Wednesday, May 9, 2018

சந்தேகத்தை கிளப்புகின்றன.

தொலைகாட்சியில் நிறைய விளம்பரங்கள் வருகின்றன.எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஒரிரண்டு மட்டும் எனக்கு கொஞ்சம் சந்தேகத்தை கிளப்புகின்றன.
1. எல்லா சோப்பு விளம்பரங்களிலும் பெண்கள் குளிப்பதையே காட்டுகிறார்கள். ஏன் வீடுகளில் ஆண்கள் குளிப்பதே இல்லையா? (இதில் லைப்பாய் மட்டும் விதிவிலக்கு)
2. டெண்டிஸ்ட்கள் பரிந்துரைக்கும் பேஸ்ட் கோல்கேட் என்று சொல்லுகிறார்கள். எனக்குத் தெரிந்து என் வாழ்நாளில் இதுவரை எனக்கு யாரும் அப்படி சொன்னதில்லை. என் குடும்பங்களிலும் யாரிடமும் எந்த டாக்டரும் அப்படி சொன்னதில்லை. உங்கள் யாருக்காவது டாக்டர்கள் அந்த மாதிரி ஒரு குறிப்பிட்ட பேஸ்ட்டை உபயோகிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்களா? சொல்லுங்களேன்.
3. அதே மாதிரிதான் ஒரு டாக்டர் சந்திரிகா சோப்பை பரிந்துரைப்பது மாதிரி காட்டுகிறார்கள். உங்கள் யாருக்காவது அந்த அனுபவம் உண்டா? எந்த டாக்டராவது எதாவது ஒரு குறிப்பிட்ட சோப்பை உபயோகிக்க சொல்லி சொல்லுகிறார்களா?
Medical Council of India இதை ஏன் அனுமதிக்கிறது? அவர்கள் நினைத்தால் இதை தடுக்கலாம் அல்லவா? 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...