Thursday, June 29, 2023

மாயை ............

 ஒரு நாள், கிருஷ்ண பகவானும் நாரத முனிவரும் ,நடைப்பயணம் மேற்க்கெண்டனா், சிறிது தூரம் சென்றுக்கெண்டு, இருக்கையில் நாரதருக்கு ஒரு சந்தேகம் எழுந்தது ,கிருஷ்ணா மாயை என்றால் என்ன ,,என்று கேட்டாா் ???

கிருஷ்ணா் சொன்னாா் ,நாரதா விடை தருகிறேன் அதற்குமுன் நடந்து நடந்து எனக்கு .மிகவும் களைப்பாக இருக்கிறது ,சிறிது தண்ணீ்ா் வேண்டும் கொண்டுவா, என்றாா் நாரதா் தண்ணீா் தேடி புறப்பட்டாா் ,எங்குமே தண்ணீா் கிடைக்கவில்லை ,,அப்படியே சென்று சென்று,, ஒரு அழகிய கிராமத்தை வந்தடைந்தார் அங்கு ,ஒரு இளம்பெண் தண்ணீா் சுமந்துக்கொண்டு சென்றுக்கெண்டு
இருந்தாள்
#நாரதா்: பெண்ணே எனக்கு மிகவும் தாகமாகஇருக்கிறது தண்ணீா் கெஞ்சம் தருகிறாயா ,என்றாா் தண்ணீா் கொடுத்தாள் நாரதர் குடித்தாா் ,
பின்பு அவளை பாா்த்தாா், மிகவும் அழகாக இருந்தாள் ,அவள் அழகில் மயங்கி ,அவளையே திருமணம் செய்ய வேண்டினார் எனது அப்பா அம்மாவிடம் பேசுங்கள் என சொல்லி நாணத்துடன் சென்றாள் நாரதரும் பெண்ணின் தாய் தந்தையுடன் பேசி நல்ல நாளில் திருமணமும் நடந்தேறியது சந்தோஷமான வாழ்வை வாழ்ந்தாா் வருடங்கள் ஓடின குழந்தை குட்டிகள் ,,ஆடு .மாடு .நிலம் .என ஒரு சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தாா் ,, பிரளயள காலம் ஒரு நாள் மிகப்பெரிய மழை வந்தது,, ஆறு. குளங்கள் நிரம்பின ,அன்று பார்த்து மழை நிற்க்கவே இல்லை ,,கடுமையான மழை ஊரில் இருந்த பழைய நீர் தடுப்பு அணை அதிக மழை காரணத்தால் உடைந்தது ஊரெல்லாம் தண்ணீரில் அடித்து சென்று கொண்டு இருந்தன நாரதா் வீடும் இரையாகின தனது கைகளில் மனைவி குழந்தைகளை பிடித்துக்கொண்டு ,,,கதறி அழுகிறார் கிருஷ்ணா ,,காப்பாற்று கிருஷ்ணா காப்பாற்று ???
முதுகில் கை பட்டது திரும்பி பாா்த்தாா் ,பின்னால் கிருஷ்ணா் ,,நாரதா தண்ணீா் எங்கே ,
கிருஷ்ணா "என் மனைவி பிள்ளைகள் "எங்கே
கிருஷ்ணா் சொன்னாா் ;நான் உன்னிடத்தில் தண்ணீா் கேட்டு ,சிறுதுநேரமே ஆகிறது ,,அதற்க்குள் ஒரு வாழ்க்கையே வாழ்ந்து விட்டாய் ,இது தான் மாயை பூமியில் சிறிது நேரம் மாயை வாழ்க்கையை "வாழ்ந்துவிட்டு வந்திருக்கிறாய் ". அழிவற்ற தேவரான உனக்கே இன்நினை என்றால் சாமான்ய மனிதன் என்ன செய்வான்
( பொருள்,, உடலுக்கு அழிவுஉண்டு ஆன்மாவுக்கு என்றுமே அழிவு இல்லை துன்பம் துயரம் துக்கம் இன்பம் எதுவுமே நிலையில்லை நாம் மாயை வாழ்க்கை தான் வாழ்ந்துக்கொண்டு இருக்கினறோம் எதும் நிலையற்றது )

செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கியது ஏன்? ஆளுநர் மாளிகை விளக்கம்.

 அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பித்துள்ளார். இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜியை நியமிக்க முதல்வர் ஏற்கனவே பரிந்துரை செய்திருந்த நிலையில், அவர் மீதான வழக்கை சுட்டிக்காட்டி ஆளுநர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கை: வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை செந்தில் பாலாஜி எதிர்கொண்டுள்ளார். அமைச்சர் பதவியை அவர் தவறாக பயன்படுத்தி உள்ளார். தற்போது அவர் அமலாக்கத்துறையால் விசாரிக்கப்பட்ட குற்ற வழக்கில் நீதிமன்றக் காவலில் உள்ளார். மேலும், ஊழல் தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. எனவே, செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் தொடர்ந்தால் வழக்கு விசாரணை நியாயமாக நடக்காது. வழக்கு விசாரணை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இந்த சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து ஆளுநர் நீக்கி உள்ளார். இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

30 லட்சம் ரியால் கடன் - முதியவரை மணக்க முடிவெடுத்த சௌதிப் பெண் .

சவுதியில் வாழும் ஒருவர் தனது குடும்ப செலவினங்களுக்காக ஒரு பணக்காரரிடம் இருந்து சிறுகச் சிறுக சுமார் 30 லட்சம் ரியால்களை கடனாக வாங்கியிருந்தார்.
நீண்ட காலம் ஆகியும் வாங்கியவர் பணத்தை திருப்பி செலுத்தாததால் வெறுத்துப் போன பணக்காரர், போலீசில் புகார் அளித்தார்.
அந்நாட்டின் (சௌதி) சட்டத்தின்படி, இது தொடர்பாக நடைபெற்று வரும் வழக்கில் கடனை அடைக்கும் வரை பிரதிவாதியை சிறையில் அடைக்க நேரிடும்.
குடும்பக் கடனை அடைக்க முடியாமல் தன்னை பெற்ற தந்தை சிறையில் வாடப் போவதை அன்றாடம் நினைத்து, நினைத்து அழுது தவித்த ஒரே மகள், அவரை தண்டனையில் இருந்து மீட்பதற்காக தனது இளமையை தியாகம் செய்ய தீர்மானித்தார்.
கடன் கொடுத்த 60 வயது முதியவரை இருபதே வயதான அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.
என் தந்தை மீதான கடனை தள்ளுபடி செய்தால் உங்களை திருமணம் செய்து கொள்கிறேன்.
அந்த பணத்தை எனக்கு தந்த (மஹராக) கணக்கில் வைத்துக் கொள்ளுங்கள் என்று அவர் தெரிவித்தார்.
தனது வீட்டுக்கு வந்து, திருமணம் செய்து அழைத்து செல்லும்படி கூறிய அந்த பெண், அதற்கான ஏற்பாடுகளையும் துரிதமாக செய்தார்.
திருமணப் பதிவாளரை வீட்டுக்கு வரவழைத்த அவர் மணமகனின் வரவுக்காக வழி மீது விழி வைத்து காத்திருந்தார்.
சொன்ன நேரத்திற்கு சரியாக வந்த ‘மாப்பிள்ளை’ அந்த இளம் பெண்ணுடன் சுமார் ஒரு மணி நேரம் தனியாக பேசினார்.
தனக்கு ஏற்கனவே 3 மனைவியர் இருப்பதாக அவர் கூறியபோது, ‘நான்காவதாக ஒரு ஓரத்தில் இருந்து கொள்கிறேன்.
கடனில் இருந்து என் தந்தையை விடுவித்தால் போதும்’ என்று கெஞ்சினார்.
ஒரு முடிவுடன் வழக்கறிஞருடன் வந்திருந்த முதியவர், தான் வழங்கிய கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.
அத்துடன் மேலும் 30 லட்சம் ரியால் ‘செக்’கை எழுதி கையொப்பமிட்டு அவர் அந்த பெண்ணிடன் அளித்தார்.
‘இதை என்னுடைய திருமண சீதனமாக ஏற்றுக்கொள்.
உன் வயதுக்கு ஏற்ற ஒரு வாலிபரை திருமணம் செய்து கொண்டு நீ மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும்’ என ஆசீர்வதித்து விட்டு சென்றார்.
தந்தையை பிரிய விரும்பாமல் முதியவரான தன்னை திருமணம் செய்துக் கொள்ள முன்வந்த அந்த இளம்பெண்ணின் குடும்பப் பாசத்தையும், தியாகத்தையும் மெச்சிப் பாராட்டிய அவர், மீண்டும் இதைப் போன்ற முடிவுக்கு நீ சென்று விடக் கூடாது என்று எச்சரித்து விட்டும் சென்றார்.
இந்திய மதிப்புக்கு சுமார் 5 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்ததுடன், கடன்காரரின் மகளுக்கு மேலும் 5 கோடி ரூபாயை திருமண அன்பளிப்பாக வழங்கிய அந்த முதியவரின் தயாள குணம்,
எங்கிருந்து வந்ததது ???
நாம் சிந்திக்க வேண்டாமா ??
No photo description available.
All reaction

