Thursday, February 15, 2018

அனுபவங்கள் .......

எனக்குத் தெரிந்த ஒரு குடும்பம்.
அண்ணன் தம்பி இரண்டு பேர்.
அவர்களுடைய பெற்றோர்கள் மிகவும் சாதாரண குடும்பம்.
இரண்டு சகோதரர்களும் அதிகம் படிக்காதவர்கள்.
காரோட்டக் கற்றுக் கொண்டார்கள்.
கார் ஓட்ட லைசென்சும் பெற்றிருந்தார்கள்.
எவ்வளவோ முயன்றும் அவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை.
வளைகுடா நாடுகளில்
கார் ஓட்டத் தெரிந்தவர்களுக்கு வேலை கிடைப்பதாக பத்திரிகைகளில் விளம்பரத்தைப் பார்த்து
அந்த வேலைக்கு இருவருமே மனுச் செய்தார்கள்.
இரண்டு பேருக்குமே வேலை கிடைத்து விட்டது.
அந்த நாட்டுக்கு அவர்கள் போய் ஏழாண்டுகளுக்கு மேலாகிறது.
அங்கு ஏராளமாக சம்பாதிக்கிறார்கள். வீட்டுக்கும் நிறைய பணம் அனுப்புகிறார்கள். பெற்றோர்களும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
அது மட்டுமல்ல,
அவர்கள் அங்கிருந்து அனுப்பிய பணத்தில் இடம் வாங்கி அழகான வீட்டையும் கட்டி விட்டார்கள்.
சகோதரர்களில் மூத்தவனுக்கு திருமணமும் ஆகிவிட்டது.
மனைவியுடன் அங்கு மகிழ்ச்சியாக இருக்கிறார்.
நம்முடைய நாட்டில்
காரோட்டிகளாக அவர்களுக்கு வேலை கிடைத்திருந்தாலும்,
இந்த வசதியான வாழ்க்கையை அவர்கள் ஒருபோதும் பெற்றிருக்க முடியாது.
துணிச்சலான முடிவெடுத்து,
வெளிநாடுகளுக்கு சென்றார்கள்.
" திரைகடல் ஓடியும் திரவியம் தேடு" என்ற வாசகத்தை நம்பிக்கையுடன் வாழ்க்கையில் கடைப்பிடித்தார்கள்.
வெற்றி அவர்களைத் தேடி வந்தது.
வேலையில்லாப் பிரச்சனை தீர்ந்ததோடு மட்டுமின்றி நிறைய சம்பாதிக்கின்ற வாய்ப்பையும் அவர்கள் ஏற்படுத்திக் கொண்டார்கள்.
வேலை எங்கு கிடைத்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் நமக்கு இருக்க வேண்டும்.
குறுகிய எல்லைக்குள்ளேயே
வேலை வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது.
வெளியிடங்களுக்குச் சென்று வேலை பார்ப்பதில் இன்னொரு செளகரியமும் இருக்கிறது.
பலதரப்பட்ட மக்களோடு பழகுகின்ற வாய்ப்பை அது அளிக்கிறது.
இதனால் அனுபவம் விரிவடையும் வழி ஏற்படுகிறது.
நீங்கள் வசிக்கும் பிராந்தியத்திலேயே வேலை வாய்ப்புகள் இருக்க வேண்டும் என்கிற கட்டாயமில்லை.
பல இடங்களுக்கும் செல்லுகின்ற போது அங்கு புதியவர்களச் சந்திக்கின்ற சந்தர்ப்பம் கிடைப்பதோடு,
புதிய வேலை வாய்ப்புக்களையும் சந்திக்கின்ற சந்தர்ப்பம் நேரலாம்.
பொதுவாக
நம்முடைய இளைஞர்களிடையே துணிச்சலாக புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் மனோபாவம் உருவாகவில்லையென்றே சொல்ல வேண்டும்.
பல காரணங்களால்
பாதுகாப்பான வாழ்க்கைக்குப் பழகிப் போய் விட்டார்கள்.
எவை நிச்சயமானவை என்று தோன்றுகின்றதோ
அதை மட்டுமே முயற்சிக்க வேண்டுமென்று எண்ணுகிறார்கள்.
புதிய முயற்சிகளில் ஈடுபட்டு
அதனுடைய பாதிப்புகளுக்கு தங்களை உட்படுத்திக் கொள்ள அவர்கள் தயாராக இருப்பதில்லை.
இதனால்
குறுகலான வளையத்துக்குள்ளேயே சுற்றி சுற்றி வருகிறார்கள்.
அதனால் விரிவான அனுபவங்கள் ஏற்படவும் சந்தர்ப்பம் ஏற்படாமல்
போய்விடுகிறது.
ஆக
வேலை வாய்ப்பைத் தேடுகின்றபோது இரண்டு விஷயங்களுக்குத் தயார் நிலையில் இருக்கும் மனோபாவத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஒன்று,
கிடைக்கின்ற வேலை எதுவானாலும் அதை ஏற்றுச் செயல்படுவது.
மற்றொன்று,
வேலை எங்கே கிடைத்தாலும்,
அது வெளிநாடாக இருந்தாலும் தைரியமாக முன்வந்து அதை ஏற்றுக் கொள்வது.
இதற்கான
மனோபாவம் ஏற்பட்டுவிட்டால் நிச்சயம் ஏதோவொரு வேலை எங்கேயாவது கிடைக்கவே செய்யும்.
இன்றைய காலையில்
இன்பங்கள் பொங்கிட
இனிமையான காலை வணக்கங்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...