Thursday, February 15, 2018

இரவு நேரத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்.


ஆரோக்கியமான வாழ்விற்கு உணவுகள் அவசியம். ஆனால் தவறான நேரத்தில் உண்பதால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம்.
இரவு நேரத்தில் சாப்பிடுவதால் ஏற்படும் சில விளைவுகள் :
செரிமானமின்மை
மலச்சிக்கல்
வயிறு கோளாறுகள்.
1. வாழைப்பழம் :
இதயத்தில் ஏற்படும் எரிச்சலை குணப்படுத்த வாழைப்பழம் உதவுகிறது. பகலில் வாழைப்பழம் சாப்பிட்டால் உடலுக்கு சக்தி அதிகரிக்கிறது. இரவில் வாழைப்பழம் சாப்பிட்டால் சளி மற்றும் இருமல் ஏற்படலாம். எனவே இரவில் வாழைப்பழம் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
2. தயிர் :
தயிர் பகலில் உண்பதால் செரிமானம் மற்றும் பித்தப்பை ஆரோக்கியத்திற்கு நல்லது. இரவில் உட்கொண்டால் செரிமானத்தை பாதிக்கும் மற்றும் அசிடிட்டி ஏற்படவும் காரணமாக உள்ளது.
3. அரிசி :
இரவில் அரிசி உணவுகளை உட்கொண்டால் வயிறு கோளாறுகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். உடல் எடை அதிகரிக்கவும் காரணமாக உள்ளது.
4. பால் :
பாலில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. அடிக்கடி பால் குடிப்பதால் உடல் செயல்திறனை குறைக்கும்.
5. ஆப்பிள் :
ஆப்பிள் மிகவும் அற்புதமான பழம். தினமும் ஆப்பிள் சாப்பிட்டால் பல்வேறு நோய்களை தவிர்க்கலாம். ஆனால் இரவில் உட்கொண்டால் அசிடிட்டி ஏற்பட வாய்ப்புண்டு. பகலில் உட்கொண்டால் செரிமானத்தை மேம்படுத்துகிறது.
6. ஆரஞ்சு பழம் :
ஆப்பிள் போன்றே ஆரஞ்சு பழத்தையும் உட்கொள்வது நல்லது. அதாவது பகலில் மட்டுமே உண்பது சிறந்தது.
காலையில் நாம் சாப்பிடும் உணவுகள் மட்டுமே நம் உடலுக்கு முழுமையான நன்மை பயக்கும். காலை உணவை ஒருபோதும் தவிர்க்க வேண்டாம்.
வாழ்கவளமுடன்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...