நீங்களே சொல்லுங்கள் நியாயம்.

 

♦ஒரு பெண் டிரைவிங் லைசென்ஸ் வாங்க RTO விடம் சென்றார்.
♦RTO கேட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதில் திருப்தியாயில்லை.
♦ லைசென்ஸ் தர மறுத்து விட்டார்.
♦இரண்டாம் முறை சென்ற போதும் RTO கேட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதில் திருப்தியாயில்லை.
♦ லைசென்ஸ் தர மறுத்து விட்டார்.
♦மூன்றாம் முறை சென்றார்.
♦ அப்போதும் RTO கேட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதில் திருப்தியாயில்லை.
♦ லைசென்ஸ் தர மறுத்து விட்டார்.
♦நான்காவது முறையும் RTO கேட்ட கேள்விக்கு அந்தப் பெண் சொன்ன பதில் திருப்தியாயில்லை.
♦RTO லைசென்ஸ் தர மறுத்து விட்டார்.
♦அந்தபெண்ணுக்கு இந்தத்தடவை கடுமையான கோபம் வந்து விட்டது.
♦ RTO வைப் பார்த்துக் கேட்டார், நீங்கள் என்னதான் எதிர்பார்க்கிறீர்கள்.
♦நான் சொன்ன நான்கு பதில்களையும் தவறென்று சொன்னால் நான் என்ன செய்ய முடியும்?
♦அப்படி அந்த RTO என்ன தான் கேட்டார்..
♦ அந்தப் பெண் என்ன பதில் சொன்னார்.
♦நீங்களே சொல்லுங்கள் நியாயம்.
♦RTO கேட்டார் :
♦♦அம்மா நீங்கள் ஹைவேயில் 125 கி மீ வேகத்தில் உங்கள் காரை ஒட்டிக்கொண்டு போகிறீர்கள்..
♦♦ திடீரென்று உங்கள் முன்னால் ஒரு வயதானவரும் ஒரு இளைஞனும் வேறு வேறு திசையிலிருந்து முன்னால் வந்து விட்டார்கள்...
♦♦வலது பக்கம் பாறை இடது பக்கம் 6 அடி ஆழமான பள்ளம். நீங்கள் என்ன செய்வீர்கள்????
♦♦அந்தபெண் முதல் தடவை சொன்னார்:
♦பள்ளத்தில் இறக்குவேன் என்று.
♦இரண்டாவது தடவை சொன்னார் வயதானவர் மேல் ஏற்றுவேன் என்று....
♦மூன்றாவது தடவை சொன்னார் இளைஞன் மேல் ஏற்றுவேன் என்று..
♦♦நான்காவது தடவை சொன்னார் பாறை மேல் ஏற்றுவேன் என்று..
♦♦♦RTO கடைசியாகக் கேட்டார் ஏம்மா ஒரு தடவை கூட நான் ப்ரேக் போடுவேன்னு சொல்ல மாட்டீங்களேம்மா???
♦இப்படிப் பண்றீங்களேம்மா?
♦♦♦நான் எப்படிம்மா உங்களுக்கு லைசென்ஸ் தர்றது????
♦♦♦இது போலதான்
அண்ணாமலை பழிவாங்குறார்...
♦♦பா.ஜ.க. பழிவாங்குகிறது..
♦♦♦மோடி அரசு மிரட்டுகிறது
என சொல்கிறார்களே தவிர..
♦♦செந்தில் பாலாஜி தவறு செய்யவில்லை
பொதுமக்களது பணத்தை கொள்ளை அடிக்கவில்லை
எந்த ஊழலிலும் ஈடுபடவில்லை
வருமானத்தை மீறிய சொத்து எதுவும் சேர்க்கவில்லை என அவருக்காக பரிந்து பேசுபவர்கள் எவருமே சொல்ல வில்லையே ஏன்?????

