான சித்த மருந்துகளில் சேர்க்கப்படுகிறது.

'வெற்றி அடைவது, தோல்வி பெறுவது...!

இந்த இரண்டில் எது பிடிக்கும் உங்களுக்கு?’என்று எவரேனும் உங்களிடம் கேட்டால், நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்?
'என்ன இது, பைத்தியக்காரத்தனமான கேள்வியா இருக்கே? ஜெயிக்கறதுதான் சுகம்; அதுதான் கம்பீரம்.
யாராவது தோத்துப் போறதுக்கு ஆசைப்படுவாங்களா?’என்பீர்கள்.
நீங்கள் மட்டுமல்ல... இந்த உலகில் உள்ள சகல மனிதர்களும் வெற்றி பெறுவதற்குத்தான் ஆசைப்படுவார்கள்.
அந்த வெற்றியில் அகம் மகிழ்ந்து போவார்கள்; நெஞ்சு நிமிர்த்திக் கொள்வார்கள்.
அதேநேரம், தோல்வி வந்துவிட்டால், துவண்டு கதறுவார்கள்; கண்ணீர் விட்டுப் புலம்புவார்கள்.
வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வருவதுதான் வாழ்க்கை. அதே நேரத்தில், நாம் யாரிடம் வெற்றி பெற வேண்டும், எவரிடம் தோல்வியைத் தழுவ வேண்டும் என்று மறைமுகமாக நமக்கு அருளியிருக்கிறார் பகவான்.
பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்குத் தாமோதரன் எனும் திருநாமம் உண்டு. தாம்புக் கயிற்றால் ஸ்ரீகிருஷ்ணரின் இடுப்பில் கட்டிய கதையைத்தான் நாம் அறிவோமே!
இந்த உலகையே கட்டியாள்கிற கிருஷ்ண பரமாத்மா, ஒரு சிறிய தாம்புக் கயிற்றுக்குக் கட்டுண்டு கிடந்தான்.
கயிற்றை எடுத்து அவனது இடுப்பில் சுற்றிக் கட்டலாம் என்றால், லேசாகப் பெருத்தான் கண்ணபிரான். கயிற்று முனைகளைக் கட்டுவதற்கு இரண்டு அங்குல இடைவெளி இருந்தது. இன்னொரு கயிற்றைச் சேர்த்து, முடிச்சுப் போட்டுக் கட்ட முனைந்தார்கள். இன்னும் சற்றுப் பெருத்தான். இப்போதும் இரண்டு அங்குல இடைவெளி இருந்தது.
இன்னொரு கயிறு, இன்னொரு இரண்டு அங்குல பருமன்... என்றே இந்த விளையாட்டு நிகழ்ந்து கொண்டிருக்க... அவன் அம்மா சோர்ந்து போனாள். ஆனால், கண்ணன் களைப்படையவில்லை.
அந்தத் தருணத்தில்தான் பகவான் யோசித்தான். ''அடேடே..! இப்போது நாம் யாரிடம் நம் வீரத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறோம்? இதோ... தோல்வியைக் கண்டு அம்மா துவண்டுவிட்டாளே! பாவம் அவள்’ என்று எண்ணியவன், 'இந்த என்னுடைய திமிர்த்தனத்தை உன்னிடம் காட்டியது தவறுதான் தாயே! இந்தாம்மா... என்னைக் கயிற்றில் கட்டிக்கொள்’என்பதுபோல், பருமனைக் குறைத்துக் கொண்டு நின்றான்.
உடனே, குறும்புக் கண்ணனைக் கயிற்றில் கட்டிப்போட்டாள் தாய். நம்முடைய தாய் - தந்தையிடம் தோற்றுப் போவதில் தப்பே இல்லை என்பதை எவ்வளவு சூசகமாக, அழகாக, தெளிவாகச் சொல்லியிருக்கிறான் ஸ்ரீகண்ணபிரான்.
பகவான், கயிற்றுக்கெல்லாம் கட்டுப்படாதவர். பிறகு..?
அவர் அன்புக்கும் பாசத்துக்கும் கட்டுப்படுபவர். காதலுக்கும் பிரேமைக்கும் கட்டுண்டு கிடப்பவர்.
இதனை, 'கண்ணிநுண் சிறுத்தாம்புடன் கட்டுண்டப் பண்ணிய பெரு மாயன்...’எனும் அழகிய பாடல் அற்புதமாக விளக்குகிறது.
