திருமாவளவனின் பெயரைக்கூட போடாமல் தீண்டாமை சுவர் எழுப்பி வரும் உடன்பிறப்புகள் இனி எதிர்காலத்தில் 'தலித்தியம்' பேசும்போது அவர்கள் வரைந்த தீண்டாமை சுவர்களே சாட்சியாக நின்று சிரிக்கும்.
சட்டசபையில் திமுக "திராவிட கட்சிக்கு தலைமை ஒரு பாப்பாத்தியா?" என நக்கலாக கேட்டபோது,
"ஆமாம். நான் பாப்பாத்திதான். அந்த பாப்பாத்தி ஒரு திராவிட கட்சிக்கு தலைமையாக இருப்பதை நான் பெருமையாதான் நினைக்கிறேன்" என சொல்லி செருப்பால் அடிக்காத குறையாக வார்த்தையால் அடித்து திமுகவினரை உட்கார வைத்தார்.
அதையே பல காலமாக பிடித்துக்கொண்டு 'ஜெயலலிதா தன்னை பாப்பாத்தி என சட்டசபையிலேயே பெருமையாக சொல்லிக்கொண்டார்' என திமுக மங்குணிகள் வாந்தியெடுத்துக்கொண்டு சுத்தியதெல்லாம் பலரும் அறிந்த கதைதான். கேள்வியை மறைத்துவிட்டு பதிலை மட்டும் பிடித்து தொங்குவதில் திமுகவினரிடம் சகுனியும் தோற்றுப்போவான்.
அந்த பாப்பாத்திதான் 69% இட ஒதுக்கீட்டை எந்த காலத்திலும் யாரும் நீக்காமல் இருக்க இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் அதை சேர்த்து சட்ட பாதுகாப்பை ஏற்படுத்தி கொடுத்துவிட்டுப் போனார்.
அந்த பாப்பாத்திதான் "நான் அருந்ததியர் என்பதால் என் வீட்டில் நம்ம கட்சிக்காரங்கக்கூட சாப்பிட வர மாட்றாங்கம்மா" என மனம் நொந்துபோய் சொன்ன திரு.தனபால் அவர்களை தமிழ் நாட்டிற்கே உணவுத்துறை அமைச்சராக்கினார். அதுவும் போதாது என நினைத்து சட்டசபையில் தனக்கும் மேலான அதிகாரங்களை கொண்ட சபாநாயகராக்கி உயர்த்தினார்.
அதே நேரத்தில் "என்னை தினமும் பராமரிப்பதே ஒரு அருந்ததியர்தான்" என சொல்லிக் கொண்டிருந்தார் திராவிட இன தலைவர் கருணாநிதி.
ஜனாதிபதி தேர்தலில் மிகவும் ஒடுக்கப்பட்ட மலைவாழ் பழங்குடியின சமூகத்தை சார்ந்த பி.ஏ.சங்மாவை அதிமுக முன்மொழிந்தபோது, எதிரணியின் சார்பில் வங்காள பிராமணரான பிரனாப் முகர்ஜியை முன்மொழிந்து முதல் கையெழுத்து போட்டவர் திமுக தலைவர்.
அதற்கு முந்தைய ஜனாதிபதி தேர்தலில் அதிமுக அப்துல் கலாமை மீண்டும் ஜனாதிபதியாக்க முன்மொழியவுள்ள தகவல் கிடைத்ததும், 'கலாம் என்றால் கலகம் என்று பொருள்' என சம்பந்தமில்லாமல் அப்துல் கலாமை திட்டி அவர் வாயாலேயே 'ஒருமித்த கருத்து இல்லாவிட்டால் நான் போட்டியிடவில்லை' என சொல்லவைத்து போட்டியிலிருந்து விலக்கி, மராத்திய பிராமணர் பிரதீபா பாட்டீலுக்கு முன்மொழிந்து முதல் கையெழுத்து போட்டதும் திராவிட இன தலைவர்தான்.
பெரம்பலூர் தனித் தொகுதி பொது தொகுதியாக மாற்றியமைக்கப்பட்டதும் பெரம்பலூர் ஆ.ராசாவை நீலகிரி தனி தொகுதிக்கு விரட்டியடித்தார் திராவிட இன தலைவர் கருணாநிதி. ஆனால் காலங்காலமாக ஒரு தலித் தனித்தொகுதியில்தான் போட்டியிட வேண்டும் என்ற சிந்தனையை மாற்ற தலித் எழில்மலையை திருச்சி பொது தொகுதியில் நிறுத்தி வெற்றி பெற செய்தது 'பாப்பாத்தி' என திமுகவால் அழைக்கப்பட்டவரின் சாதனை.
"ஆ.ராசா தலித் என்பதால் 2G வழக்கில் சிக்க வைக்கப்பட்டிருக்கிறார். ஆரிய மாயையும், பார்ப்பன சூழ்ச்சியும் இன்னும் தொடர்கிறது" என காங்கிரஸ் கட்சியையே பிராமண கட்சி என வசைபாடிவிட்டு அதே காங்கிரஸ் கூட்டணியில் தொடர்ச்சியாகவும் இருந்தார்.
அதிமுக கூட்டணியில் திருமாவளவன் இருந்தபோது சாதி ரீதியான எந்த பாகுபாடும் இருந்ததில்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் திமுக கூட்டணியில் சாதி ரீதியான தீண்டாமையில் சிக்கும் ஆள் திருமாதான்.
எனக்கு உண்மையில் திருமா மீது எந்த பெரிய அபிப்பிராயமும் கிடையாது. திமுகவின் சாதி தீண்டாமையை விளக்கவே திருமாவை உதாரணமாக காட்டியுள்ளேன்.
மீண்டும் முதல் வரியை படியுங்கள்!

No comments:
Post a Comment