கோயிலில் அரசு நிர்வாகம் தேவையில்லாத ஒன்று.

 சிதம்பரத்தில் அப்படி என்ன தான் பிரச்சினை? பொத்தாம் பொதுவாக இது சரி/தவறு என்று கூற முடியுமா? இங்கு அனைத்தும் சிதம்பர இரகசியமாக இருப்பதாக எண்ணி பலரும் நடப்பது புரியாமல் குழம்பிச் செல்கின்றனர். எப்போதாவது சிதம்பரம் வருபவர்களுக்கு இந்த பிரச்சனைகள் புரிவதில்லை. ஆகையினால் எப்போதும் வந்து செல்கிற என்னை போன்றோர் இதனை விளக்க கடமைப்பட்டுள்ளோம். எனவே எனக்கு தெரிந்ததை பொது மக்கள் முன் வைக்கிறேன்.

சபைகள்
சபை என்றால் நடராஜர் ஆடும் இடம் என்று பொருள், அதாவது அவர் தங்கும் இடம். சிதம்பரம் கோயிலில் மட்டுமே நடராஜருக்கு 5 சபைகள் உண்டு, அவை அனைத்திலும் அவர் தங்குகிறார். அது சித்சபை, கனகசபை, இராஜசபை, நிருத்த சபை, தேவ சபை என்பன ஆகும்.
இதில் நடராஜா சித்சபையில் (கருவறை) எப்போதும் இருக்கிறார், இதனை சிற்றம்பலம் என்று கூறுவர். வருடத்தில் அவருக்கு வரக்கூடிய ஆறு அபிஷேகங்களில் நான்கினை (சித்திரை, மாசி, ஆவனி, புரட்டாசி) சித்சபையில் இருந்து இறங்கி வந்து கனகசபையில் பெறுகிறார். கனகசபைக்கு பொன்னம்பலம் என்று பெயர். மீதமுள்ள இரண்டு அபிஷேகங்களை(ஆனி, மார்கழி) சித்சபை நீங்கி இராஜ சபையில்(ஆயிரங்கால் மண்டபம்) பெற்றுக் கொள்கிறார், அங்கேயே தாண்டவ தரிசனம் தருகிறார். கோனம்பலம் என்று இராஜசபைக்கு பெயர்.
48 வருடங்களுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நிகழும் போது, சித்சபை திருப்பணிகளுக்காக தேவ சபையில் ஒரு மண்டலம் தங்கி பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார்‌. தேவ சபை சிதம்பரம் கோயில் செப்புத்திருமேனிகள் இருக்கும் இடம். தேவர்கள் மத்தியில் காட்சி கொடுப்பதால் தேவ சபை என்று பெயர், பேரம்பலம் என்பது தமிழ்ப் பெயர்.
அடுத்ததாக இறைவன் இறைவியுடன் நடனப் போட்டி செய்த இடம், நிருத்த சபை என்று கூறப்படுகிறது. இது நடராஜர் சந்நிதிக்கு நேர் எதிரே ஊர்த்துவ தாண்டவர் சந்நிதியாக விளங்குகிறது. இதற்கு எதிரம்பலம் என்று பெயர் உண்டு. இங்கே நடராஜா எழுந்தருளுவதில்லை. மாலிக் கஃபூரின் படையெடுப்பிற்கு பின் தெற்கு வாயில் மூடப்பட்ட பிறகு அங்கே நடராஜா செல்வதில்லை என்றும் கூறலாம்.
ஆக .. தமிழகம் முழுவதும் பஞ்சசபை இருந்த போதும், சிதம்பரத்தில் மட்டுமே பஞ்ச சபை கொண்டமையாலும், இந்த சபைகளுக்கெல்லாம் தலைவன் நடராஜர் என்பதாலும் அவரை சபாபதி என்று அழைக்கிறோம்.
கனகசபை
