Wednesday, February 7, 2018

அம்பானிக்கு லாபமீட்டித் தருவதுதான் மோடியின் தேசபக்தி....

ரிலையன்ஸ் டிபென்ஸ் என்ற நிறுவனத்தை அனில் அம்பானி தொடங்குகிறார். அவர் அந்நிறுவனத்தை தொடங்கியது 28/03/2015. சரியாக மோடி பிரான்ஸ் நாட்டிற்கு செல்லும் 3 வாரம் முன்பு. August 2014, பாதுகாப்பு துறையில் நேரடி அந்நிய முதலீடை 49% சதவீதமாக உயர்த்துகிறது அரசு. அதன் அடிப்படையில் 51:49 சதவிகித முறைப்படி Dassult நிறுவனத்துடன், அனில் அம்பானி கூட்டணி அமைக்கிறார். பிரான்ஸ் ஒப்பந்தத்தின் பின் Offset Clause அடிப்படையில் விமான உதிரி பாகம் செய்யும் ஒப்பந்தம் அவர் கைகளுக்கு செல்கிறது . மற்ற விபரங்கள் பின்னால் உறுதி செய்யப்படும் என்று கூட்டறிக்கையில் சொன்னார்கள் அல்லவா அதில் தான் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. பழைய ஒப்பந்தப்படி 126 விமானங்கள் 90,000 கோடிக்கு வாங்க இருந்ததை கைவிட்டு வெறும் 36 விமானங்களை 60,000 கோடிக்கு வாங்க முடிவு எட்டப்பட்டது. இதன் படி ஒரு விமானம் 714 கோடிக்கு வாங்குவதற்கு பதில் 1611 கோடிக்கு வாங்கவிருக்கிறோம். இப்பொழுது இந்த விலையுயர்வை நியாயப்படுத்த முன்வைக்கப்படும் காரணங்களை பார்ப்போம் அதிக நாட்கள் இந்த ஒப்பந்தம் கையெழுத்து ஆகாததால் இந்த விலை உயர்வு என்று கூறினால் அது தவறு. ஏனெனில் RFPயில் மிக தெளிவாக பண வீக்க விகிதம் 3.9% நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன் அடிப்படியில் கணக்கிட்டால் 3 மடங்கு விலை அதிகரிக்க வாய்ப்பே இல்லை. UPA செய்த ஒப்பந்தத்தில் இருந்த specification உயர்த்தியுள்ளதால் இந்த விலை ஏற்றம் என்பது இரண்டாவது காரணம். விலை மாற்றம் என்ற கேள்வியை நீர்த்து போக செய்வதற்கான வேலை தான் இது. அப்படி என்ன மாற்றம் என்று பார்த்தால் meteror missile பொருத்தப்படுகிறது (அதன் விலை 2Mn$ 13 கோடி. மற்றொரு மாற்றம் Helmet Mounted Display tem (HMDS) அதாவது helmet முன் உள்ள திரையில் தேவையான விபரம் தெரியும். அதன் மூலம் எதிரி விமானத்தை குறி வைத்து லாக் செய்ய முடியும். இதன் விலை 0.4mn$ (2.5 கோடி). ஆக இந்த இரு upgrade செலவுகளையும் சேர்த்தால் கூட 730 கோடி தான் வருகிறது. இந்த தகவல்களும் அதிகாரப்பூர்வமானது அல்ல. செய்தித்தாள்களில் விவாதிக்கப்படும் விஷயங்கள் தான். ஆனால் அதிக அளவில், மிகுந்த பொருட்செலவில் ராணுவ தளவாடங்கள் வாங்குகையில், பேச்சுவார்த்தை நடத்தி, விலையை நிச்சயமாக குறைக்க முடியும். இந்த HMDS தயாரிப்பது இஸ்ரேலை சேர்ந்த Elbit என்ற நிறுவனம். அந்நிறுவனம் March 2016 ஆம் ஆண்டு Aero defence tem என்ற இந்தியாவை சேர்ந்த ஒரு நிறுவனத்துடன் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் HMDS இந்தியாவில் தயாரிக்க ஒப்பந்தம் கையெழுத்திடுகிறது. அந்த Aero defence tems நிறுவனம் நம் அதானி குழுமத்தினுடையது. அம்பானிக்கு குடுத்துவிட்டு அதானிக்கு கொடுக்காமல் இருக்க முடியுமா என்ன ? இவரும் இந்த நிறுவனத்தை எதேச்சையாக 17/07/2015 நிறுவுகிறார். அதாவது மோடி பிரான்சில் இருந்து திரும்பிய 2 மாதத்தில். சரி எதேச்சையாக இந்த நண்பர்கள் அடைந்த பயனை விடுத்து இந்த ஒப்பந்தத்தின் இறுதியில் நாம் இழந்தது என்ன என்பதை பார்ப்போமா ? 1) 126 விமானம் 90,000 கோடிக்கு வாங்குவதற்கு பதில் 36 விமானம் மட்டுமே 60,000 கோடிக்கு வாங்க இருக்கிறோம். இதில் offset clause விதிபடி மொத்த வருவாயில் (58,000 கோடி) 50% சுமார் 22,000 கோடி அனில் அம்பானிக்கு செல்கிறது. 