ஸ்ரீகிருஷ்ணரின் இடுப்பிலே அந்தக் கயிற்றுத் தழும்பைக் காணலாம். அது தழும்பு அல்ல; பட்டம்.
நெற்றியில் கிரீடம் சூட்டிக்கொண்டால், திருமண் இட்டுக் கொண்டால் அந்த இடத்தில் தழும்பேறிக் கிடக்கும், அல்லவா... அப்படித்தான் இது!
அந்தப் பட்டம் எதை உணர்த்துகிறது தெரியுமா? 'அடியவர்கள் எவராக இருந்தாலும், அவர்களுக்கு நான் கட்டுண்டு கிடப்பேன்’ என்பதைத்தான் அந்தத் தழும்பின் மூலம் நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறார், பகவான் ஸ்ரீகிருஷ்ணர்!
ஆகவே, தாய்- தந்தையிடம் தர்க்கம் வேண்டாம்; சண்டையும் பூசலும் அவசியமில்லை. வெற்றி - தோல்வி என்பதெல்லாம் முக்கியமில்லை. அவர்கள் வெற்றி பெற்றால், அதற்காக மகிழ்வது நீங்கள்தான். பூரிப்பது நீங்கள்தான்!
சரி... ஸ்ரீகிருஷ்ணர் பெற்றோரிடம் தோற்றதைப் பார்த்தோம். ஸ்ரீராமர் தோற்றது தெரியுமா? அவர் யாரிடம் தோற்றுப் போனார் என்பதை அறிவீர்களா?
கோதாவரி நதி. ஸ்ரீராமபிரானுக்கும் சீதாப்பிராட்டிக்கும் நீச்சல் போட்டி. நதிக்கு நடுவில் உள்ள பாறையை யார் முதலில் தொட்டுவிட்டுக் கரைக்கு வருகிறார் என்பது தான் போட்டி.
அந்தப் பாறையின் மேலே நடுவராக அமர்ந்திருக்கிறார் ஸ்ரீலட்சுமணர்.
ராவணன் எனும் அரக்கனையே அழித்தொழிக்க அவதரித்த ஸ்ரீராமருக்கு இதெல்லாம் ஒரு போட்டியா என்ன?
கரையில் இருந்து சீதை பதினைந்து அடி தூரத்தைக் கடப்பதற்குள், அவர் பாறையைத் தொட்டுவிட்டுத் திரும்பி, பாதி தூரத்தைக் கடந்து வந்து கொண்டிருக்கிறார்.
இறுகிய முகத்துடன், மூச்சிழுத்துக்கொண்டு, கைகளை வீசி, கால்களை உதைத்து அரக்கப்பரக்க நீச்சலடித்துக்கொண்டு, பாறையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறாள் சீதை.
பரிதவிப்பான சீதையின் திருமுகத்தைப் பார்த்ததும், ஸ்ரீராமபிரானுக்குள் ஒரு யோசனை...
'இங்கே அரக்கனுடனா எனக்குப் போட்டி?
யாரை வெல்ல இப்படி மல்லுக்கட்டி க்கொண்டு, வெற்றி பெறும் முனைப்புடன் வெறித்தனமாக நீச்சலடிக்கிறேன்?
இதோ... இவள் என் பிரிய சகி அல்லவா? என் அன்புக்கு உரிய இல்லாள் அல்லவா? அவளைத் தோற்கடித்துவிட்டு, அந்த வெற்றியை எங்கே, எவரிடம் பகிர்ந்துகொண்டு கொண்டாடுவதாம்?
தீராத பகையாளியைத் தோற்கடிக்கிற புத்தியுடன் அல்லவா இந்தப் போட்டியில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறேன்?’ என்று நினைத்த ஸ்ரீராமர், அப்படியே தண்ணீருக்குள் மூழ்கினார்; அங்கேயே அப்படியே அமர்ந்து கொண்டார்.
அதையடுத்து, சீதாதேவி வேகமாக நீந்திக் கரையை அடைந்தாள்; வெற்றியும் பெற்றாள். அதுவரை நடுவராக இருந்த ஸ்ரீலட்சுமணர், தடாலென்று கட்சி மாறி, அண்ணியாருடன் இணைந்து, 'என்ன அண்ணா! அடடா! இப்படி அநியாயமா தோத்துப் போயிட்டீங்களே’என்று ஸ்ரீராமரைக் கேலி செய்தார். சீதையும் ஸ்ரீராமரை வெகுவாகக் கேலி செய்தாள்.