கனகசபை என்பது சித்சபைக்கு முன்னே இருக்கும் ஒரு stepdown மண்டபம். இதன் பெயரே ஒரு misnomer, தங்கம் வேய்ந்த சபை என்று பொருள் பட்டாலும், சித்சபை(கருவறை) தான் நிஜமான பொற்கூறைக் கொண்டது.
சித்சபை கனகசபை இரண்டுமே rectangular shapeஇல் இருக்கும் ஒரே மாதிரியான மண்டபங்கள். சித்சபை தான் கருவறை என்றாலும் இரண்டுமே கருவறை போன்றது தான். இரண்டிற்குமே கருவறைக்குண்டான இலட்சினைகள் உண்டு. சித்சபையில் சபா மூர்த்தங்கள் அனைவரும் பூஜைகள் ஆராதனைகள் கண்டாலும், கனகசபை மீது தான் நடராஜர், சிவகாமி, பைரவர், சந்திரசேகரர், நடராஜரின் respresentative ஆக விளங்கும் சந்திரமௌலீஸ்வரர் என்னும் ஸ்படிக லிங்கம், இரத்தின ஸபாபதி‌ என்னும் குட்டி நடராஜர் விக்ரஹம்(இரத்தின கல்) என அனைவருக்கும் அபிஷேகம் மற்றும் நித்திய படி ஆறு கால பூஜைகள் நடைபெறும்.
சிதம்பரத்தில் சுவாமி நித்தம் உறையும் இரண்டு பிரதான இடங்கள் சிற்சபை மற்றும் கனகசபை ஆகும். இவை வெறும் architectural marvel மட்டுமல்லாது தத்துவார்த்தங்களின் பூரணம் என்பதனை நாம் வகையாக மறந்து விடுகிறோம். அதனை இரண்டு விதமாக விளக்கலாம், அதற்கு முதலில் சுவாமி ஏன் இங்கே வந்தார் என்று பார்ப்போம்.
சுவாமி தன் நடனத்தை அனைவரும் காண வேண்டும் என்ற நோக்கில் தான் சிதம்பரம் வந்தார். நடராஜரின் தாண்டவம் உலக இயக்கங்களின் தத்துவம், அணுவுக்கு உள்ளேயும் நிகழும் அற்புதம் - இதனை கண்ட உயிர்களுக்கு, வாழ்வின் அடிப்படை அறிவு உண்டாகி, பரம்பொருள் தெளிவு பெற்று, இனி பிறப்பு வேண்டாம் என்று எண்ணத் தூண்டுவதாம். ஆகையினால் அவர் கைலாயத்தில் ஆடும் நடனத்தை சிதம்பரத்தில் ஆடிக் காட்ட மனம் இறங்கினார்.
அஃது சிதம்பரத்தில் 'சிற்பர வியோமம்' என்னும் திறந்த வெளி மண்டபத்தில்(சித்சபை) ஆடினார். ஆனால் திறந்த வெளி மண்டபம் என்பது வஞ்சம், சூழ்ச்சி, களவு குணம் கொண்ட உலகத்தில் கலியுகத்தில் சாத்தியமற்றது. ஆகவே சித்சபை எனும் திறந்த வெளி மண்டபத்திற்கு கதவுகள் பூட்டுகள் நிறைந்து, கனகசபை எனும் பாதுகாப்பு மண்டபம் உண்டானது. கனகசபை ஒரு பாதுகாப்பு அரணாக எப்படி விளங்குகிறது?
அது‌ தான் கனகசபையின் தத்துவம்.‌ முதலில், சித்தம் என்னும் நமது conscious மனதில் நடராஜா ஆடுகிறார். ஆகையால் 'சித்சபை' என்று பெயர்ப்பெற்றது. அந்த நடனத்தை சித்தமெல்லாம் சிவனாக இருக்கும் தெளிவான எண்ணங்களால் மட்டுமே காண முடியும்.
