Thursday, May 24, 2018

*நினைத்த காரியம் நிறைவேற்றும் ஆலயம் சென்னை ஆவடி சாலையில் திருமுல்லைவாயில் சிவன் கோவில் உள்ளது.*

வசிஷ்ட முனிவர் ஈசனை வேண்டி காமதேனுவைப் பெற்றது இத்திருக்கோவிலில
பிருகு முனிவர் தவம் செய்து ரத்தினங்களை மழையாகப் பெற்ற ஆலயம்.

இந்திரனைப் பிரிந்த இந்தி ராணி, கணவனோடு சேர்ந்து வாழ வரம் பெற்ற கோவில்.
அஸ்வினி முதலான 27 நட்சத்திரங்களுக்கும் பாவ விமோசனம் அளித்த கோவில்.
குசலவருக்கு பிரம்மஹத்தி தோஷம் நீங்கிய கோவில்.
வரம் தரும் பிரம்மாவே வரம் பெற்ற கோவில்.
துர்வாசர் சாந்தம் அடைந்தது இக்கோவிலில்.
நினைத்ததை நிறைவேற்றும் திருமுல்லைவாயில் மாசிலாமணீசுவரர் கொடியிடைநாயகி கோவில்.
இவ்வளவு சிறப்புக்கள் பெற்ற கோவில் நந்தி வழக்கம் போல இறைவனைப் பார்க்காமல் கிழக்கு நோக்கிப் பார்த்துக் கொண் டிருக்கிறது.
மாசிலாமணீஸ்வரர் குளிர்ச்சி வேண்டி எப்போதும் சந்தனக் காப்பிலேயே காட்சி தருகிறார் வருடத்திற்கு ஒருமுறை சித்திரை மாதம் சதய நட்சத்திரத்தன்று மட்டும் பழையது நீக்கி புதிய சந்தனக் காப்பு சாத்தப்படும்.
சூரியன், சந்திரன் ஆகிய கிரகங்கள் எல்லாம் இங்கே வந்து இறைவனை வழிபட்டதால் நவகிரகங்களுக்கென்று தனிச் சன்னதி கிடையாது அவர்கள் அனைவருமே இங்கே இறைவனிடம் ஐக்கியமானதால் தனிசன்னதி இல்லை.
No automatic alt text available.
கொடியிடைநாயகி பெயருக்கேற்ப கொள்ளை அழகுடன் காணப்படுகிறாள். நிஜமாகவே நேரில் வந்து உயிருடன் நிற்பது போலவே இருக்கிறது. கேட்ட வரத்தை உடனே தரும் தேவி இவள் தான் பார்த்தாலே தெரிகிறது. பரவசம் ஏற்படுகிறது கண் பனிக்கிறது மெய்சிலிர்க்கிறது.
உங்கள் வீட்டில் வைத்திருந்தால் நல்லது என்று குட்டி சைஸில் வெள்ளெருக்கு விநாயகரை வாங்கியிருப்பீர்கள். ஆனால் இங்கே வடதிருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் கருவறை வாசலில் பிரமாண்டமான இரண்டு வெள்ளெருக்குத் தூண்களே இருக்கின்றன இதனை கைகளால் தொட்டு இறைவனை வணங்கினால் நினைத்தவை எல்லாம் நடக்கும்
மாசிலாமணீஸ்வரரை மட்டுமே தியானித்து அந்தத் தூண்களைத் தொட்டு வணங்கினால் நினைத்த காரியம் நடக்கும்
இவ்வளவு சிறப்பு மிக்க கோவிலில் வழிபாடு செய்து வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்,
திருமுல்லைவாயில் சிவனை தரிசித்த பின் அந்த சிவன் கோவிலுக்கு அருகேயே உள்ள *அன்னை நீலம்மையார் ஜீவசமாதியை* தரிசனம் செய்யுங்கள்.
அன்னை நீலம்மையாரை தரிசித்த பின்
திருமுல்லை வாயில் கோவில் இருக்கும் மாடவீதி தெருவுக்கு எதிரே இருக்கும் தெருவில் வாருங்கள். அந்த தெருவில் பச்சையம்மன் கோவில் இருக்கிறது. பழமையான கோவில் அது. அந்த கோவிலை தரிசித்த பின் மேலும் பயணத்தை அதே ரூட்டில் தொடருங்கள்.
சரியாக திருமுல்லைவாயில் சிவன் கோவிலில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் cholambedu road டில் ஒரு அம்மா உணவகம் இருக்கும். அதற்கு எதிரே உள்ள தெருவில் நீங்கள் நுழைந்தால் ஒரு தாமரை குளம் வரும். மிக அழகான, வற்றாத நீர் உடைய, பலநூறு தாமரைகள் பூத்து குலுங்கும் குளம் அந்த குளம்.