அசோகவனத்தில் சிறை இருந்தபோது, ஸ்ரீராமரை நினைத்தபடியே கிடந்தபோது, அங்கே ஸ்ரீஅனுமன் வர... அவனிடம் இந்தச் சம்பவங்களையெல்லாம் எடுத்துச் சொல்லி, 'ஹூம்... அவரும் நானும் எப்படியெல்லாம் சந்தோஷமும் குதூகலமுமாக வாழ்ந்தோம், தெரியுமா?’என்றபடி ஏக்கப் பெருமூச்சு விட்டாளாம்!
இதைத்தான், 'பத்தினிக்குத் தோற்பான் பரம ரசிகன்’என்று சொல்லி வைத்தனர் நம் முன்னோர்.
'மனைவியைத் தோற்கடித்துவிட்டு வெற்றி பெற்ற பூரிப்பை எவரிடம் சொல்லிப் பெருமைப்பட முடியும்?
அவளிடம் தோற்றுப் போனால், அந்தத் தோல்வியைக்கூட அவளிடம் பெருமைபடப் பேசி மகிழலாம்!
இன்னும் சொல்லப் போனால், மனைவியிடம் தோற்றுப் போனால், வாழ்வில் ஜெயிக்கலாம்!
ஆக, பெற்றோர்களுக்குக் கட்டுப்படுவதை ஸ்ரீகண்ணனும், மனைவிக்கு விட்டுக்கொடுப்பதை ஸ்ரீராமபிரானும் நமக்கு மிகத் தெளிவாக உணர்த்தியிருக்கிறார்கள். உணர்ந்து, தெளிந்து, செயல்படுபவர்கள் பாக்கியவான்கள்!
இந்த அருங்குணங்களால் திளைத்த ஸ்ரீஆண்டாள், 'கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா’என்று உருகிப் பாடுகிறாள்.
சீதாபிராட்டியிடம் 'மாயாசிரஸ்’ கொண்டு வந்து காட்டுகிறான் ராவணன்.
'இதோ, உன் கணவனின் தலை. அவன் இறந்துவிட்டான்’ என்று மாயத் தோற்றத்தை, கொய்த தலையைக் கையில் வைத்துக் காட்டுகிறான்.
'ஸ்ரீராமர் உயிருடன் இருக்கிறார்’எனும் தகவல் ஏற்கெனவே தெரிந்துவிட்டது சீதாவுக்கு!
எனவே, அவள் கலகலவெனச் சிரித்துக்கொண்டே, 'அவர் சாகவில்லை’ என்றாள்.
'எப்படிச் சொல்கிறாய்?’என்று ராவணன் கேட்டான்.
அதற்கு அவள், ''எப்போது நான் உயிருடன் இருக்கிறேனோ, அப்போது அவரும் உயிருடன் இருக்கிறார் என்றுதான் அர்த்தம். இப்போது, அவர் உயிருடன் இருக்கிறார். ஒருவேளை நீ சொல்வது போல், அவர் உயிருடன் இல்லையெனில், இந்நேரம் நானும் உயிருடன் இருந்திருக்க மாட்டேன்!'' என்றாள்.
'நீயின்றி நானில்லை; 'நானின்றி அவனில்லை!’ என்பார்கள். பரஸ்பரம் இந்த முக்கியத்துவத்தையும் பேரன்பையும் உணர்ந்துவிட்டால், அந்தத் தம்பதியை எவராலும் எப்போதும் எதுவும் செய்துவிட முடியாது!
நம்மிடம் உள்ள குணங்களில் ஏதேனும் ஒன்று நம்மைப் போலவே வேறொருவருக்கும் இருந்தால், சட்டென்று அவர்கள் மீது சிநேகிதம், பிரியம், வாஞ்சை... நமக்கு வரும் அல்லவா?!
பகவானும் அப்படித்தான்...
அவனுடைய குணங்கள் நம்முடைய குணங்களாக இருந்துவிட்டால், இறைவன் நமக்கு சிநேகிதனாக, பிரியம் உள்ளவனாக, வாஞ்சை உள்ளவனாக இருப்பான்!
ஹரே கிருஷ்ணா
விஸ்வநாதன் பவுன்சாமி.