ஆயினும் உலக இயல்புகள் அவரைக் காண விடாது, Subconscious மனம் எழுப்பும் ஆசைகள் தான் காரணம். அந்த subconscious state நிலையில்லாத ஆசைகள் உண்டாக்கும் அமைப்பை தான் கனகசபை என்கிறோம். ஒரு மனிதனின் உச்சக்கட்ட ஆசை பொருள் மீதே சாரும், அதனை தங்கம் என வைத்துக் கொள்வோம் 'கனகசபை' என்பதன் அர்த்தம் இப்போது புரியும்.
இரண்டாவதாக, இந்த அண்டத்தில் முழுவதுமாக விளங்கும் இறைவனை விராட் புருஷன் என்கிறோம். அப்படியாக உலகினில் அந்த விராட் புருஷனின் இருதய ஸ்தானமாக விளங்குவது சிதம்பரம் கோயில்(புண்டரீகபுரம்). ஆகவே உடலில் இதயம் இருப்பது போல் நேராக இல்லாமல் இடது புறமாக விளங்குகிறது சித்சபை. இதயத்தின் உள்ளே நித்தம் ஆடும் நடராஜர் இருக்கும் இடம் சித்சபை ஆகையினால், அவரைக் காக்கும் pericardium ஆக விளங்குவது கனகசபை.
ஆகவே சித்சபையில் இருக்கும் நடராஜர் ஒழுங்காக தெரியவில்லை(எப்படி தெரிவார்?) என்று கூறி கூறி கனகசபை மேலே ஏறும் வழக்கம் எப்படியோ உண்டாயிற்று. இராஜராஜன் சோழன் காலத்து ஓவியம் (தஞ்சை பெருங்கோயில் சாந்தார அறை) கூட மன்னன் தன் பெண்டுகளுடன் கனகசபையில் நின்று தரிசப்பது போன்று காட்டப்பட்டிருக்கிறது. அதில் பொது மக்களுக்கு அனுமதியில்லை.
இப்படியாக பாதுகாப்பு அரண்கள் கூட நம் பக்தியை பலவீனப்படுத்தி விடக்கூடாது என்று தான் சுவாமி வருடத்திற்கு நான்கு முறை, சித்சபை இறங்கி கனகசபையில் நமக்கு அருகே நின்று காட்சி தருகிறார். வருடத்தில் இரண்டு முறை - ஆனி மற்றும் மார்கழி மாதங்களில் தானே கோயில் நீங்கி தேர் ஏறுகிறார். அப்போதெல்லாம் அவர் காட்சி கொடுக்கும் விதத்தை எத்தனை வார்த்தை தொடுத்தாலும் விவரிக்க முடியாது.
விழாக்காலங்களில் சபை
{எழுத்துரு - அருண் பிள்ளை}
விழாக்காலங்களில் சபையின் நித்தியப்படிகள் பாதிக்கப்படுவதில்லை எனினும் மாமூலான முறைகள் மாற்றப்பட்டிருக்கும். வருடத்தில் நான்கு முறை சித்சபை இறங்கி நடராஜர் கனகசபைக்கு வரும் போது கனகசபை மீது ஏற வேண்டும் என்று யாரும் கேட்பதில்லை, அதற்கு அவசியமும் இல்லை. காரணம் நடராஜர் அருகே இருக்கிறார்.
அது போல ஆனி உத்திர திருமஞ்சனம் மற்றும் மார்கழி ஆருத்ரா திருமஞ்சனம் போது இயல்புகள் வேறாக இருக்கும். விழாவின் போது இரண்டு நாட்கள் நடராஜர் சபையில் இருப்பதில்லை. அப்போது என்ன நடக்கும்? முதல் நாள் இரவு தேர் பவனிக்கு நடராஜர் ஆயத்தமாகி சபையில் திருமுக தரிசனம்(மற்றவை மறைக்கப்பட்டு) காட்சித் தருவார். அன்று இரவே கனகசபையில் அடுத்த நாளுக்கு உரிய ஆறு கால பூஜைகளும் நடைபெறும்.
