Thursday, May 17, 2018

கர்நாடக ஆளுநர் செயல் சரியா........? பத்திரிகையாளர் திரு.மாலன் அவர்கள்.

கர்நாடாக அரசியல் சூழ்நிலையில்
ஆளுனர் பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்ததை அடுத்து நடக்கும் விவாதங்கள் காரணமாக இந்தப் பதிவு
1.சட்டம் சொல்வது என்ன?
ஒரு அரசு சட்டமன்றத்தில் கூடியிருக்கும் பெரும்பான்மை உறுப்பினர்களின் நம்பிக்கையைப் பெற்றிருக்க வேண்டும் என்கிறது அரசமைப்புச் சட்டம் (Confidence of the MLAs present in the house) அது கட்சிஎண்ணிக்கைகளைக் கணக்கில் கொள்ளவில்லை. அறுதிப் பெரும்பான்மை பெறாத அரசுகள் பல மாநிலங்க்களில், தமிழகம் உட்பட ஆண்டிருக்கின்றன. 1991ல் மத்தியில் அமைந்த அரசும் கூட அத்தகைய அரசுதான். .
2. உச்ச நீதி மன்றத் தீர்ப்புக்கள் சொல்வது என்ன?
1994 ல் S.R.பொம்மை வழக்கின் தீர்ப்பு வெளியானது. அது நிர்வாகச் சீர்திருத்தங்கள் தொடர்பாக
அமைக்கப்பட்ட சர்க்காரியா கமிஷன் பரிந்துரைகளை வலியுறுத்தியது. தேர்தலுக்கு முந்தைய கூட்டணி ஏற்படாத சூழலில் தனிப் பெரும் கட்சிக்கு முதலில் அழைப்பு விடுக்க வேண்டும் எனபது சர்க்காரியா கமிஷன் பரிந்துரை.
அதைத்தான் கர்னாடக ஆளுனர் செய்திருக்கிறார்.
தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி என்பது கடைசி வாய்ப்பாகத்தான் இருக்க வேண்டும் என்கிறது சர்க்காரியா கமிஷன்.
சிலர் Governor can either invite the “single largest party/group”. என்று அந்தக் கமிஷன் அறிக்கை ஓரிடத்தில் குறிப்பிடுவதைச் சுட்டிக் காட்டுகிறார்கள். அந்த இடத்தில் group என்பதை அரசியல் கட்சி அல்லாதவை என்றுதான் பொருள் கொள்ள வேண்டுமேயன்றி தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி என்று அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது. ஏநெனில் ச,கமிஷன் அறிக்கை வேறு பல இடங்களில் அதைத் தெளிவு படுத்தியிருக்கிறது. அப்படியே குரூப் என்பது அரசியல் கட்சிகளைத்தான் குறிப்பிடுகிறது என்று வைத்துக் கொண்டாலும் அது தனிப் பெரும் கடசியை அழைக்கக் கூடாது என்று இந்த வரியில் கமிஷன் சொல்லவில்லை
3. ஆனால் கோவாவில் கவர்னர் தனிப் பெரும் கட்சியான காங்கிரசை அழைக்கவில்லையே?
இது தொடர்பாக காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. புதிதாகப் பதவி ஏற்றிருந்த பாஜக கூட்டணி அரசு, பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுனர் 15 நாள் அவகாசம் கொடுத்திருந்தார். ஆனால் உச்ச நீதி மன்றம் உடனே, அதாவது MLAக்கள் பதவி ஏற்ற உடனே நம்பிக்கை வாக்கெடுப்புக் கோர வேண்டும் என்று ஆணையிட்டது. வாக்கெடுப்பு நடந்தது. தன்னிடம் பெரும்பான்மை இருப்பதாகச் சொன்ன காங்கிரசால் பாஜக அரசை வீழ்த்த முடியவில்லை. மாறாக காங்க்கிரஸ் ஓர் உறுப்பினரை இழந்தது. அவர் கோவாவின் மூத்த காங்கிரஸ் தலைவர்களின் ஒருவரும் முன்னாள் காங்.முதலமைச்சருமான பிரதாப் சிங் ரானேயின் மகன் விஸ்வஜித் ரானே
4. ஜனநாயக மரபுகள்படி சரியா?
சித்தராமய்யா அமைச்சரவையில் இருந்த அமைச்சர்களில் 16 பேர் தேர்தலில் தோற்றுப் போயிருக்கிறார்கள். சித்தராமய்யாவே போட்டியிட்ட இருதொகுதிகளில் ஒன்றில் தோற்றுப் போனார். இவை எதைக் காட்டுகின்றன? மக்கள் காங்கிரசை நிராகரித்தார்கள் என்பதையே. அவர்கள் ஜனதா தளத்தையும் ஆதரிக்கவில்லை .ஜனதா தளம் 105 தொகுதிகளில் டெபாசிட் இழந்திருக்கிறது. இந்த இரண்டு கட்சிகளும் இணைந்து கொண்டு ஆட்சி அமைக்க அதிகாரம் கோருவது அறமா? சட்ட மன்றத்தில் ஆறில் ஒரு பங்கு உறுப்பினர்களை மட்டுமே கொண்ட ஒரு கட்சித் தலைவர் கையில் ஆட்சியைக் கொடுப்பது ஜன நாயகமா?
தேர்தலின் போது ஜனதா தளத்தை பாஜகவின் 'B team' என்று சொல்லி வந்தது காங்கிரஸ். இன்று அதே B team உடன் இணைந்து ஆட்சி அமைக்க கோருவது அறமா? தேர்தல் பிரச்சாரங்களின் போது ஜனதா தளத்தை ஊழல் கட்சி என்று சொன்னது காங்கிரஸ். இன்று தேர்தல் வெற்றிக்குப் பின் அந்தக் கட்சி புனிதர்களின் கட்சியாகிவிட்டதா?
5. காங்கிரஸ் அதிக வாக்குகள் பெற்றதாகச் சொல்கிறார்களே?
சதவீதக் கணக்கின் அடிப்படையில் அப்படிச் சொல்கிறார்கள். தோற்றவர்கள் எப்போதும் சதவீதம் சார்ந்து பேசுவதுதானே வழக்கம். ஆனால் நம்முடைய தேர்தல் முறையில் அதற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. அப்படிப் பார்ப்பதானால், கோவாவில் பாஜக பெற்ற வாக்குகள் 32.5% காங்கிரஸ் பெற்ற வாக்குகள் 28.4.% ஆனால் அங்கு காங்கிரஸ் அதிக இடங்களைப் பெற்றது. அங்கு அதிக இடங்களைப் பெற்ற காங்கிரஸை அழைத்திருக்க வேண்டும் என்போர் இன்று சதவீதக் கணக்கை பேசுவது ஏன்? அந்த சதவீதக் கணக்கு கோவாவிற்கு பொருந்தாதா?
6. காங்கிரஸ் தன் MLAக்களை ஓய்வு விடுதியில் அடைத்து வைத்து பாதுகாப்பதைப் பற்றி?
தங்கள் MLAக்கள் கட்சி மீது விசுவாசம் இல்லாதவர்கள், காசுக்கு விலை போய்விடுவார்கள் எனக் கருதுவதைத்தான் இது காட்டுகிறது. இவர்களை வைத்துக் கொண்டு அது எப்படி நல்லாட்சி கொடுக்க முடியும்?
பாஜக ஆட்சி நிலைக்குமா?
அது அவர்கள் தலைவலி. ஆனால் ஆளுனர் செய்ததில் தவறு இல்லை .

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...