Image may contain: 1 person

Friday, February 23, 2018

நினைவின் குறிப்புகள் ..ஜெ.............

ஜெயலலிதாவுக்கு ஆங்கில தேதிப்படி இன்று பிறந்தநாள் அவர் இருந்த காலத்தில் பிப் 24இல் பிறந்தநாள் கட்சியினர் கொண்டாடினாலும் , மாசி மகத்தன்று. (நட்சத்திரப்படி ) தமிழ் கலாச்சாரப்படி தனது பிறந்த தினத்தினை கோயிலுக்கு சென்று அவர் கொண்டாடினார்
அவரது 60 வயது பூர்த்தி அன்று திருக்கடையூர் சென்று கொண்டாடியதை கூட நினைவு கூறமுடியும்.
தமிழ், தமிழர் என்று சொல்லுபவர்கள் கடைபிடிக்காத தமிழ் தமிழர் பண்பாட்டை கடைபிடித்தவர் ஜெ .
மாசி மகம் மார்ச் 1 ஆம் தேதி வருகிறது அதிமுக கட்சியினர் அன்றும் விமர்சையாக ஜெ பிறந்ததாளை கொண்டாடவேண்டும்.
அன்றுதான் ஆங்கில தேதியில் பிறந்தநாள் கொண்டாடும் ஸ்டாலின் பிறந்ததினம்.
இருந்த போதும் சரி , இறந்தபோதும் சரி ஜெ திமுகவுக்கு பயம் தருகின்ற சிங்கம்தான்.
Image may contain: one or more people and text
Image may contain: 1 person, smiling, selfie and closeup

உங்களுக்குச் சக்தி இருக்கிறதா.., இல்லையா...? என்று பாருங்கள்...!

சாமியை நீங்கள் நம்புகின்றீர்கள்; சாமியாரை நம்புகின்றீர்கள்; உங்கள் எண்ணத்திற்குள் உங்கள் உணர்விற்குள் இவ்வளவு பெரிய சக்தி இருக்கின்றது.
நீங்கள் ஏன் இதைச் செய்ய மாட்டேன் என்கின்றீர்கள்.
இப்படி சொல்லிக் கொண்டிருப்போம். அடுத்தாற்போல், "கஷ்டம் என்னை விட்டுப் போகமாட்டேன் என்கின்றது…!" என்று சாமியிடம் வரம் கேட்கத்தான் வருகின்றீர்கள்.
நீங்கள் என்ன செய்ய வேண்டும்…? இந்த அருள் வாக்கைப் பெறவேண்டும்.
மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும், எங்கள் தொழில் நன்றாக இருக்க வேண்டும், எங்கள் நோய் நீங்க வேண்டும்; நாங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று இதைக் கேளுங்கள் என்று சொன்னால் யாரும் கேட்டதில்லை.
1.மாறாக எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கின்றது,
2.குடும்பத்தில் கஷ்டமாக இருக்கிறது என்று தான் சொல்கின்றீர்கள்.
மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் குடும்பத்தில் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அந்தச் சக்தியை வேண்டும் என்று கேட்டு வாங்கத் தெரியவில்லையே….!
காசைக் கொடுத்துவிட்டு "சரணாகதித் தத்துவம்" என்று கஷ்டத்தையெல்லாம் சொல்லிவிட்டால் "அவன் பார்த்துக் கொள்வான்…!" என்று எண்ணும் அந்த எண்ணம் இன்றும் நம்மை விட்டு நீங்கவில்லையே….!
இப்படிச் சொல்லும் பொழுது என்ன நடக்கின்றது…?
1.சாமி நம்மை அல்லவா எடுக்கச் சொல்கின்றார்.
2.இந்தச் சாமியிடம் (என்னிடம்) சென்று என்ன பண்ணுவது…? என்று எண்ணுகிறார்கள்.
ஜோசியக்கார சாமியாரிடம் சென்றால் பணம் வரும்… எல்லாம் வரும்… சொத்து வரும்…! என்று சொன்னால் அங்கே ஓடுவார்கள்.
அதற்கு இவ்வளவு காணிக்கை செய்ய வேண்டும்; இந்த யாகம் செய்ய வேண்டும் என்றால் அதற்காக காசைக் கொடுத்துவிட்டு அவர்கள் சொன்னதைக் கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
1.இருந்த இடத்திலேயே நீங்கள் எதையும் பெறமுடியும்.
