Wednesday, May 9, 2018

பாசிட்டிவ் பெர்சனாலிட்டி பெர்சன் எப்படி இருப்பார்கள்.

எதுவும் நல்லதே நடக்கும் என நம்புவார்கள்.
எந்த விசயம் செய்ய யோசித்தாலும் வெற்றிகரமாக முடியும் என துணிந்து இறங்குவார்கள்.
தன்கையால் உழைத்து சாப்பிட வேண்டுமென்ற கொள்கைபிடிப்பு உடையவர்கள்.
நெகட்டிவ் ஆக யோசிக்க தெரியாததால் எல்லோரும் நம்மைப் போலவே நல்லவர்களாகவே இருப்பார்கள் என கெட்டவர்களை இனம் காண தெரியாதவர்களாக பல சமங்களில் ஏமாளிகளாவதும் உண்டு.
நெகட்டிவ் பெர்சனாலிட்டி ஆட்கள் எப்படி இருப்பார்கள்.
அடிப்படையிலேயே சோம்பேறிகள்.
பிறர் வற்புறுத்தலில் ஏதாவது வேலை செய்யவேண்டி வந்தாலும் அவ்வேலை விளங்காது என தீர்மானமே பண்ணி ஏனோ தானோ வென்று ஈடுபாடில்லாமல் செய்து அரைகுறையாக சொதப்பி விடுவார்கள்.
மனதில் ஒருவருக்கு நன்மை செய்யக் கூடாது என்று முடிவுகட்டி கொண்டு உதவி என கேட்டு வருபவரிடம் வெளியில் வெட்டி முறித்து விட்டுதான் மறுவேலை என சீன் போடுவார்கள்.
தான் கெட்டவர் பிறரை நம்ப மாட்டார் என்பது போல எல்லாரையும் கெட்டவர் என்ற சந்தேக கண்களோடு தான் எடை பாேடுவர். எல்லாரிடமும் குறை காண்பார்கள்.
நாம் எப்படி பட்டவராக இருக்கிறோம்? இருக்க வேண்டும். பாசிட்டிவ் மனிதரின் அப்பாவித்தனம் களைந்து நெகட்டிவ் மனிதரின் மனிதரைப் படிக்கும் கலை அறிந்து நிறைகுறைகள் பேலன்ஸ் பண்ணி வாழ்க்கையில் எல்லா நலமும் பெற்று வெற்றியாளராக வாழ வேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...