Thursday, May 24, 2018

அப்புறம் பாருங்கள் என்ன நடக்குதுன்னு..!*

👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼
*தினமும் 20 நிமிடங்கள் கை தட்டுங்கள்...அப்புறம் பாருங்கள் என்ன நடக்குதுன்னு..!*
👏🏼பொதுவாக, அடுத்தவர்களின் நற்செயல்களுக்காகவும் சாதனைகளுக்காகவும் அவர்களை உற்சாகப்படுத்தவும் பாராட்டவுமே மட்டுமே நாம் கை தட்டுகிறோம்.
👏🏼சிலர் கை தட்டிக் கொண்டே பாட்டு பாடுவார்கள், கோவில் போன்ற இடங்களில் பஜனை பாடும்போதும் கை தட்டிக் கொண்டிருப்பார்கள்.
👏🏼கை தட்டுவது என்பது அடுத்தவர்களை உற்சாகப்படுத்தும் விஷயம் மட்டுமல்ல.
👏🏼கை தட்டுபவர்களுக்கும் ஏராளமான நன்மைகள் இருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா?
👏🏼ஆம். கை தட்டுவதும் ஒருவிதமான உடற்பயிற்சி தான். கை தட்டுவதன் மூலமாகவே ஏராளமான நோய்களைக் கட்டுப்படுத்த முடியும் என அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
👏🏼இரண்டு உள்ளங்கைகளையும் சேர்த்து தட்டும்போது, மூளையின் பெரும்பான்மையான பகுதிகள் இயக்கப்படுகின்றன. உடலின் பல்வேறு உறுப்புகளின் செயல்பாட்டையும் இயக்கக்கூடிய 39 அக்குபஞ்சர் புள்ளிகள் உள்ளங்கைகளில் தான் இருக்கின்றன.
👏🏼அதனால் தினமும் காலையில் 10 முதல் 20 நிமிடங்கள் வரையிலும் கைகளைத் தட்டுவது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. அது நாள் முழுக்க சுறுசுறுப்பாகவும் ஃபிட்டாகவும் வைத்திருக்கும்.
👏🏼தினமும் கை தட்டுவதால் ஜீரணக்கோளாறுகள் நீங்கும்.
இன்றைய காலகட்டத்தில் 20 வயதைக் கடந்தவுடனேயே முதுகுவலியும் மூட்டுவலியும் வந்துவிடுகின்றன. ஆனால் தினமும் 20 நிமிடங்கள் வரை கை தட்டினால் முதுகுவலியும் மூட்டுவலியும் இருக்கிற இடம் தெரியாமல் பறந்து போய்விடும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
👏🏼வாதம், ரத்த அழுத்தம் போன்றவையும் கை தட்டுவதால் குணமாகும்.
👏🏼ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் வரை புன்னகையுடன் கை தட்டிக் கொண்டிருந்தால், இதயம் மற்றம் கல்லீரல் தொடர்பான நோய்கள் குறையும் என்கின்றனர் மருத்துவர்கள்.
👏🏼குழந்தைகளுக்கு தினமும் கை தட்டும் பழக்கத்தை பயிற்சியாகக் கொடுத்தால் அவர்களின் வார்த்தை உச்சரிப்பு தெளிவாக இருக்கும். கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள்.
👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼

தேடி வந்த மாப்பிள்ளை.