2.இருந்த இடத்திலேயே வலிமையைப் பெறமுடியும்.
3.இருந்த இடத்திலேயே அருள் சக்தி பெறமுடியும்.
4.இருந்த இடத்திலிருந்தே உங்கள் எண்ணத்தை உயர்ந்த நிலைக்குக் கொண்டு வர வேண்டும்.
ஆகவே உங்களை நம்புங்கள்…!
உங்கள் உயிரை ஈசனாக மதியுங்கள்;
உங்கள் உடலைச் சிவமாக மதியுங்கள்;
உங்கள் கண்களைக் கண்ணனாக மதியுங்கள்.
உங்கள் எண்ணத்தைச் சீதா ராமனாக எண்ணுங்கள்.
நாம் சேர்த்துக் கொண்ட உணர்வுகள் அனைத்தும் வினையாக வித்தாக எண்ணுங்கள். எத்தனை கோடி எண்ணங்களை எண்ணுகின்றோமோ அவையெல்லாம் வித்து.
அவை அனைத்தும் அருள் ஞான வித்தாக நாம் ஊன்றும் பொழுது தீமைகளை அடக்கும் வல்லமை பெறுகின்றது. அதையே வினையாக்கி கணங்களுக்கு அதிபதியாக கணபதியாக்க வேண்டும்.
அவ்வாறு ஆக்கிவிட்டால் நமது ஆறாவது அறிவாக கார்த்திகேயனாக மாறுகின்றது.
அண்டம் - பிண்டத்திற்குள் இயக்கும் உணர்வின் ஆற்றலைத் தெளிவாக்கியது தான் "காவியம்". உணர்வின் தன்மையை காவியமாக்கிக் கருத்தினை நாம் நுகரும்படி செய்தார்கள் ஞானிகள்.
கோவிலுக்குள் நாம் சென்றாலும் கல்லைக் கடவுளாக்கி விட்டோம். நமது மனதைக் கடவுளாக்கி விட்டோம். ஏனென்றால் கல்லின் ரூபமாக நற்குணங்களை எடுக்கச் செய்கின்றார்கள்.
1.கல்லாக இருப்பது துவைதம்.
2.கனியாக இருப்பது துவைதம்.
3.மலராக இருப்பது துவைதம்.
4.சுடராகத் தெரிவதும் துவைதம்.
நாம் பார்ப்பது அனைத்தும் துவைதம். அதனுடைய நிலைகளை எண்ணி எடுப்பது அத்வைதம், நாம் நுகர்ந்தறிவது விசிஷ்டாத்வைதம், அந்த உணர்ச்சிகள் நம்மை இயக்குவது,
அந்த உணர்வின் சக்தியாக நம் உடலுக்குள் சேர்க்க வேண்டும் மீண்டும் துவைதம். அதாவது "உயர்ந்த குணங்களை உன் உடலாக்கு…" என்று தான் ஆலயத்தின் பண்பு.
அதை நாம் விடுத்து நம்மை அறியாமலேயே நமக்குள் பக்தி நம்பிக்கையில்லாத பக்தியாக இருக்கின்றது.
அருள் ஞானப் பக்தியுடன் வாருங்கள். நீங்கள் பார்ப்பவர்கள் எல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தி பெற எண்ணுங்கள்.
ஆலயங்களில் காட்டப்பட்டுள்ள நிலைகளில் அருள் ஒளியால் நமக்குள் இருளை அகற்றிடும் சக்தி பெறுகிறோம். ஒளியின் சரீரமாக மாறும் திறன் நமக்குக் கிடைக்கின்றது.
உங்களுக்குள் இன்று மட்டுமல்ல… என்றுமே இதற்கு முன்னால் அறியாது சேர்ந்த தீய வினைகளால் விளைந்த நோய்கள் எவை இருப்பினும், "ஈஸ்வரா" என்று உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.
பின் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்; எங்கள் ஜீவாத்மா பெறவேண்டும் எங்கள் ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று உடலுக்குள் செலுத்திப் பத்து நிமிடம் தியானிக்க வேண்டும்.
இந்தச் சுவாசத்தை உடல் முழுவதும் பரவச் செய்யுங்கள்.