2) முடிவு செய்து வைத்த பட்ஜெட்டின் பெரும் பகுதியை வெறும் 2 squadron விமானங்கள் வாங்க செலவிட்டதால் இது நம் விமான படைக்கு பெரும் பின்னடைவு என ஓய்வு பெற்ற தளபதிகள் கருத்து தெருவிக்கின்றனர். பாகிஸ்தான் சீனா உடனான இரண்டு முனை போர் ஏற்படும் போது இந்த விமானங்கள் எண்ணிக்கை மிக குறைவு என்று கவலை தெரிவிக்கின்றனர் 3) தொழில்நுட்ப மாற்ற முறைப்படி பொதுத்துறை நிறுவனமான HAL நிறுவனத்திற்கு வரவிருந்த அத்தனை பயன்களும் இனி அம்பானி நிறுவனத்திற்கு செல்லும். 4) 108 விமானங்கள் HAL நிறுவனம் தயாரிக்க இருந்தது. இது தற்போது நிறுத்தி வைக்கபட்டிருக்கிறது. இதன் மூலம் உருவாகும் வேலை வாய்ப்பு முற்றிலும் பறிபோனது. இதை எல்லாம் சுட்டி காட்டி காங்கிரஸ் நடத்திய November 14/2017 பத்திரிக்கையாளர் சந்திப்பை ஊடகங்கள் எதுவும் கவர் செய்யவில்லை. அதன் பின் புதிய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டியில் காங்கிரஸ் கட்சி எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் இந்த ஒப்பந்தம் மிகவும் அவசியமானது என்றும், போர்க்கால அடிப்படையில் அதை துரிதப்படுத்தி முடிக்கப்பட்டதற்கு அரசை பாராட்டவேண்டுமே தவிர குறை கூற கூடாது என்று கூறினார். காங்கிரஸ் முன்வைத்த கீழ் கண்ட கேள்விக்கு இதுவரை எந்த பதிலும் இல்லை 1) பாதுகாப்பு கொள்முதல் விதிமுறை 2013இன் படி “ஒப்பந்த பேச்சுவார்த்தை குழு” மற்றும் “விலை நிர்ணய குழு” இவை இரண்டையும் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக பிரதமர் செயல்பட்டது ஏன் ? 2) 13.03.2014 அன்று செயல்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் படி HAL பொதுத்துறை நிறுவனத்திற்கு வரவிருந்த ஒப்பந்தம் தனியாருக்கு சென்றது எப்படி? 3) விமானக் கட்டமைப்பில் பல வருட அனுபவம் உள்ள HAL தவிர்த்து இதுவரை முன்னனுபவமே இல்லாத அனில் அம்பானிக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது ஏன் ? 4) தொழில்நுட்ப மாற்றம் இல்லாதபட்சத்தில் விமானம் பழுதுபார்ப்பது, பராமரிப்பது அனைத்துக்கும் Dassult நிறுவனத்தை எப்போதும் சார்ந்திருப்பது சரியா ? இவையெல்லாம், காங்கிரஸ் கட்சி எழுப்பியுள்ள சில கேள்விகள். இவற்றை, தேசிய ஊடகங்கள் தொடர்ந்து எழுப்பி, மத்திய அரசை பதில் சொல்ல வைக்குமாறு நிர்பந்தித்திருக்க வேண்டும். இந்த ஒப்பந்தத்தில் மோடி தனிப்பட்ட முறையில் பலனடைந்திருக்கிறார் என்று நாம் குற்றம் சுமத்தவில்லை. நவரத்னா நிறுவனமான எச்ஏஎல் நிறுவனத்துக்கு செல்ல வேண்டிய மிக முக்கியமான தொழில்நுட்ப மாற்றத்தையும், விமானம் தயாரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் பணி ஆகியவற்றை, ஏற்கனவே பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதியாக இருக்கும் அனில் அம்பானிக்கு எதற்காக வழங்க வேண்டும் என்பதுதான் நமது கேள்வி. தங்களைத் தவிர யாருக்கும் தேசபத்தியே கிடையாது என்று, தனது 56 இன்ச் மார்பை பெருமையாக தட்டிக் கொள்ளும் பிரதமர் மோடியும், அவர் பக்தர்களும், பொதுத்துறை நிறுவனத்தை உதாசீனப்படுத்தி விட்டு, அனில் அம்பானிக்கு லாபமீட்டித் தருவதுதான் மோடியின் தேசபக்தியா என்பதை விளக்குவார்களா ?..
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...