=========================
காஞ்சிப் பெரியவரைத் தரிசித்து, சென்னை திரும்பிய அந்த ஓவியர், வீடு வந்தார். சாய்வு நாய்காலியில் சோர்வோடு அமர்ந்தார். அவர் மனைவி ஆவலோடு கேட்டாள்:
'பெரியவாளை தரிசனம் செஞ்சேளா?
28 வயசாகியும் நம்ம பொண்ணுக்கு இன்னும் கல்யாணம் கூடி வரலியேங்கற கவலையைச் சொன்னேளா? பொருளாதார பிரச்னை தான் நம்ம பெண் கல்யாணத்தைத் தாமதப் படுத்தறதுன்னு தெளிவாச் சொல்லச் சொன்னேனே? பெரியவர் ஆசீர்வாதம் பண்ணினாப் போதும். நம்ம பெண் கல்யாணம் வெகுசீக்கிரம் நடந்துடும்.''
மனைவிக்கு எந்த பதிலும் சொல்லாமல் அவர் அமைதி காத்தார். அவருக்குச் சம்பளம் குறைவு. அன்றாடச் செலவுக்கே கடன் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம். இதில் கல்யாணத்திற்குப் பணம் சேர்ப்பது எப்படி?
மாப்பிள்ளை வீட்டார் கேட்கிற வரதட்சணையைப் பார்த்தால் மனம் மலைக்கிறது. வரதட்சணை வாங்கக் கூடாது என்று பெரியவர் ஓயாமல் சொன்னாலும் யார் கேட்கிறார்கள்?
ஓவியர் பெருமூச்சுடன், ''நான் தரிசனம் பண்ண வரிசைல நின்னேன். எக்கச்சக்கக் கூட்டம். அவர் அருகே நான் வந்தப்போ என்னால எதுவுமே பேச முடியலே. அவர் திருமுகத்தையே பார்த்தபடி மனசுல நம் பிரச்னையை நெனச்சுப் பிரார்த்தனை பண்ணினேன். வாய்திறந்து சொல்லத்தான் நெனச்சேன். அதுக்குள்ள பின்னாலிருந்து நகரச் சொல்லி நெருக்கினர். குங்குமப் பிரசாதத்தை வாங்கிண்டு வந்துட்டேன்... இப்படி ஆயிடுத்தேன்னு மனசு கலங்கறது.'
மனைவி தன்னைக் கோபித்துக் கொள்ளப் போகிறாள் என்று அவர் நினைத்தார். ஆனால் மனைவியின் எண்ணம் வேறு மாதிரி இருந்தது.
''எதுக்கு வாய்விட்டுச் சொல்லணும்? மனசில நெனச்சுண்டாலே போதும். பகவான்னா அவர்! பகவான் நம்ம கிட்டப் பேசறாரோ? ஆனால் நாம மனசுல வேண்டிண்டா நம்ம பிரார்த்தனையை நிறைவேத்தறார் இல்லையா? அது மாதிரிதான். சீக்கிரமே நல்லது நடக்கும்.''
அவர்கள் பேசிக்கொண்டிருந்த போது யாரோ கதவைத் தட்டினர். ஓவியரின் மனைவி கதவைத் திறந்தார். கணவனும் மனைவியுமாக இருவர் வீட்டினுள் நுழைந்தார்கள்.
வந்தவர்கள், ''நாங்க இதே வீதில குடிவந்து ஆறுமாசம் ஆச்சு. எங்க பையன் தினமும் உங்க பெண் போறப்போ வறப்போ பாத்திருக்கான். அவளோட அடக்கம் அவனைக் கவர்ந்திருக்கு. நீங்க சம்மதிச்சா உங்க பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்க விரும்பறான். அவன் வரதட்சணை வாங்காம கல்யாணம் பண்ணிக்கறதுன்னு உறுதியா இருக்கான். கல்யாணத்தை எங்க செலவிலேயே நடத்துவோம். அவன் கிட்ட எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாது. நிறையச் சம்பாதிக்கிறான். தான் நெனச்ச மாதிரிப் பெண் தனக்கு மனைவியா அமைஞ்சா, அவன் நம்பற ஒரே தெய்வமான பெரியவர் கிட்ட, தம்பதி சமேதரா ஆசீர்வாதம் வாங்கிக்கணும்னு மட்டும் சொல்றான்...'' அவர் பேசிக்கொண்டே போனார்.
ஓவியரின் மனைவி அளவற்ற மகிழ்ச்சியோடு தன் கணவரைப் பார்த்தாள். அவர் விழிகளில் கண்ணீர் தளும்பிக் கொண்டிருந்தது.

வேண்டம் பிஸ்கட் – நிச்சயம் சாப்பிடக்கூடாது – ஊட்டச்சத்து நிபுணர்.