1.எங்களை அறியாது சேர்ந்த சக்கரைச் சத்து நீங்க வேண்டும்
2.எங்களை அறியாது சேர்ந்த வாத நோய் நீங்க வேண்டும்
3.எங்களை அறியாது சேர்ந்த இரத்தக் கொதிப்பு நீங்க வேண்டும்
4.எங்களை அறியாது சேர்ந்த கேன்சர் நீங்க வேண்டும்
5.எங்களை அறியாது சேர்ந்த டி.பி நீங்க வேண்டும்
6.எங்களை அறியாது சேர்ந்த சரவாங்கி நோய் நீங்க வேண்டும்
என்ற இந்த உணர்வினை எடுத்து எண்ணத்தைச் செலுத்திப் பாருங்கள்,
உங்கள் எண்ணம் மாற்றியமைக்கின்றதா... இல்லையா…? என்று பாருங்கள்.

Thursday, February 22, 2018

படித்ததில் உறைத்தது....

கணவன் மனைவி இருவரும் ...
ஒரு ஹோட்டலில் ஐஸ்கிரீம் சாப்பிட உட்கார்ந்தார்கள்.
என்னங்க... உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கணும்போல இருக்கு கேட்கவா....
இதென்ன புதுசா .. என்கிட்ட கேட்டா என்கிட்ட பேசுவா.... கேளு என சிரிச்சான்
இல்ல, ஒரு மாசமா சீக்கிரம் வீட்டுக்கு வரீங்க...
அடிக்கடி வெளிய கூட்டிப்போறீங்க..
பொண்ணு கூட உட்கார்ந்து பாடம் சொல்லி குடுக்றீங்க.....
திடீரென நம்ம மேல நெருக்கமா மாறீட்டீங்க....
அதான்...
என்று இழுத்தாள்...
ஒண்ணுமில்லையே எப்பவும் போலத்தான் இருக்கேன்.
மறைக்காதீங்க ... உங்க முகரைய பார்த்தாலே தெரியுது... சொல்லுங்க
என்னத்த சொல்ல..
ஏதும் சின்னவீடு செட் பண்ணிட்டிங்களா ..
அத மறைக்கத்தான் இப்படி கொஞ்சுறிங்களா நம்மகூட?
போடி லூசு.. அவன் சிரித்தான்.
ஆனால் அதில் உயிரில்லை.
மெதுவாய் சொன்னான்..
நீயா கேட்பே சொல்லணும்னுதான் இருந்தேன் என கொஞ்சம் சீரியஸ் ஆனான்.
என்னங்க ஏதும் பிரச்சினையா படபடத்தாள்....
அவன் இல்லையென தலையாட்டியபடியே
அவனது அலுவலக பையை திறந்தான்.
ஒரு டைரியை திறந்து ஒரு பேப்பரை எடுத்து நீட்டினான்.
என்னங்க இது ..
படி என சொல்லிவிட்டு பின்னால் நகர்ந்து அமர்ந்தான்.
அவள் படிக்க தொடங்கினாள் ...
அவன் கண்கள் கண்ணீரை சிந்த ஆரம்பித்தது...
அன்புள்ள மகனுக்கு,
கண்டிப்பா என்றைக்காச்சும் இந்த கடிதம் உன் கையில கிடைக்கும்னு நான் நம்புறேன்.
உங்கப்பாவுக்கு மனைவியா உனக்கு அம்மாவ இந்த கடிதம் எழுதுறேன்.
ரொம்ப பெரிய கடிதம் பொறுமையா படி.
அவசரமா வேலை இருக்குனு பாதி படிச்சி மீதிய இன்னொரு நாள் காத்திருந்துப் படிக்காத.
உங்கப்பாவ நான் கல்யாணம் பண்ணும்போது நான் காலேஜ் லெக்சரர்.
அப்புறம் நீ வந்த பிறகு உங்கப்பாக்கு அதிர்ஷ்டம் அடிச்சுது.
இன்னும் கன்ஸ்ட்ரக்‌ஷன்ல வளர்ந்தாரு.
அப்புறம் உன் தங்கச்சி பிறந்தா ...
நான் வேலையை விட்டுட்டு வீட்டோட உங்கள கவனிச்சுட்டு இருந்தேன்.
உனக்கு தான் தெரியுமே அப்பா எப்படி பிசின்னு...
கல்யாணம் ஆன ஒரு வருஷம் தான் கனவு வாழ்க்கை.
அப்புறம் எல்லாமே காத்திருந்த வாழ்க்கைதான்.
