Monday, February 19, 2018

முயற்சியில்லாமல் வெற்றியில்லை.

அரசு பொறுப்பில் வேலை வாங்கித் தரும் நிறுவனங்கள் இருப்பதைப் போலவே, சில தனியார் நிறுவனங்கள் இந்தப் பணியைச் செய்து வருகின்றன.
உங்களுடைய தகுதி,
நற்சான்றிதழ்களின் பிரதிகள், ஆகியவற்றோடு,
உங்கள் பெயரை நீங்கள் இவர்களிடம் பதிவு செய்து கொண்டால்,
உங்களுக்குப் பொருத்தமான வேலை கிடைக்கும்போது,இவர்கள் உங்களுக்குத் தெரிவிக்கிறார்கள்.
இதற்காக ஒரு சிறு தொகையை
நீங்கள் அவர்களுக்கு செலுத்த வேண்டியிருக்கும்.
இப்படிப்பட்ட தனியார் அமைப்புகள் உங்கள் பகுதியில் இருந்தால் உங்கள் பெயரை நீங்கள் அவர்களிடம் பதிவு செய்து கொள்ளுவது பயனுடையதாக இருக்கும்.
கீழ்கண்ட ஆலோசனைகளை மனதில் வைத்துக் கொண்டு முயற்சிக்களை மேற்கொள்ளுங்கள்.
1. உங்கள் தகுதிகள், வயது, திறமை, ஆகியவற்றைக் குறிப்பிட்டு அந்த விவரங்களின் நிறைய பிரதிகளை தயார் நிலையில் வைத்துக் கொள்ளுங்கள்.
2. பத்திரிகையில் வரும் தேவை விளம்பரங்களை கவனிக்கத் தவறாதீர்கள்.
உங்களுக்கு பொருத்தமான வேலை என்று தோன்றில் காலதாமதம் செய்யாமல் விண்ணப்பத்தையும் அனுப்பி வையுங்கள்.
விண்ணப்பத்தோடு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தையும் அனுப்பி வையுங்கள்.
உங்களைப் பற்றி முடிவு செய்ய அது உதவக்கூடும்.
3. உங்கள் பகுதியிலுள்ள முக்கியமான பெரிய, சிறிய நிறுவனங்களின் பட்டியலை தயார் செய்து கொள்ளுங்கள். இவற்றில் வேலை வாய்ப்புகள் அடிக்கடி ஏற்படக் கூடுமாதலால்
நினைவாக இந்த அமைப்புகளுடனும்,
இந்த அமைப்புகளில் வேலை செய்கின்றவர்களுடனும் தொடர்பு வைத்துக் கொள்ளுங்கள்.
4. இது தவிர உங்கள் பகுதிகளிலுள்ள சமூக நிறுவனங்கள்,லையன்ஸ் கிளப், ரோட்டரி கிளப் ஆகியவற்றின் உறுப்பினர்களிடன் தொடர்பு வைத்துக் கொள்ளுங்கள்.
இவர்களில் பலர் தாங்களே தொழில் நடத்துகின்றவர்களாக இருப்பார்கள். வேறு பலர் பெரிய நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்களாக இருப்பார்கள்.
இவர்களோடு நீங்கள் ஏற்படுத்திக் கொள்ளும் தொடர்பு உங்களுக்கு வேலை கிடைக்க உதவியாக இருக்கும்.
உங்களுக்குத் திறமையிருக்கிறதென்றால்
எந்தக் கதவையும் நீங்கள் தைரியமாகத் தட்டலாம்.
தகுதியிருந்தால்
உங்கள் கோரிக்கையை பரிசீலிக்க எவரும் தயக்கம் காட்டமாட்டார்கள்.
முயற்சியில்லாமல் வெற்றியில்லை.
அந்த முயற்சிகளையும் திட்டமிட்டு செய்வது அவசியமாகிறது.
தகுதி தகுதி என்று அடிக்கடி பேசுகிறோமே அந்தத் தகுதி என்பது என்ன?
அதை ஏற்படுத்திக் கொள்ள
என்ன முயற்சிகளை
நீங்கள் மேற்கொண்டிருக்கிறீர்கள்?,
வேலை தேடுவதிலும்,
அதைப் பெறுவதிலும் தகுதி ஒரு அடிப்படையான விஷயமல்லவா?
அன்புடன் காலை வணக்கங்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...