பிஸ்கட் ( #Biscuit ) வேண்டம்  நிச்சயம் சாப்பிடக்கூடாது – ஊட்டச்சத்து நிபுணர்

பிஸ்கட் வேண்டம் நிச்சயம் சாப்பிடக்கூடாது – ஊட்டச்சத்து நிபுணர்
பள்ளிக் குழந்தைகள் தொடங்கி, பெரியவர்கள் வரை அனைவருக்கும்
பிஸ்கட் கொடுத்து உபசரிப்பது மரபாகி விட்டது. பெரும்பா லானோரின் தொலை தூரப் பயணங்களில் பிஸ்கட்தான் உணவாகவே இருக்கிறது. ‘நாலு பிஸ்கட்டில் ஒரு டம்ளர் பாலின் சக்தி கிடைக்கிறது’ என்ற அறிவிப்போடு விற்பனை க்குவரும் பிஸ்கட்டுகள் நம் கவனத்தை ஈர்க்கின்றன. இப்ப டி நம் வாழ்க்கையோடு இரண்டறக் கலந்திருக்கும் பிஸ்கட் உண்மையிலேயே நம் உடலுக்கு ஆற்றலைத் தருகிறதா? உணவுக்குப் பதிலாக பிஸ்கட் சாப்பிடலாமா?
“நிச்சயம் சாப்பிடக்கூடாது” என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் கற்பகம்.
“இன்றைய சூழலில் ஆபீஸ் மீட்டிங் தொடங்கி டீ பிரேக் வரை எல் லா இடங்களிலும் பிஸ்கட் முக்கிய உணவுப்பொருளாக இருக்கிறது. சிலர் பிஸ்கட்டை உணவாகவே உண்டு வாழ்கின்றனர்.
உண்மையில், பிஸ்கட் என்பது கழுத்தைச் சுற்றிய பாம்பு போல ஆபத்தான ஓர் உணவு என்பதைப் பலர் அறிவதில்லை. பிஸ்கட் மிருதுவாக இருக்க குளூட்டன் சேர்க்கப்படுகிறது. பிஸ்கட்டின் வடிவத்துக்காகச் சர்க்கரை, சுக்ரோஸ் மற்றும் குளுக்கோஸ், ஈஸ்ட், சோடியம் பைகார்பனேட், நிறமிகள் போன்றவை சேர்க்கப்படு கின்றன. பிஸ்கட்டின் ஆயுள்காலத்தை நீட்டிக்க ஹைட்ரஜனேட்டட் கொழுப்புச் சத்து (Hydrogenated Fat) சேர்க்கப்படும். இது காலப் போக்கில் டிரான்ஸ் ஃபேட் (Trans Fat) எனப்படும் மோசமான கொழுப்பாக மாறி, உடல் சார்ந்த பல பாதிப்புகளுக்குத் திறவுகோலாக அமையும்.
* பிஸ்கட் எந்த அளவுக்கு மிருதுவாக உள்ளதோ, அந்த அளவுக்கு அதிகப் புரதச் சத்துகளைக் கொண்டது. மிருதுத்தன்மை குறைந்தா ல், கொழுப்புச்சத்தின் அளவு அதிகமிருக்கிறது என்று அர்த்தம்.
* சுக்ரோஸ் அதிகமுள்ள சர்க்கரை, பிஸ்கட்டில் அதிகம் கலக்கப் படுகிறது. இது, உடலின் சர்க்கரை அளவை அதிகரிப்பதால் சர்க்கரைநோய், இதயம் சார்ந்த பிரச்னைகள், கொழுப்புச்சத்து அதிகரிப்பது போன்றவற் றை ஏற்படுத்தும்.
*சோடியம் பைகார்பனேட் எனப்படும் உப்பு பிஸ்கட்டில் அதிகளவு உள்ளது. உடலில் சோடியம் அதிகமானால், உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகக் கல், இதய பாதிப்புகள் போன்றவை ஏற்படும்.
* கெட்ட கொழுப்புச்சத்து உயர்வதால், பிஸ்கட் அதிகம் சாப்பிடுபவர்களுக்கு உடல் எடை அதிகரிக்கும்.
* சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான பிஸ்கட்டுகளில், டிரான்ஸ் ஃபேட் (Trans Fat) அளவு பூஜ்யம் என்று குறிப்பிடப்படுகிறது. இது உண்மையாக இருக்கவே முடியாது.