உங்கப்பாவுக்கு காத்திட்டு இருந்தேன்.
அவர், அவர் உருவாக்க நினைச்ச ஆடம்பர வாழ்க்கைக்காக உழைச்சிட்டு இருந்தார்.
நீங்கள் ரெண்டு பேரும் தான் எனக்கு துணை.
நாம தான் விளையாடுவோம்.
அப்புறம் நீங்க ஸ்கூலுக்கு போய்ட்டீங்க.. நீங்க வரதுக்கு காத்திட்டுருப்பேன்.
ஸ்கூல்விட்டு வந்ததும் கதைகதையா சொல்லுவீங்க..
அதுல பாதி பொய் இருக்கும்..
அதெல்லாம் உங்க கற்பனைன்னு நினைச்சு ரசிச்சேன்.
அப்புறம் நீங்க வளர்ந்தீங்க..
அம்மாட்ட சொல்ல ஏதுமில்லாம போச்சு.
ஆனா உங்கள்ட்ட இருந்து ஆர்டர் மட்டும் வந்துச்சு.
இப்ப வெளியே போகனும்...
இப்படி வெளியே போகணும்னு..
ஆனா வர்ற டைம் கேட்க முடியுமா அம்மாவால்.......
காத்திட்டு இருப்பேன்.
நீங்க சாப்டு வரீங்களா.... சாப்டமா வரீங்களானு பார்க்க காத்திட்டு இருப்பேன்....
நீங்க எக்ஸ்டரா கோச்சிங், பிரண்ட்ஸ் அரட்டைனு..பிசி
இடையில உங்கப்பா உடம்பு முடியாம படுத்துட்டாரு.
அவருக்கு டயத்துக்கு மாத்திரை கொடுக்கனும், மருந்து கொடுக்கணும், பிசியோதெரபி பண்ணனும் காத்திட்டுருப்பேன்.
காத்திட்டு இருக்கிறதே என்னோட வாழ்க்கை ஆகிடுச்சு பாத்தியா?
அப்புறம் உன தங்கச்சி கல்யாணம்...
இப்ப அவ எப்படி இருக்கானு கூட
அவளா முடிவு செய்ற நேரத்திலதான் என் கூட பேச முடியும்....
ஏன்னா அங்க அவ காத்திட்டு இருக்கா .... ஒரு அம்மாவா...
உனக்கு சொல்லவே வேண்டாம்...
அப்பா தொழில எடுத்து செய்ய ஆரம்பிச்ச உடனே
நீ ரொம்ப பிசியாகிட்ட..
நீ கடைசி ஐஞ்சு வருஷத்தில் அம்மாட்ட பேசுனத கொஞ்சம் யோசியேன்...
சாப்டிங்களா, மாத்திர போட்டாச்சா.. ஊசிபோட்டாச்சா... இவ்ளோதான்.
உங்கப்பா வாழ்றா காலத்தில பிசியா இருந்தாரு..
நான் காத்திட்டு இருந்தேன்.
கடைசி காலத்தில் ஏதுவும் இல்லாம இருந்தாரு..
ஆனா மாத்திரைக்கு காத்திட்டு இருந்தாரு...
என்கிட்ட பேச அவருக்கு விசயமே இல்லை...
பேப்பர் படிச்சாரு. புக் படிச்சாரு. தூங்குனாரு.
ஏன்னா பேச வேண்டிய காலத்தில் பேசல...
பேச நேரமிருந்த காலத்தில் பேச விஷயமில்லை... அனுபவமும் இல்லை
இப்படித்தான் பெரும்பாலான அம்மாக்களோடு வாழ்க்கை முடிஞ்சு போகுது.
நாம என்னைக்காச்சும் வெளியே போகும் போது
அங்க நிறைய அம்மாக்கள பார்ப்பேன்..
அவங்க எல்லார் கண்ணிலும் எனக்கு தெரியுறது காத்திருந்த ஏக்கம் மட்டும் தான்.
உன்னை மாதிரி பசங்க கூட்டிட்டு வர அவங்க மனைவிகளை பார்ப்பேன்...
அதுல இன்னைகே வாழ்ந்துடனும்...
அடுத்த ஆறநாள் இவன் கூட பேசக்கூட முடியாதுன்ற ஒரு வேகம் இருக்கிறத பார்த்தேன்.
