திமுக பொருளாளர் துரைமுருகன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை தொடர்பான அறிக்கையை முறைபடி தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது..
திமுக பொருளாளர் துரைமுருகனின் வீடு, அவரது மகனின் பள்ளி, கல்லூரி, துரை முருகனின் நண்பரின் சிமெண்ட் கிடங்கு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். சோதனையில் கட்டு கட்டாக பணம், ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியானது.
இந்த விவகாரத்தில் வருமான வரித்துறை அறிக்கைக்குப் பின் நடவடிக்கை எடுப்பதாக தேர்தல் ஆணையர் தெரிவித்திருந்தார்..
இந்த விவகாரத்தில் வருமான வரித்துறை அறிக்கைக்குப் பின் நடவடிக்கை எடுப்பதாக தேர்தல் ஆணையர் தெரிவித்திருந்தார்..
இந்நிலையில், துரை முருகன் தொடர்புடைய இடங்களில் நடத்திய சோதனைகள் குறித்து வருமான வரித்துறை முறைப்படி தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பியுள்ளது.
அதனால், வருமான வரித்துறையினரின் அறிக்கையை ஆய்வு செய்தபின் தேர்தல் ஆணையம் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது..
அதனால், வருமான வரித்துறையினரின் அறிக்கையை ஆய்வு செய்தபின் தேர்தல் ஆணையம் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது..
No comments:
Post a Comment