பிஸ்கட் ( #Biscuit ) வேண்டம் நிச்சயம் சாப்பிடக்கூடாது – ஊட்டச்சத்து நிபுணர்
பிஸ்கட் வேண்டம் நிச்சயம் சாப்பிடக்கூடாது – ஊட்டச்சத்து நிபுணர்
பள்ளிக் குழந்தைகள் தொடங்கி, பெரியவர்கள் வரை அனைவருக்கும்


“இன்றைய சூழலில் ஆபீஸ் மீட்டிங் தொடங்கி டீ பிரேக் வரை எல் லா இடங்களிலும் பிஸ்கட் முக்கிய உணவுப்பொருளாக இருக்கிறது. சிலர் பிஸ்கட்டை உணவாகவே உண்டு வாழ்கின்றனர்.
உண்மையில், பிஸ்கட் என்பது கழுத்தைச் சுற்றிய பாம்பு போல ஆபத்தான ஓர் உணவு என்பதைப் பலர் அறிவதில்லை. பிஸ்கட் மிருதுவாக இருக்க
குளூட்டன் சேர்க்கப்படுகிறது. பிஸ்கட்டின் வடிவத்துக்காகச் சர்க்கரை, சுக்ரோஸ் மற்றும் குளுக்கோஸ், ஈஸ்ட், சோடியம் பைகார்பனேட், நிறமிகள் போன்றவை சேர்க்கப்படு கின்றன. பிஸ்கட்டின் ஆயுள்காலத்தை நீட்டிக்க ஹைட்ரஜனேட்டட் கொழுப்புச் சத்து (Hydrogenated Fat) சேர்க்கப்படும். இது காலப் போக்கில் டிரான்ஸ் ஃபேட் (Trans Fat) எனப்படும் மோசமான கொழுப்பாக மாறி, உடல் சார்ந்த பல பாதிப்புகளுக்குத் திறவுகோலாக அமையும்.


* சுக்ரோஸ் அதிகமுள்ள சர்க்கரை, பிஸ்கட்டில் அதிகம் கலக்கப் படுகிறது. இது, உடலின் சர்க்கரை அளவை அதிகரிப்பதால் சர்க்கரைநோய், இதயம்
சார்ந்த பிரச்னைகள், கொழுப்புச்சத்து அதிகரிப்பது போன்றவற் றை ஏற்படுத்தும்.
*சோடியம் பைகார்பனேட் எனப்படும் உப்பு பிஸ்கட்டில் அதிகளவு உள்ளது. உடலில் சோடியம் அதிகமானால், உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகக் கல், இதய பாதிப்புகள் போன்றவை ஏற்படும்.
* கெட்ட கொழுப்புச்சத்து உயர்வதால், பிஸ்கட் அதிகம் சாப்பிடுபவர்களுக்கு உடல்
எடை அதிகரிக்கும்.

* சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான பிஸ்கட்டுகளில், டிரான்ஸ் ஃபேட் (Trans Fat) அளவு பூஜ்யம் என்று குறிப்பிடப்படுகிறது. இது உண்மையாக இருக்கவே முடியாது.
* `லோ இன் கலோரிஸ்’ (Low in Calories) என்று பல பிஸ்கட் பாக்கெட்டு களில் குறிப்பிடப்படுகின்றன. ஒரு க்ரீம் பிஸ்கட், குறைந்தபட்சம் 40 கலோரிகள் கொண்டது. எனவே பிஸ்கட்டைலோ கலோரி உணவு எனக் குறிப்பிடுவதே தவறு.

“கட்டாயம் பிஸ்கட்டைத் தவிர்க்க அறிவுறுத்தப் படுகிறவர்கள் தவிர மற்றவர்கள் ஒருநாளைக்கு அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று பிஸ்கட்
சாப் பிடலாம். க்ரீம் பிஸ்கட் என்றால் ஒன்றோ, இரண்டோ போதும். இது சிறியவர், பெரியவர் அனைவருக்கும் பொருந்தும்’’ என்கிற கற்பகம்,

வீட்டிலேயே பிஸ்கட் செய்து சாப்பிடுவதுதான் சிறந்த தீர்வு. அதையு மே அளவுக்கு மீறி எடுத்துக் கொள்ள வேண்டாம்” என்றும் அறிவுறுத்துகிறார்.
குழந்தைகளுக்கு பிஸ்கட் கொடுப்பது சரியா?
கார்த்திக் சூர்யா, குழந்தைகள்நல சிறப்பு மருத்துவர்.

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு, காலை பிரேக்கில் சாப்பிட பிஸ்கட் கொடுத்தனு
ப்பும் பெற்றோரைப் பார்க்கமுடிகிறது. இதனால் மதிய உணவை முழு மையாகச் சாப்பிட முடியாமல் போகும். பிரேக்கில் பழங்களைச் சாப்பி டக் கொடுங்கள். இது பசியைத் தூண்டுவதுடன், கூடுதல் சத்துகளைக் கொடுக்கும். மாலைநேரத்தில் பிஸ்கட் சாப்பிடுவது, அவர்களை மந்தப் படுத்தும் என்பதால் குழந்தைகளுக்கு பிஸ்கட் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.”


No comments:
Post a Comment