இன்னைக்கு ஒரு நாள் தானேன்னு புள்ளைக கேட்ட எல்லாம் செய்ற அப்பாக்கள பார்த்தேன்.
இது கொஞ்சம் கொஞ்சமா அவங்களுக்கு காரியம் சாதிக்கிற நாள் ஆகிடுதுனு புரிஞ்சுது...
உங்களுக்கு ஒரு நாள் தானேன்னு ஒரு நினைப்பு வந்துடுச்சு.
இதெல்லாம் ஏன் இப்ப சொல்றேனு யோசிக்றியா...
என் காலத்தில் இதெல்லாம் உங்கப்பாட்ட சொல்லி புரிய வைக்க முடியல..
ஆனா நீ அடுத்த ஜெனரேஷன்.. கொஞ்சம் யோசிப்பில்ல
அதான் உன்கிட்ட சொல்றேன்.
நான் உயிரோடு இருக்கும் போது சொல்ல முடியல...
சொன்னாலும் உன்னால கேட்க முடியாது..
அதனால தான் இப்ப சொல்றேன்.
உனக்கு வீட்ல ஒரு பொண்ணு இருக்கா, மனைவி இருக்கா...
காத்திட்டு இருக்காங்க...
உன் தங்கச்சிக்கு உங்கப்பா மேல இருந்த பாசம் உனக்கு தெரியாது..
ஆனால் அத அவ வெளிக்காட்டும் போது உங்கப்பா கட்டில்ல நகர முடியாம இருந்தாரு.
அவரு தான் அப்பானு அவ காலேஜ்க்கு ஸ்கூலுக்கு தெரியாத அளவுக்கு அவர் பிசி....
அப்பா கூட அங்க போகணும் இங்க போகணும்ங்கிற எந்த ஆசையும் நிறைவேறல..
அவ அப்பா கடைசி காலத்தில சும்மா இருந்தபோது அவர் பேசனது அவ கேட்க முடியல
ஏன்னா அவ வேறு வீட்டுக்கு போய்ட்டா ..
பாத்தியா வாழ்க்கைய ?
நீ உன் பொண்ணுக்கு அப்படி ஒரு வாழ்க்கைய கொடுத்துடாத
உன் மனைவிய அவளோட மகனுக்கு கடிதம் எழுத வச்சிடாத...
இன்னைக்கு மூணுவேளை சாப்பிட சம்பாதிச்சுட்ட.
நாளைக்கு மூணு வேளைக்கும் உனக்கு பிரச்சினை இல்லை.
இன்னும் சொல்லபோனா
நீ இப்ப உழைக்கிறது உன்னோட அடுத்த பத்துவருஷம் கழிச்சி செலவழிக்க போறதுக்குதான்..
அத கொஞ்சம் குறைச்சிக்கோ..
சீக்கிரம் வீட்டுக்கு வா.
பொண்டாட்டிகிட்ட புள்ளைககிட்ட பேசு...
அவங்களுக்கும் நீ நல்லா இருக்கும் போதே கொஞ்சம் நேரம் கொடு....
ஏன்னா அன்புக்காக காத்திட்டு இருக்கிறதும்...
ஒருத்தர காக்க வைக்கிறதும் ஒரு வாழ்க்கையா?
செய்வேனு நம்புறேன்.
ஏன்னா என்கிட்ட நல்லா பேசின பையன் தானே நீ...
உன் மனைவி மகள விட்டுடவா போற...
கடிதத்தை படித்து முடிந்தாள்.
அவள் முகம் ஒருவித பரபரப்பில் இருந்தது.
நிமிர்ந்து அவனை பார்த்தாள்....
இரண்டு மிகப்பெரிய பலூடா ஐஸ்கீரிம் வந்திருந்தது.
அவள் மெதுவாய் தன் அலைபேசியில் இருந்து அவள் அம்மாவிற்கு போன் செய்தாள்.....
.நான் தான்மா
.....
ஏன் சும்மா பேசக்கூடாதா?
...
என்ன செய்ற...
....
அப்பா என்ன செய்றாரு... என பேசத்தொடங்கினாள்.
ஐஸ்கீரிம் கொஞ்சம் கொஞ்சமாய் உருகத் தொடங்கியது.... .
அவன் சிரித்தபடி சாப்பிட தொடங்கினான்.
இனிமே அப்படித்தான்..
இனி அங்கே அன்புக்காக காத்திருக்க அவசியமில்லை.

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...