அக்பர் குறித்து பள்ளிப் பாடங்களில் படித்தது நமக்கெல்லாம் நினைவிருக்கலாம் ...
அவரின் ஆட்சிக்காலம் பொற்காலம் என்றெல்லாம் படித்தது நினைவிருக்கிறது ... ஆனால் அக்பர் எத்தனை பெரிய அயோக்கியன் என்ற செய்தி நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?
அந்த காமுகன் ஒவ்வொரு வருடமும் நவ்ரோஜ் மேலா (Nauroj Mela) என்றொரு விழா நடத்துவானாம். பெண்கள் மட்டுமே அனுமதியளிக்கப்படும் விழா அது. அக்பர் பெண் வேடமிட்டு அதில் கலந்துகொள்வானாம். அவனை கண்ணில் அகப்படும் அழகான பெண்களை அவனின் பெண் வேலையாட்கள் நைச்சியமாக பேசி அக்பரிடம் அழைத்து வருவார்களாம் ... ஏன் ... எதற்கு என்ற விளக்கம் சொல்லவும் வேண்டுமோ?
அப்படி ஒரு முறை விழா நடந்தபோது மஹாராணா ப்ரதாபின் தம்பி ஷக்திசிங்கின் மகளும் பிக்கானேர் அரசர் ப்ருத்விராஜின் மனைவியுமான பைசா கிரண்தேவி (Baaisa Kirandevi) வந்துள்ளார்.
அவரின் அழகில் கிறங்கிய அக்பர் ஜனானா மஹாலுக்கு தந்திரமாக வரவழைத்துள்ளார். அக்பர் அவரை தொடமுயன்றபோது மறைத்து வைத்திருந்த கத்தியை உருவி அக்பரை தாக்கி கீழே தள்ளி ... அக்பரின் நெஞ்சில் கால் வைத்து ... கத்தியை கழுத்தில் வைத்துள்ளார் ... கீழ்தரமானவனே உன் கடைசி ஆசை என்ன என்று கேட்கிறார் ... அப்போது அக்பர் "தேவி நீங்கள் யாரென்று தெரியாமல் தவறு செய்துவிட்டேன் ... என்னை மன்னியுங்கள்" என்று கதறியிருக்கிறான் ... கிரண் தேவி ஆணையிடுகிறார் ... இனி எப்போதும் நவ்ரோஜ் மேலா நடத்தக்கூடாதென்று ... அக்பர் ஒப்புக்கொண்டு ஓடிவிடுகிறார் ...
இந்த தகவல் கிரிதர் அஸியாவின் புத்தகம் ஸகத் ரஸோ (பக்கம் 632)ல் இருக்கிறது ... இந்த ஓவியம் பிக்கானேர் அருங்காட்சியகத்தில் "உயிர் பிச்சை கேட்கும் அக்பரின் நெஞ்சின் மேல் கால் வைத்து ... கத்தியோடு நிற்கும் கிரண்தேவி" என்ற தகவலுடன் இருக்கிறது ...!

No comments:
Post a Comment