Thursday, May 10, 2018

Aasaiye azhivin aarambam..

💃🏼💃🏼💃🏼💃🏼💃🏼💃🏼💃🏼💃🏼💃🏼💃🏼💃🏼
*"அளவோடு ஆசைப்படு''*
✍🏼✍🏼✍🏼✍🏼✍🏼✍🏼✍🏼✍🏼✍🏼✍🏼✍🏼
ஆசையே அழிவுக்கு காரணம். இதை கூறாதவர்களே கிடையாது. இயேசு, புத்தர், மஹாவீரர் என எல்லாருமே, இந்த கருத்தை வலியுறுத்த தவறவில்லை.

ஆடம்பரமான உடைகள் அணிவதில் இருந்து, ருசியான உணவுகள், சொகுசு கார்கள், நகைகள், பதவி, பணம், பங்களா, புகழ், ஏன் நல்ல பெயருக்கும் கூட ஆசைப்படுபவர்களை, நம்மை சுற்றியும் பார்க்க முடிகிறது.
எதற்கும் ஆசை படாதவர்கள் யாரையாவது பார்ப்பது என்பது கிட்டத்தட்ட நடைமுறையில் சாத்தியப்படாத ஒன்று என்றே கூறலாம்.
சரி. அப்படி "ஆசை" இருந்தால் தான் என்ன? ஆசை தானே, மனிதனை ஒரு இலக்கை நோக்கி அடைய செய்யும் கருவி!.
ஆம், ஆசை என்பது ஒரு நல்ல கருவி தான். அதற்காக ''அத்தனைக்கும் ஆசைப்பட'' முடியுமா ? முடியாது
ஆசைகள், உண்மையில் எதிர்பார்ப்புகளை தூண்டி விடுகிறது.
எதிர்பார்ப்புகள் நிறைவேறாதபோது,கோபம் வருகிறது.
பின் அதன் வழியாக அனைத்து கெட்ட எண்ணங்களும், நம் உட்புக ஆரம்பிக்கின்றன.
உலகெல்லாம் ஒளி விடும் சூரியனை, கையாலோ, பிற பொருட்களாலோ மறைக்க நினைப்பதை விட, நம் கண்களை மூடிக் கொள்வது புத்திசாலித்தனம் அல்லவா ?
அது போல, ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றி விட துடிப்பதை விட, ஆசைகளையே அடக்குவதுதான் மிகவும் சிறந்தது.
ஆசையை உண்மையில் அடக்குவது என்பது ஒரு மிக பெரிய கலை.
ஆம்..
நண்பர்களே...
ஆசை என்பதே இல்லாத வாழ்க்கை வாழ முடியுமா? முடியாவிட்டால் முடிந்த வரை தேவைகளுக்கு மட்டுமே ஆசை கொள்ள முயலுவோம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...