ஓசூர் சட்டசபை தொகுதி, அ.ம.மு.க., வேட்பாளராக புகழேந்தி நிறுத்தப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் வசித்து வரும் இவருக்கு, 'சீட்' வழங்கப்பட்டுள்ளது.தனக்கென ஒரு கூட்டத்தை சேர்த்துக் கொண்டு, என்ன பேசுகிறோம் என தெரியாமல், தினகரனை விட மேலானவர் போல, கட்சி நிர்வாகிகள் மனம் புண்படுத்தும்படி பேசுவது தான், இவரது வழக்கமாக உள்ளது.மாவட்ட செயலர் மாதேவாவிடம் துவங்கி, வட்ட செயலர் ராம்ஜி வரை, புகழேந்தி அலப்பறை கொடுத்துள்ளார்.
கடந்த, 26ம் தேதி, ஓசூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட, புகழேந்தி வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார்.தனக்கு இருக்கும் பலத்தை காட்ட, ஓசூர் பகுதியில் இருந்து, அதிகளவு நபர்களை அழைத்து வர ஏற்பாடு செய்திருந்தார்.மதியம், 1:15 மணிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய, சப் - கலெக்டர்அலுவலகத்திற்குள் நுழைந்த புகழேந்தி, 3:00 மணிக்கு மேல் தான், மனு தாக்கல் செய்தார்.
கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம், தேன்கனிக்கோட்டை சாலையில், அவரால் அழைத்து வரப்பட்டவர்கள், கடும் வெயிலில் காத்திருந்தனர்.மனு தாக்கல் செய்ததும், உடன் வந்த கூட்டத்தை பற்றி கவலைப்படாமல், தாலுகா அலுவலக சாலையில் உள்ள ஓட்டலில்சென்று புகழேந்தி சாப்பிட்டார். 11வது வட்ட செயலர் ராம்ஜி தலைமையில் வந்தவர்களுக்கு, சாப்பாடுக்கு ஏற்பாடு செய்யாததால், ராம்ஜி தன் தரப்பினருக்கு பிரியாணி வாங்கி கொடுத்து விட்டு, 16 ஆயிரம் ரூபாய் வரை செலவாகி இருப்பதாக, புகழேந்தியிடம் கூறி உள்ளார்.
'நானே, சப்பாத்தி சாப்பிட்டேன்; உன்னை யார் பிரியாணி வாங்கி கொடுக்க சொன்னது' எனக் கூறி, ராம்ஜிக்கு பணம் தர மறுத்து விட்டார். அது மட்டுமின்றி, மனுத்தாக்கலுக்கு ஆட்களை அழைத்து வர ஏற்பாடு செய்த வாகனங்களுக்கான வாடகை, 17 ஆயிரம் ரூபாயையும் தர வில்லை என, கூறப்படுகிறது.மேலும், அ.ம.மு.க., மாவட்ட செயலர், மாதேவாவிடமும், அடிக்கடி தகராறு செய்து, 'நான் சொல்வதை மட்டும் கேளுங்கள்' என்று, கறாராக கூறி வருகிறார்.
இதுவரை, வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பங்கேற்கவில்லை. தன் வலது, இடது கரமாக செயல்படும் சிலரை மட்டும் வைத்து, ஓசூரில் பிரசாரம் செய்து வருகிறார். இது, எடுபடுமா என தெரியவில்லை.தலைகனத்தின் உச்சியில் உள்ள புகழேந்தி, தி.மு.க., - அ.ம.மு.க., இடையே தான் போட்டி என்றும், கூறி வருகிறார். ஓசூரில், இவர் யார் என மக்களுக்கு தெரியாத நிலையில், ஓட்டுகளை பெற, அவர் மெனக்கெட்டது போல தெரியவில்லை. இவரது நடவடிக்கையால், உள்ளூர் கட்சியினர் கடும் கடுப்பில் உள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் வசித்து வரும் இவருக்கு, 'சீட்' வழங்கப்பட்டுள்ளது.தனக்கென ஒரு கூட்டத்தை சேர்த்துக் கொண்டு, என்ன பேசுகிறோம் என தெரியாமல், தினகரனை விட மேலானவர் போல, கட்சி நிர்வாகிகள் மனம் புண்படுத்தும்படி பேசுவது தான், இவரது வழக்கமாக உள்ளது.மாவட்ட செயலர் மாதேவாவிடம் துவங்கி, வட்ட செயலர் ராம்ஜி வரை, புகழேந்தி அலப்பறை கொடுத்துள்ளார்.
கடந்த, 26ம் தேதி, ஓசூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட, புகழேந்தி வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார்.தனக்கு இருக்கும் பலத்தை காட்ட, ஓசூர் பகுதியில் இருந்து, அதிகளவு நபர்களை அழைத்து வர ஏற்பாடு செய்திருந்தார்.மதியம், 1:15 மணிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய, சப் - கலெக்டர்அலுவலகத்திற்குள் நுழைந்த புகழேந்தி, 3:00 மணிக்கு மேல் தான், மனு தாக்கல் செய்தார்.

'நானே, சப்பாத்தி சாப்பிட்டேன்; உன்னை யார் பிரியாணி வாங்கி கொடுக்க சொன்னது' எனக் கூறி, ராம்ஜிக்கு பணம் தர மறுத்து விட்டார். அது மட்டுமின்றி, மனுத்தாக்கலுக்கு ஆட்களை அழைத்து வர ஏற்பாடு செய்த வாகனங்களுக்கான வாடகை, 17 ஆயிரம் ரூபாயையும் தர வில்லை என, கூறப்படுகிறது.மேலும், அ.ம.மு.க., மாவட்ட செயலர், மாதேவாவிடமும், அடிக்கடி தகராறு செய்து, 'நான் சொல்வதை மட்டும் கேளுங்கள்' என்று, கறாராக கூறி வருகிறார்.
இதுவரை, வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பங்கேற்கவில்லை. தன் வலது, இடது கரமாக செயல்படும் சிலரை மட்டும் வைத்து, ஓசூரில் பிரசாரம் செய்து வருகிறார். இது, எடுபடுமா என தெரியவில்லை.தலைகனத்தின் உச்சியில் உள்ள புகழேந்தி, தி.மு.க., - அ.ம.மு.க., இடையே தான் போட்டி என்றும், கூறி வருகிறார். ஓசூரில், இவர் யார் என மக்களுக்கு தெரியாத நிலையில், ஓட்டுகளை பெற, அவர் மெனக்கெட்டது போல தெரியவில்லை. இவரது நடவடிக்கையால், உள்ளூர் கட்சியினர் கடும் கடுப்பில் உள்ளனர்.
No comments:
Post a Comment