அந்த குளத்தை ஒட்டி ஒரு ஹனுமார் கோவில் இருக்கிறது.
[திருமுல்லைவாயில் சிவன் கோவில் தான் Navigationனில் வரும். இந்த ஹனுமார் கோவில் வராது. அதே சமயம். cholambedu road Navigationனில் வரும்]
அந்த ஹனுமார் கோவிலின் உள்ளே.
105 வயது வரை பூத உடலோடு வாழ்ந்து பல அற்புத சித்துக்களை செய்த ஒரு மகானின் ஜீவசமாதி இருக்கிறது.
அந்த மகான் தான் மாசிலாமணி சித்தர்.
சித்தர்களில் பெருமாள் அடியார்களும் இருக்கிறார்கள். வைஷ்ணவ சித்தர்களும் உண்டு.
மாசிலாமணி சித்தர் ஒரு வைஷ்ணவர். தீவிர ஹனுமான் உபாசகர்.
திருமுல்லை வாயிலின் அருகே இருக்கும் இதே சோழம்பேடு தான் சுவாமிகளின் அவதார ஸ்தலம்.
தனது தபோ வலிமையால் பல அதிசயங்கள், அற்புதங்களை செய்த சுவாமிகள்
சோழம்பேட்டில் பிறந்து அதே சோழம்பேட்டில் ஜீவசமாதி அடைந்தவர் மாசிலாமணி சித்தர்.
1982-ம் ஆண்டில் தாம் வழிபட்டு வந்த ஆஞ்சநேயருக்கு கோவிலை எழுப்பி, கார்த்திகை மாதம் கும்பாபிஷேகமும் செய்தார்.
சுவாமிகள் ஜீவசமாதி அடைந்ததும் அதே கார்த்திகை மாதம்.
1995 - ம் ஆண்டு டிசம்பர் மாதம், 4-ம் தேதி, யுவ ஆண்டு, கார்த்திகை மாதம், 18-ம் தேதி, திங்கட்கிழமை, திரயோதசி திதி, பரணி நட்சத்திரத்தில் சுவாமிகள் ஜீவசமாதி அடைந்தார்.
மிக அற்புதமான, அதீத ஆற்றல் மிகுந்த அதிர்வலைகளை தன்னகத்தே கொண்டு இருக்கும் ஆலயம் மாசிலாமணி சித்தரின் இந்த ஆலயம்.
இறை நம்பிக்கை இல்லாத ஒருவர் கூட இந்த கோவிலின் அருகே உள்ள தாமரை குளத்தை ரசிப்பார். இயற்கையை விரும்பாதவர் யாரேனும் உண்டோ?
இத்தகைய இந்த அருமையான குளம், குளம் அருகே உள்ள கோவில் திருமுல்லைவாயிலில் உள்ள பலருக்கே தெரியவில்லை.
பல வலைத்தளங்கள் சென்னையில் உள்ள மகான்களின் ஜீவசமாதிகள், சித்தர் பீடங்களை போட்டு உள்ளது.
அது போன்ற வலைத்தளங்களில்
மாசிலாமணி சித்தர் ஜீவசமாதி திருமுல்லைவாயில்
என்று ஒற்றை வரியில் போட்டு இருக்கிறது.
மாசிலாமணி சித்தரின் கோவிலை கண்டு பிடிப்பதற்குள் எனக்கு போதும், போதும் என்றாகி விட்டது. அவரின் அருளாலே ஒருவழியாக அவரின் இருப்பிடத்தை கண்டு பிடித்தேன்.
சென்னையில் எவ்ளவோ இடங்களில் கோவில்கள், ஜீவசமாதிகள் இருந்தாலும். அதில் திருமுல்லைவாயில் தனித்த அடையாளத்தோடு இருக்கிறது. காரணம்.
இந்த ஊரின் இயற்கை அழகு. அங்கே பல நீர் நிலைகளை நாம் காண முடிகிறது.
இந்த காலத்தில் இது சற்று ஆச்சர்யமான விஷயம் தான்.
நமது உச்சந்தலையில் ஆயிரம் இதழ்கள் கொண்ட ஒரு தாமரை மலர் இருக்கிறது. அதை சகஸ்ர தளம் என்பார்கள்.
அதன் அறிவியல் பெயர் பிட்யூட்டரி கிளாண்ட்.
அந்த சகஸ்ர தள தாமரை அமிழ்து
இது போல் இயற்கை அழகு, தெய்வீக அதிர்வலை இரண்டும் ஒன்றாக இருக்கும் இடத்தில் நமக்கு அதிகமாக சுரக்கும்.
அந்த தாமரை அமிழ்து. நமது பல பிறவி பிணிகள், உடல் பிணிகளை நீக்கும்.
மாசில்லா மனதோடு நாம் மாசிலாமணி சித்தரை தொழுவோம்.
🔥திருச்சிற்றம்பலம்🔥

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...