Sunday, May 13, 2018

குதிகால் வலியிலிருந்து நிவாரணம் பெற . .

குதிகால் பகுதி எலும்புக்கு கீழே, முள்போல சிறிய அளவில் எலும்பு வளர்ந்தால் இதுபோன்ற வலி ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. அப்படி ஏதும் எலும்பு வளர்ந்திருக்கிறதா என்று “எக்ஸ்-ரே” எடுத்து பார்த்து, எலும்பின் வளர்ச்சியைப் பொ றுத்து சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். சாதாரண ஒரு அறுவை சிகிச்சைமூலம் இதை சரிசெய்துவிடலாம்.
பொதுவாக, பலருக்கு காலையில் எழுந்ததுமே பாதங்க ளை கீழே வைத்தால் சட்டென வலிக்கும். ஆனால், கொஞ் ச நேரத்தில் சரியாகி விடும். பாதங்களின் தசைகள் இறுகி போனாலும், சரியான காலணிகளைப் பயன்படுத்தாமல் இருந்தாலும் ஏற்படும் வலி இது. வெகுசிலருக்கு உடம்பில் உப்பு சத்து அதிகமானாலும் இப்படிப்பட்ட வலி உண்டா கும்.
குதிகாலில் ஏற்படும் வலியைப் போக்க வீட்டி லேயே இரண்டுவிதமான சிகிச்சைகள் மேற் கொள்ளலாம். ஒன்று வெந்நீர் ஒத்தடம். ஒரு பெரிய பாத்திரத்தில், தோலில் சூடு தாங்கும் பதத்தில் – பாதங்கள் மூழ்கும் அளவுக்கு – வெ ந்நீர் ஊற்றி அதில் பாதங்களை பத்து நிமிடங்கள் வரை வைத்திருங்கள். இதே போன்று காலை, மாலை இரண்டு வேளைகளும் செய்து வந்தால் ஒரளவு குணம் தெரியும்.
இரண்டாவது சிகிச்சை முறை, மெழுகு ஒத்தடம்! ஒத்தடம் கொடுப்பதற்கென்றே கடைகளில் மெழுகு கிடைக்கும். இந்த மெ ழுகை வாங்கி வந்து வெந்நீரில் போட்டு ஒரு துணியை அதில் நனைத்தால், மெழு கு அதில் ஒட்டிக்கொள்ளும். அதை அப்படி யே எடுத்து குதிகாலில் ஒத்தடம் கொடுத் தல் வலி குறையும்.
குதிகால் வலிக்கு காலணிகளின் பங்கு அதிகம் என்பதால் பாதங்கள் நன்கு அழுந்தும்படியான…. மென்மையான காலணி களை மட்டுமே ப யன்படுத்த வேண்டும். குறிப்பாக குதிகால் வலியு ள்ளவர்கள் “மைக்ரோ செல்லுலார் புட்வேர்” அணி வது அவசியம். இதை வீட்டிற்குள் நடமாடும் போ தும் அணிய வேண்டும். அப்படியும் உங்கள் வலி சரியாகவில் லையென்றால் பிசியோதெரபி நிபுண ரிடம் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம்.
வ‌யதுக்கு அதிகமான எடை இருந்தால் அதைக் குறைக்க வேண்டும் அதற்கான முறையான பயிற் சியை மேற்கொண்டாலும் வலி நீங்க வாய்ப்பிருக் கிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...