Tuesday, February 20, 2018

இதுதான் வெறுமை நிலை..!"

இரண்டு சீடர்கள் பேசினார்கள். ஒருவர் சொன்னார், "நான் நானாக இல்லை. இதுதான் வெறுமை நிலை..!"
"எப்படிச் சொல்கிறாய்?"
"ஆற்றில் மரக்கட்டை மிதக்கிறது. அந்த மரக்கட்டை நீரோட்டத்தை எதிர்த்துப் போரிடுவதில்லை. அதன் போக்கில் இதுவும் செல்கிறது. அதுபோல, நானும் என்னுடைய தனிப்பட்ட உணர்வை இழந்துவிட்டேன், எதையும் எதிர்ப்பதில்லை, முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். எந்த முனைப்பும் எதிர்பார்ப்பும் இல்லாதபடி வாழ்க்கையின் நீரோட்டத்தில் மிதந்து செல்கிறேன்."
இரண்டாவது சீடன் சிரித்துவிட்டு, "அப்படிப் பார்த்தால் நான்தான் உன்னைவிட அதிகம் வெறுமையை கலந்திருக்கிறேன்!"
"எப்படி?"
"தண்ணீரில் பனிக்கட்டி மிதக்கிறது. அந்தப் பனிக்கட்டியையும் தண்ணீரையும் பிரித்துச் சொல்லமுடியாது. இரண்டும் ஒன்றாகக் கலந்துவிட்ட நிலைமை. அதேபோல், நானும் என்னுடைய உணர்வை இழந்து வாழ்க்கையின் நீரோட்டத்தில் பனிக்கட்டியாக மிதக்கிறேன்.
இவர்கள் பேசுவதைப் பார்த்துக்கொண்டே அவர்களுடைய குரு வந்தார். நீங்கள் இருவரும் இன்னும் வெறுமையைப் புரிந்து கொள்ளவில்லை" என்றார்.
"என்ன சொல்கிறீர்கள் குருவே?"
"தண்ணீரில் மரக்கட்டையாகவோ, பனிக்கட்டியாகவோ மிதந்து விடுவதால் வெறுமையை அடைந்தேன் என்று அர்த்தம் அல்ல. அந்தத் தண்ணீராகவே ஆகிவிடுவதுதான் வெறுமை" என்றார் குரு.
எழுவதும் வீழ்வதுமான கரையின் அலைகளை மட்டும் கவனிப்பவர்கள் நாம். ஆழ்சமுத்திரத்தின் அலை எழுவதுமில்லை வீழ்வதுமில்லை என்பதை ஆழமாக கவனித்து அதில் கலந்தவர்கள் ஞானியர்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...