Sunday, November 10, 2019

முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் டி.என்.சேஷன் காலமானார்.

முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் டி.என்.சேஷன் தன் 87 வது வயதில் சென்னையில் மாரடைப்பால் காலமானார்.





கேரள மாநிலம், பாலக்காடு திருநெல்லையில் 1932ம் வருடம் பிறந்தார். இயற்பியல் பட்டப்படிப்பு முடித்த பின், சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிந்தார். அதன் பின் ஐ.ஏ.எஸ் படிப்பை முடித்தார்.
இவர் முழுப்பெயர் திருநெல்லை நாராயண ஐயர் சேஷன். 1955ம் ஆண்டு தமிழக கேடரில் ஐ.ஏ.எஸ்., பணியில் சேர்ந்து பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.இவர் பத்தாவது தலைமை தேர்தல் கமிஷனராக டிசம்பர் 12, 1990லிருந்து டிச., 11, 1996 வரை பதவி வகித்து வந்தார்.





சேஷன் 1989ல் 18 வது மத்திய அமைச்சரவை செயலாளராக பணி புரிந்துள்ளார். அவர் தன் சிறப்பான பணிகளுக்காக ராமன் மகாசேசே. அமெரிக்காவின் ஹவார்டு பல்கலையில் பப்ளிக் அட்மினிஷ்ட்ரேஷனுக்கான மாஸ்டர் பட்டமும் பெற்றார்.

தன் பதவி காலங்களில் தேர்தல் நடைமுறையில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்தவர் சேஷன். .தலைமை தேர்தல் கமிஷனராக ஓய்வு பெற்ற பின், 1997ல் நடந்த ஜனாதிபதி தேர்தலில், கே.ஆர்.நாராயணனை எதிர்த்து போட்டி யிட்டு தோல்வியடைந்தார். 1999ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில், குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதியில், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானியை எதிர்த்து, காங்., சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

இதன் பின், சென்னை அடையாறில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். அவரது மனைவி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்காலமானார். இந்நிலையில், உடல் நல குறைவு காரணமாக, டி.என்.சேஷன் நேற்று காலமானார்.


பிரதமர் மோடி இரங்கல்




தேர்தல் சீர்திருத்தங்களை நோக்கிய சேஷனின் முயற்சி ஜனநாயகத்தை வலுவுள்ளதாக்கி உள்ளது என மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...