Monday, January 17, 2022

காங்கிரஸ்., - எம்.பி., கார்த்தி சிதம்பரம்.

 'கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது, 'நீட்' தேர்வு. மாநிலங்கள் என்ன தான் எதிர்த்தாலும், மத்திய அரசின் ஒப்புதல் இன்றி இத்தேர்வை ரத்து செய்ய முடியாது. நல்லவேளை நான் இந்தியாவில் படிக்காமல் அமெரிக்காவில் படித்தேன்...' என்று பேட்டி அளித்து இருக்கிறார்.

சாதாரணமாக அன்னாரது இந்த பேட்டியை படிப்போருக்கு, 'அடடா... 'மாஜி' மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் சீமந்த புத்திரன் கார்த்திக்குக்குத் தான், கிராமப்புற மாணவர்கள் மீது எவ்வளவு அக்கறை!' என்று வியக்கத் தோன்றும்.ஆனால், கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் தான், அன்னார் எவ்வளவு தற்பெருமை பீற்றிக் கொண்டிருக்கிறார் என்பது தெரிய வரும்.'நல்லவேளை நான் இந்தியாவில் படிக்காமல், அமெரிக்காவில் படித்தேன்' என்கிறார். இவர் அமெரிக்காவில் படித்து வாங்கிய பட்டங்களுக்கு, இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நுழைவுத் தேர்வு எழுத வேண்டிய அவசியமே இல்லை.
ஆனால், இந்தியாவில் நடக்கும் நுழைவுத் தேர்வை எழுத அஞ்சியே, அவர் அமெரிக்காவுக்கு சென்று படித்தது போல, 'புருடா' விடுகிறார். கார்த்தி சிதம்பரத்திடம் மிதமிஞ்சிய செல்வச் செழிப்பு இருக்கிறது. அதனால் அவர் அமெரிக்கா சென்று படித்தார்; நம் பிள்ளைகளால் அது முடியுமா?அடுத்து அந்த 'நீட் தேர்வு வழக்கில் அரசுக்கு ஆதரவாக வாதாடி, வெற்றியும் பெற்றவர் என் தாய் நளினி சிதம்பரம் தான்' என்பதையும், கார்த்தி சொல்ல வேண்டியது தானே?
அரசியல்வாதிகள் எவ்வளவு புளுகினாலும், மக்களாகிய மடையர் கூட்டம் கேட்டுக் கொண்டிருக்கும் என்ற எண்ணத்தால், இவ்வளவு, 'புருடா'க்கள் வெளியாகின்றன.அதெல்லாம் சரி... இந்த நீட் தேர்வுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கிறதா அல்லது எதிர்க்கிறதா என்பதை மட்டுமாவது தெளிவாகச் சொல்லுங்கள் சிவகங்கை சீமான் கார்த்தி சிதம்பரம் அவர்களே...!!!
May be an image of 1 person

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...