Wednesday, February 14, 2018

மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் செய்யக் கற்றுக் கொள்ளுங்கள்.

எந்தத் தொழிலை செய்ய ஆரம்பிக்கிறோம் என்பது முக்கியமில்லை.
அந்தத் தொழிலை ஆதாரமாகக் கொண்டு வாழ்க்கையில் எப்படி வளர்ச்சியடைகிறோம் என்பதுதான் முக்கியம்.
இப்படிப்பட்ட வேலைதான் கிடைக்க வேண்டுமென்று
நீங்களாகவே ஒரு கணக்குப் போட்டுக் கொண்டு கிடைக்கின்ற வேலைகளை
அலட்சியப்படுத்தாதீர்கள்.
எந்த வேலை கிடைத்தாலும் அதை மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் செய்யக் கற்றுக் கொள்ளுங்கள்.
ஒரு வேளை அந்த வேலையினாலேயே மிகப்பெரிய இடம் எதுவோ
அது உங்களுக்கு காலப்போக்கில் கிடைக்க வழி ஏற்படலாம்.
விரும்புகின்ற வேலை கிடைக்காவிட்டால் கிடைத்த வேலையை விரும்பக் கற்றுக் கொள்ளுவது புத்திசாலித்தனம்.
வேறு சிலர் வேலை தங்களுடைய ஊரிலேயே கிடைக்க வேண்டும்.
அல்லது
தங்களுடைய மாவட்டத்திலேயே கிடைக்க வேண்டும் என்று எண்ணுகிற மனநிலை கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
நம்முடைய நாட்டில்
"திரைகடல் ஓடியும் திரவியம் தேடு" என்று சொல்லியிருக்கிறார்கள்.
கடல் கடந்து சென்றாவது பொருளை சம்பாதிக்க வேண்டும் என்பது தமிழர்களின் லட்சியமாக இருந்திருக்கிறது.
நமமுடைய நாட்டில் கிடைக்கின்ற வேலை வாய்ப்புகள் மட்டுமே முக்கியம் எனக் கருதக்கூடாது.
வெளிமாநிலங்களிலோ,
ஏன் வெளிநாட்டிலும்கூட
வேலை கிடைத்தாலும்
ஏற்றுக் கொள்ளுகின்ற மனப்பக்குவம் நம்முடைய இளைஞர்களுக்கு வர வேண்டும்.
நவீன விஞ்ஞான யுகத்தில் காலமும், தூரமும் பெரிய விஷயங்களே அல்ல.
டெல்லியில் வசிக்கிறவன் மூன்று மணி நேரத்தில் விமானத்தின் மூலம் தமிழ்நாட்டுக்கு வந்து விட முடியும்.
இங்கிலாந்தில் இருப்பவன்
24 மணி நேரத்திலும்,
அமெரிக்காவில் இருப்பவன்
48 மணி நேரத்திலும் வந்து விடலாம்.
உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உடனுக்குடன் பேசி விடலாம்.
தூரத்தில் இருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டால்தான் தூரத்தில் இருப்பதாக உணர்வு ஏற்படுமே தவிர
நவீன யுகத்தில் தூரம் என்பது ஒரு பெரிய விஷயமல்ல.
தூரத்தை எண்ணி கிடைக்கின்ற வேலை வாய்ப்பை எவரும் இழக்க வேண்டிய அவசியமில்லை.
என் சம்பந்தப்பட்ட அனுபவம் ஒன்றையே இந்த சந்தர்ப்பத்தில் நான் குறிப்பிட விரும்புகிறேன்.
அது நாளை .......?!
நல்ல கனவுகள், நாளும் நனவாக
நன்மை பயக்கும் நற்காலை வணக்கங்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...