துக்ளக்கின் கருத்துக்கணிப்பு கள நிலவரமாக இருக்கலாம் ..அவர்கள் அதை பதிவு செய்திருக்கிறார்கள்... என்று சில நண்பர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்..
அவர்களுக்கு ஒரு விளக்கம்...
இலங்கை இறுதி யுத்தம் முடிந்த பிறகு , அங்குள்ள நிலவரங்களை தெரிந்து வருவதற்காக இதே இதயா தலைமையில் ஒரு குழுவை ஆசிரியர் சோ அவர்கள் இலங்கைக்கு அனுப்பினார் ...அவர்கள் அங்கு சென்று வந்து அங்குள்ள மக்களின் விடுதலைப் புலிகளுக்கு எதிரான மனப்பான்மையை பதிவு செய்ததோடு அதை மூன்று வார தொடராகவும் எழுதினார்கள்...

பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் இதே எஸ்.ஜே. இதயா இந்த விஷயம் பற்றி பேசும்போது , " ஒருவேளை அங்குள்ள மக்களின் கருத்து புலிகளுக்கு ஆதரவாக இருந்திருந்தால் அதை நீங்கள் என்ன செய்து இருப்பீர்கள்" என்று நான் ஆசிரியர் சோ அவர்களை கேட்டேன்... அதற்கு அவர் , " அப்படி ஒரு கட்டுரை நீங்கள் எழுதி இருந்தால் அதை வாங்கி வைத்துக் கொண்டிருப்பேன் ...ஆனால் துக்ளக்கில் பிரசுரித்திருக்க மாட்டேன்" என்று சொன்னாராம்...இது நான் சொன்னதில்லை.. இதே எஸ்.ஜே.இதயா முன்பு ஒருமுறை எழுதியது..
அதுதான் சோ... தான் கொண்ட கொள்கைக்கு மாறான கருத்துக்களை தன் பத்திரிகையில் அனுமதிக்கக் கூடாது என்பதில் ஆசிரியர் தெளிவாக இருந்தார்... எதிர்த்தரப்பின் கருத்துக்கு மதிப்பளிப்பது என்பதுப்வேறு ...அவர்களுடைய பிரச்சார ஊடகமாக தன்னுடைய பத்திரிகை மாறிவிடக் கூடாது என்பதில் ஆசிரியர் சோ அவர்கள் மிகத் தெளிவாக இருந்தார்...
குருமூர்த்தி இங்குதான் சொதப்புகிறார்... இவருக்கு மாற்றுக்கருத்தை அனுமதிப்பதற்கும் , அவர்கள் தம்மை பயன்படுத்தில்கொள்வதற்கும் உள்ள வித்தியாசம் தெரியவில்லை...
ஆசிரியர் சோ இருந்தவரை வாலைச் சுருட்டிக் கொண்டு இருந்த குள்ள நரிகள் இப்போது முழு சுதந்திரம் பெற்று ஆட்டம் போடுகின்றன... அவற்றை கட்டுப்படுத்தாமல் விட்டால் ஆசிரியர் சோ அவர்கள் உருவாக்கிய துக்ளக் எனும் தர்ம சாம்ராஜ்யம் மிக விரைவில் அழியும்...
No comments:
Post a Comment