* `லோ இன் கலோரிஸ்’ (Low in Calories) என்று பல பிஸ்கட் பாக்கெட்டு களில் குறிப்பிடப்படுகின்றன. ஒரு க்ரீம் பிஸ்கட், குறைந்தபட்சம் 40 கலோரிகள் கொண்டது. எனவே பிஸ்கட்டைலோ கலோரி உணவு எனக் குறிப்பிடுவதே தவறு.
* பிஸ்கட்டை ஸ்நாக்ஸாக எடுத்துக்கொள்வது ஆரோக்கியமா ன விஷயமல்ல. காலை உணவாக டீ, பாலுடன் பிஸ்கட் சாப்பிடுகி றார்கள். சிறுவயதிலேயே இதைச் சாப்பிடுவதால் செரிமானக் கோளாறுகள், குடல் பிரச்னைகள் ஏற்படக்கூடும்.
“கட்டாயம் பிஸ்கட்டைத் தவிர்க்க அறிவுறுத்தப் படுகிறவர்கள் தவிர மற்றவர்கள் ஒருநாளைக்கு அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று பிஸ்கட் சாப் பிடலாம். க்ரீம் பிஸ்கட் என்றால் ஒன்றோ, இரண்டோ போதும். இது சிறியவர், பெரியவர் அனைவருக்கும் பொருந்தும்’’ என்கிற கற்பகம்,
வீட்டிலேயே பிஸ்கட் செய்து சாப்பிடுவதுதான் சிறந்த தீர்வு. அதையு மே அளவுக்கு மீறி எடுத்துக் கொள்ள வேண்டாம்” என்றும் அறிவுறுத்துகிறார்.
குழந்தைகளுக்கு பிஸ்கட் கொடுப்பது சரியா?
கார்த்திக் சூர்யா, குழந்தைகள்நல சிறப்பு மருத்துவர்.
“பிஸ்கட்டின் வேலையே பசியை அடக்குவதுதான். ஒரு குழந்தை மூன்று பிஸ்கட் சாப்பிட்டால், பசியே எடுக்காது. பெரும்பாலானவ ர்கள், குழந்தைக்குப் பாலில் நனைத்த பிஸ்கட்டைக் கொடுப்பார்கள். இது முற்றிலும் தவறான பழக்கம். க்ரீம் பிஸ்கட்டைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். ஆரஞ்சு ஃப்ளேவர், சாக்லேட் ஃப்ளேவர் எனப் பலவகை பிஸ்கட்டுகள் கடைகளில் கிடைக்கின்றன. இவையாவும் செயற்கை ஃப்ளேவர்கள். அதேபோல, க்ரீம் பிஸ்கட்டுகளில் சர்க்கரை அளவு அதிகமாக இரு க்கும். பெரியவர்களே வெள்ளை சர்க்கரை சாப்பிடக்கூடாது என அறிவுறுத்தப் பட்டுவரும் நேரத்தில், வளரும் குழந்தைகளுக்குக் கொடுப்பதென்பது, பல்வேறு பிரச்னைகளுக்குத் திறவுகோலாக அமையும்.
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு, காலை பிரேக்கில் சாப்பிட பிஸ்கட் கொடுத்தனு ப்பும் பெற்றோரைப் பார்க்கமுடிகிறது. இதனால் மதிய உணவை முழு மையாகச் சாப்பிட முடியாமல் போகும். பிரேக்கில் பழங்களைச் சாப்பி டக் கொடுங்கள். இது பசியைத் தூண்டுவதுடன், கூடுதல் சத்துகளைக் கொடுக்கும். மாலைநேரத்தில் பிஸ்கட் சாப்பிடுவது, அவர்களை மந்தப் படுத்தும் என்பதால் குழந்தைகளுக்கு பிஸ்கட் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.”

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...