Wednesday, May 9, 2018

தீமை செய்யும் அணுக்களை, நன்மை பயக்கும் அணுக்களாக மாற்றும் வழி.

தீமை தரக்கூடியவைகளாக இருந்தாலும்மனிதன் அவைகளைதனக்குச் சாதகமாக மாற்றிக் கொள்ளும் வல்லமை வாய்ந்தவன். 

அதே போன்றுதீமை செய்வோரின் உணர்வுகள் நமது உணர்வில் கலந்துவிட்டால்,அந்தத் தீமையை விளைவிக்கும் உணர்வுகள்நமக்குள் விளையாது தடுத்து,  சமப்படுத்தும் நிலை பெறவேண்டும்.

மகரிஷிகள்தம்மிடத்தில் தீமையின் உணர்வுகள் வந்து மோதும்பொழுது அவைகளை செயலற்றதாக்கிதீமையின் உணர்வுகளை ஒடுக்கி, அவைகளுடைய செயலாக்கங்களை மாற்றி, தம்முள் நல்லுணர்வினை,  வலிமை மிக்கதாக மாற்றியவர்கள்.

அவர்களைப் போன்று, நாம் நம்முள் தீமையின் உணர்வுகளை ஒடுக்குகின்ற பொழுது, ஒருவன்நமக்கு எத்தகைய தீமைகளை செய்து கொண்டிருந்தாலும்,  அது நம் உடலுக்குள்தீமை விளைவிக்கும் அணுக்களை உருவாக்குவதில்லை.

மகரிஷிகளின் அருளுணர்வுகள்நமது உடலில் கலக்கப்படும் பொழுது,  நமது உடலில் தீமைகளை உருவாக்கும் அணுக்கள் விளைந்திருப்பினும்,அவைகளை,  நமக்குள் நன்மை பயக்கும் அணுக்களாக மாற்றுகின்றன.

உதாரணமாக,  உடலுக்கு ஆரோக்கியம் தரும் நல்ல மருந்துடன்,
சிறிது விஷத்தைக் கலக்கப்படும் பொழுது,
விஷம் நல்ல மருந்திற்கு ஊட்டச்சக்தியாக மாறுகின்றது.
எந்த மருந்தைசிறிது விஷத்துடன் கலந்து கொடுக்கின்றோமோ,
அந்த விஷம் ஊடுருவி,
இந்த நல்ல மருந்தின் தன்மையைஉடலெங்கும் பரவச் செய்கின்றது.

நோய்வாய்ப்பட்ட மனிதனின் உடலில்மருந்தினைச் செலுத்தும் பொழுதுமருந்துடன் கலந்துள்ள விஷம்மருந்தினை எடுத்துச் சென்றுஉடலில் உள்ள வேதனையை உருவாக்கும் உணர்வின் அணுக்களை உணவாக உட்கொண்டுதன் இனத்தை உருவாக்கும் தன்மையால்நல்ல மருந்தின் தன்மை அடர்த்தியாகிவேதனையை உருவாக்கும் அணுக்களைவளரவிடாமல் தடுக்கச் செய்கின்றதுமருந்துடன் கலந்துள்ள விஷம்.

ஆகஇதைப் போன்று ஞானிகள் காண்பித்த வழியில்,
அருள்ஞானியின் உணர்வைநம் எண்ணத்துடன் கலந்து,  நாம்,எத்தகைய தீமையின் உணர்வைக் கண்டறிந்தோமோ, அப்பொழுது,
மகரிஷியின் ஆற்றல் மிக்கசக்தி நாம் பெற வேண்டும், 
ன்ற உணர்வினை இணைத்து,
நமது உடலுக்குள் செலுத்திவிட்டால்
அருள் ஞானியின் உணர்வுகள்
இந்த விஷமான நிலையை ஒடுக்கிவிட்டு,
நமக்குள் வலுக் கொண்ட நிலையாக  மாறுகின்றது.

இந்த உண்மைகளைஎமது குருநாதர் எமக்கு உணர்த்திஎம்முள் உணர்ச்சிகளை தூண்டச் செய்துஎமக்குள்இதனின் நினைவின் ஆற்றலை பதியச் செய்து,துருவமகரிஷிகளின் ஆற்றலை நீ பருகு என்றார்.

யாம் காட்டினுள் இருந்தபொழுதுபல உயிரினங்கள் தன் பசியைத் தணிப்பதற்காக மற்ற உயிரினங்களைத் துரத்துவதும்மற்றவைகள் அஞ்சி ஓடுவதும்சிக்கிக் கொண்டவைகள் ஓலமிடுவதும் போன்றவைகளைக் கண்டு,  யாம் அச்சப் படும் நிலை உண்டானது.

அவைகள் செய்த துயர நிலைகளால்துயரத்தை உருவாக்கும் அணுக்கள் எமக்குள் எப்படி விளைகின்றது என்றும்இதை உடனடியாக மாற்றுவதற்கு யாம் எவ்வாறு செயல்பட வேண்டும்என்றும்எமக்கு குருநாதர் உபதேசித்தார்.

ஆகமகரிஷிகள் தமக்குள் வளர்த்துக்கொண்ட உணர்வைஉன்னிடத்தில் வளர்த்துக்கொண்டால்மற்றொன்றைக் கொன்று புசிக்கும் அந்த உயிரினங்கள்உன்னைப் பார்த்தாலும்உன்னுள் வளர்த்துக் கொண்ட உணர்வின் மணம் கண்டுஅது அஞ்சி ஓடும். ஆகஅச்சுறுத்தும் உணர்வுகள் உனக்குள் வந்தாலும்,  அதை அடக்கி ஒளியாக உனக்குள் மாற்றுகின்றாய்.

எதனின் உணர்வை உனக்குள் அடக்குகின்றாயோஅதனின் உணர்வுகள் உனக்குள் வலு பெறும்பொழுதுவெளிப்படும் நுண்ணிய அலைகளை நுகரும் ஆற்றல், மற்ற உயிரினங்களுக்கு உண்டு.

இதனை நுகரும் உயிரினம்இவன் நம்மை அடக்கி விடுவான்என்ற உணர்வு கொண்டு அது அஞ்சி ஓடும் என்ற நிலைப்படுத்திஅதை நிதர்சனமாக காண்பித்தார் குருநாதர்.

ஆகவேநாம்மகரிஷிகளின் அருள்சக்தி என் உடல் முழுவதும் படர்ந்து என் உடலில் உள்ள ஜீவான்மாஜீவ அணுக்கள் அனைத்தும் பெறவேண்டும் ஈஸ்வராஎன்று எண்ணி ஏங்கி தியானிக்க வேண்டும்.

 நம்மில் கேட்டுணர்ந்த உணர்வின் தன்மை கொண்டுமகரிஷிகளின் அருள் உணர்வுகளை எண்ணி,  நமக்குள் இருக்கும்துன்புறுத்தும் உணர்வின் அணுக்களுடன்,மகரிஷிகளின் அருள்சக்தியை இணைக்கப்படும் பொழுது, அது நம்முள் தீமைகளைக்கவர்ந்திடும் நிலைகளை மாற்றி,  அருள் மகரிஷிகளின் இனங்களைகவர்ந்திடும் நிலை வருகின்றது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...