Thursday, May 20, 2021

*பூசணிக்காயின் மருத்துவ பயன்கள்..*

 கொடியாக தரையில் படரும் பூசணிக்காயில் பல நன்மைகள் அடங்கி உள்ளன. இதில் தொண்ணூற்று ஆறு சதவிகிதம் தண்ணீர் தான். இதனால் குறைந்த கலோரியுடன் ஆரோக்கியமான உணவாக உள்ளது. நார்ச்சத்து அதிகமுள்ளதுடன் விட்டமின் சி, ரிபோஃப்ளேவின், ஜிங்க் ஆகிய சத்துக்கள் உள்ளன. குறைந்த அளவில் இரும்புச்சத்து, பாஸ்பரஸ், செம்புச் சத்து, மக்னீஷியம் இவையெல்லாம் உள்ளன.

நீரிழிவு, இதய நோய் இவற்றை தடுக்கும் சத்துக்கள் உள்ளதாக ஆராய்ச்சியில் நிரூபிக்கப் பட்டுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
சீரண சக்தியை அதிகரிப்பதுடன் உடல் எடை ஆரோக்கியமான அளவுக்கு இருக்க உதவுகிறது. இதில் உள்ள கரையும் நார்சத்து வயிற்றை நிரப்பிய உணர்வு ஏற்
பூசணிக்காய்
இது இரு வகைப்படும் :
1.மஞ்சள் பூசணி (பரங்கி காய்,சக்கரை பூசணி)
2.வெண்பூசணி (கல்யாண பூசணி,திருஸ்டி பூசணி)
பூசணி விதைகளும் அதிக சத்து மிகுந்தவை
இயற்கை சத்துக்கள்
1.வைட்டமி ஏ,சி, இ ,பி6, பி காம்பளக்ஸ்
2. ஆன்டி ஆக்சிடன்ட்
3.ஆல்பா,பீட்டா, கரோட்டீன்,லூட்டீன்
4.கெராட்டினாயிட்ஸ்
5.கால்சியம் , தாமிரம்,பாஸ்பரஸ்,பொட்டாசியம்
6.நார் சத்து
7.ட்ரிப் டொபன் எனும் அமினோ அமிலம் உள்ளது.
8.மெக்னிசியம், சுண்ணாம்பு சத்து, துத்தநாகம்
பயன்கள் :
1.உடல் சூடு தணியும்(குறையும்)
2. சிறுநீர் வியாதிகள் வராமல் தடுக்கப்படுகிறது
3.உடல் வலியை குறைக்கின்றது
4.இரத்தம் விருத்தி ஆகின்றது
5. தொடர் இருமல், நெஞ்சு சளி குணம் ஆக்கும் தன்மையது, வராமலும் தடுக்கும்.
6.நீர் சத்து நிறைந்தது
7.மஞ்சள்காமாலை வராமல் தடுக்கின்றது
8.மெலிந்த தேகம் சதை போடும்
9.புற்று நோய் வராமல் தடுக்கும்
10. தசை சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கின்றது
11.எலும்புருக்கி நோய் வராமல் தடுக்கின்றது
12. உடலில் உள்ள நாடா புழுக்களை மலம் மூலம் வெளியேற்றுகிறது.
13. தூக்கமின்மைக்கு பூசணி விதை சாறு அருந்த ஆழ்ந்த தூக்கம் தரும்.
14. உடல் சோர்வு நீங்குகிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...