Sunday, May 20, 2018

மத்திய அரசின் காவிரி நீர் பங்கீட்டு தொடர்பான வரைவு செயல் திட்டத்தில் மிக முக்கியமான அம்சம்.

" சம்பந்தப்பட்ட மாநிலங்கள் ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் தங்கள் மாநிலத்தில் உள்ள அணைகளின் கொள்ளளவு அந்த மாநிலத்திற்கு அந்தந்த மாதத்துக்கு எவ்வளவு தண்ணீர் தேவை, தமிழ் நாட்டுக்கு எவ்வளவு தண்ணீர் திறந்து விட வேண்டும் இருப்பு எவ்வளவு உள்ளது என்ற விவரங்களை காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு ஒவ்வொரு மாதமும் தாக்கல் செய்ய வேண்டும்"
இந்த பிரிவிற்கு கர்நாடகா பெரும் எதிர்ப்பு தெரிவித்தது.
ஆனால் மத்திய அரசின் வக்கீல், காவிரி படுகை பற்றாக்குறை உள்ள படுகை ஆகும்.எனவே தண்ணீரின் தேவையை முறையாக கணக்கிட்டால் ஒழிய தண்ணீர் திறப்பை ஒழுங்கு படுத்த முடியாது.எனவேதான் வரைவு செயல் திட்டத்தில் இந்த பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது,
என தெளிவாக கூறி விட்டார்.
இதன் மூலம் தமிழ்நாட்டிற்கு பற்றாக்குறை காலங்களில் கூட விகிதாசாரப்படி தண்ணீர் திறந்து விட்டே ஆக வேண்டும்.
வறட்சி காலங்களில் கூட தண்ணீர் உறுதி செய்ய பட்டுள்ளது.
தங்களுக்கு வேண்டிய தண்ணீரை முழுவதும் எடுத்து கொண்டு மீதி இருந்தால் திறந்து விடுவோம் என சொல்ல முடியாது.
இந்த மேற் கூறிய பிரிவை ஆளும் மத்திய பாஜக அரசு தமிழர் நலன் கருதி சேர்த்துள்ளது.
திமுக செய்த துரோகத்திற்கு 44 வருடங்களுக்கு பிறகு பாஜக மூலம் ஒரு விடியல், நன்மை பதிலாக கிடைத்துள்ளது.
இந்த பிரிவு பாஜக வால் புதிதாக தமிழக விவசாயிகளின் நலன் கருதி சேர்க்கப்பட்டுள்ளது.
பெரிய அளவில் இங்கு ஆதரவு இல்லாவிடினும் நேர்மையான ஆட்சி என்று வரும் போது பாஜக தன்னை சமரசம் செய்து கொள்வதில்லை என்பது இதன் மூலம் உறுதி படுத்தப்பட்டுள்ளது.
தமிழக ஊடகங்கள் இதை மறைக்க பார்க்கும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...