Wednesday, February 14, 2018

பட்ஜெட் கூட்டத்தொடர்....

பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.....
சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து விவாதிப்பதற்காக தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
இதில் பட்ஜெட்டில் பல்வேறு துறைகளுக்கு ஒதுக்க உள்ள நிதி, மானியக்கோரிக்கைகள் மற்றும் புதிய திட்டங்கள் குறித்து கலந்தாலோசித்து, கருத்து கேட்கப்பட உள்ளது...
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையில், அரசின் சாதனைகள் தொடர்பாக ஆண்டு மலர் வெளியிடுவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதே போன்று வரும் 24ம் தேதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாள் வர உள்ள நிலையில், நினைவு மண்டபத்திற்கான பணிகள் குறித்தும் இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...