பொறுப்பு வேண்டாமா ?
பொறுப்பு வேண்டாமா ?
போட்டியில் தங்களை நிலை நிறுத்திக் கொள்வதற்காகவும், வர்த்தகத்தை

பரபரப்பு விறுவிறுப்பு என்கிற பெயரில் பேனை பெருமாளாக்கி பொய்யை உண்மையாக்கி மண்டையை காய வைக்கிறார்கள்.

காமத்தின் கண்களுக்கு காவி, பச்சை, சிவப்பு என நிறம் தெரியு மா இந்து, கிறிஸ்து, இஸ்லாம் என்ற பாகுபாடு புரியுமா? பிரச்சினையோடு
விடியும் அந்த மாநிலத்தில் மேலும் பிரச்சினைகளைத் தூண்டுவதா ஊடக தர்மம்?

நிர்மலாதேவி என்பவர் பல்கலைக்கழக மேலிடத்துக்கு சில மாணவிகளை எதற்கோ ஏற்பாடு செய்கிறார் இக்குற்றத்தை வெளிக்கொண்டுவந்து வெளிச்சம் போட்டுக்காட்டியதற்காக ஊடகங்களை பாராட் டலாம் ஆனால் உடனே அவளுக்கு கட்சி
மதச்சாயம் பூசி பிரதமர் மோடி வரைக்கும் தொ டர்பிருப்பதாக எத்தரிப்பதும் அவரைப் போலவே உள்ள வேறு ஒரு பெண் மணியின் ஒளிப்படங்களை வெளியிட்டு அந்த பெண் மணியின் மதிப்பை குறைத்து நிம்மதியை குலைப்பதும் பொறுப்பற்ற புறம்போக்குத் தனம்?

நடிகர் எஸ்.வி.சேகர் தனக்கு வந்த ஒரு பதிவை மற்ற வர்களுக்கு, படிக்காமல் அனு ப்பியது தவறு. அந்த பதிவை நீக்கி அதற்கு
மன்னிப்பும் கேட்டு விட் டார். அவரை கைதுசெய்ய போராடுபவர்களில் ஒருவர் கூட.. அந்த பதிவை எழுதிய ஒரிஜினல் எழுத்தாளரை கண்டிக்காதது ஏன்? பிரப லமான வரை எதிர்த்தால் தானும் பிரபலமாகலாம் என்கிற மலிவான விளம்பர எதிர்பார்ப்பாக இருக்கலாம் அல்லவா?

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையென்று சமூக வலைதளங்களிலும் கண்ணீர் விட்டு கதறுபவர்கள் ஆண்களே பார்க்கக் கூசும் சமீபத்திய
(தமிழ்) பட மொன்றைப் பற்றி மூச்சு விட மறந்ததது ஏன்? படம் அரங்கு நிறைந்து ஓடு கிறதாம். வெட்கப்பட வேண்டாமா? படத்தயாரிப்பாளருக்கும் இயக்குநரு க்கும் நடித்தவர்களுக்கும் பொறுப்புணர்வு வேண்டாமா?

எல்லாவற்றையும் அரசியலாக்குவது போராட்டமாக்கத் துடிப்பது, எல்லா வற்றிலும் இளைஞர்களை ஈடுபடுத்தி பதவிகளில் இருப்போர் வரைமுறையின்றி பேசுவது, ஜாதி மதத்தைப் புகுடுத்துவது எல்லாம்
பொறுப்பற்ற செயல்கள்.

மாறாது காரணம், ஜாதியில்லை மதமில்லை என்று சொல்கிற ஊட கங்களில் பல இன்று ஜாதியின் மதத்தின் பின்னால் இயங்குவதால் ஊடகங்களின் பொறுப்புணர்வை மதத்தின் பின்னால் இயங்குவதால் ஊடகங்களி ல் பொறுப்புணர்வை நாம் எதிர்பார்ப்பது முட்டாள் தனம்
நாம் மாறுவோம்.
பொறுப்பற்ற ஊடகங்களை புறந்தள்ளுவோம் தமிழன் தமிழன் என்று வெறுப்பேற்றும் பிரிவினைவாதிகளை ஓரங்கட்டுவோம். நல்லவர்களைப் பார்ட்டி நல்லதை போற்றினால் நாமும் நலம் பெறுவோம். நாடும் வளம்பெறும்.
No comments:
Post a Comment