
முதுகு வலியிலிருந்து விடுபட, முத்தான யோசனைகள்! – அவசியமான அலசல்
முதுகு வலியிலிருந்து விடுபட, முத்தான யோசனைகள்! – அவசியமான அலசல்
மூளையும் மற்ற உறுப்புகளும் தகவல் தொடர்புகொள்வதற்கான பாதை யாக இருப்பது முதுகுத் தண்டுவடம். முதுகெலும்புத் தொடர்களுக்கு

முதுகெலும்புத் தசையைத் தளர்வாக்கி, உறுதிப் படுத்தும் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள், முதுகெலும்பை வலுப்படுத்தும் பயிற்சிகள் செய்யவேண்டும்.
பெண்களுக்கு முதுகு வலி ஏற்பட, ஹைஹீல்ஸ் ஒரு முக்கியக்காரணம்.
ஹை ஹீல்ஸ் அணியும்போது, அது முன்னங் காலில் அழுத்தத்தை ஏற்படுத்தி முதுகெலும் பைப் பாதிக்கிறது.
அதிகஎடையுள்ள பொருட்களைத்தூக்கும்போது கவனம் தேவை. நின்ற படியே முதுகை வளைத் துத் தூக்கினால், முதுகெலும்பு பாதிக்கப்படும். எடையுள்ள பொருட்களை த்தூக்கும்முன், அதனருகில் சென்று, முட்டியைக் கொஞ்சம் மடக்கி, முதுகை நேராக வைத்து, தூக்கவேண்டும்
அதிக எடைகொண்ட பொருளை, பையை ஒரு கையில் மட்டும் அல்லது ஒரு பக்க தோளில் மாட்டித்தூக்கிச்செல்வதும் தவறு. 10கிலோஎடை கொண்டதாக இருந்தால், ஐந்து, ஐந்து கிலோ வாகப் பிரித்து இரண்டு கைகளில் தூக்கிச் செல்ல வேண்டும்.
மிகவும் கடினமான அல்லது மிகவும் மென்மையான மெத்தைக்குப் பதில்,
நடுத்தரமான அளவு மென்மையான மெத்தையில் படுக்க வேண்டும்.

உடல் எடையைக் கட்டுக்குள்வைத்து, எப்போதும் துடிப்பான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது, முதுகுவலி வருவ தைத் தவிர்க்கும். அதிக உடல் எடை, தொப்பை இருந்தால், அதிக அழுத்தத்தால் கீழ் முதுகு வலி வரக்கூடும்.
போதுமான அளவுநீர் அருந்துவது முதுகெலும்பைப் பாதுகாக்கும். முது கெலும்புத் தொடரில் உள்ள டிஸ்க் மற்றும் மென்மை யான திசுக்களுக்கு நீர்ச்சத்து அவசியம். உடலில் நீர்ச்சத்து குறையும் போது டிஸ்க்குகளின் அளவு சுருங்கி, பாதிப்பை ஏற்படுத்தும்.
வலியைப்புறக்கணிக்கக் கூடாது. எப்போதாவது ஒரு முறை முதுகு வலி வந்தால், பிரச்னை இல்லை. நான்கைந்து நாட்களுக்கு நீடித்தால், மருத்து வரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். வலியைப் பொறுத்துக் கொண்டு இருந்தால், முதுகு வலி மேலும் அதிகரிக்கும்.
No comments:
Post a Comment