மறுநாள் நடராஜர் தேர் ஏறிவிட்ட பிறகு, அவர் இருந்த இடத்தில் சொர்ணகால பைரவரும், சந்திரசேகரரும் (சபைக்கு உள்ளே இருப்பவர்கள்) இருப்பார்கள், கனகசபை மூடப்படும். கனகசபையில் நடக்கும் பூஜைகள் சித்சபை உள்ளேயே நடைபெறும். இவை அனைத்தும் பதஞ்சலி சூத்திரம்(சிதம்பரம் கோயில் பூஜை முறை விளக்கும் நூல், வேதம் ஆகமம் கலந்தது) முறைப்படி இரகசியமாக நடைபெறும். அதில் பொது மக்கள் கலந்துக்கொள்வது இடையூறு தான், அவசியமும் இல்லை. நடராஜரே சபை நீங்கிய பின்னர், யாரைக் காண வேண்டும் என்று துடிக்கிறார்கள் என்பது புரியவில்லை.‌
ஒருவேளை சபை பிரதிநிதிகளை தரிசிக்க ஆசைப் பட்டால், சந்திரசேகரர் தினமும் அதிகாலையில் ரிஷபத்தில் பிரகாரம் சுற்றுவார், பைரவர் அஷ்டமி தோறும் (மாதம் இருமுறை) கனகசபையில் பூஜை பெறுவார்! (இவர்களை காண்பது மிக frequent என்கிறேன்)
சபை கட்டுபாடுகள்
கனகசபை மட்டும் அல்லாது அனைத்து சபைகளுக்கும் சிதம்பரத்தில் கட்டுப்பாடுகள் உண்டு. அது எப்போதும் நடைமுறையில் தான் இருக்கிறது,
சித்சபை (கருவறை) உள்ளே யாருக்கும் அனுமதி இல்லை, கனகசபையில் அபிஷேகம்-பூஜை நேரங்களில் அனுமதி இல்லை, தேவ சபையில் செப்புத் திருமேனிகள் பாதுகாக்கப்படுகின்றன, அங்கே ஒருபோதும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை, இராஜசபை எனும் ஆயிரங்கால் மண்டபம் நடராஜர் இருக்கும் அந்த இரண்டு நாட்கள் தவிர மற்றைய அத்தனை நாட்களும் பூட்டி தான் கிடக்கும், பொது மக்கள் செல்ல அனுமதி இல்லை. இவற்றிற்கெல்லாம் செல்ல மக்கள் உரிமை கோர முடியாது.
சபைகளின் முக்கியத்துவம்
சிதம்பரம் கோயிலுக்கு சபைகளே அடி நாதம். இங்கே நடராஜர், நடராஜர் என்று அழைக்கப்படாமல் சபாபதி என்றும்; கோயிலே 'தில்லை ஸபாநாயகர் கோயில்' என்றும் அழைக்கப்படுவதிலிருந்து அதன் முக்கியத்துவத்தினை அறியலாம்.
மேலும் நடராஜர் மட்டும் அல்லாமல் இங்கே இருக்கும் பெருமாளும் திருச்சித்திரகூடம் என்னும் சபையில் இருந்த படியே நடராஜரின் தாண்டவ தரிசனம் பெறுகிறார். {எழுத்துரு - அருண் பிள்ளை} அதனை தெற்றியம்பலம் என்றும் கூறுவர், 'முன்றில் கிடந்த மாயோன்' என்று திருமுறைகளும் அவரை விவரிக்கின்றன.
சிதம்பரம் கோயில் ஆகமவிதிப்படி நடைப்பெறும் கோயில் அல்ல, அவற்றின் முறைகளும் விதிகளும் வித்தியாசமானவை‌. ஆகம விதிப்படி கூறவேண்டுமானால் சித்சபை கருவறை என்றால், கனகசபை அர்த்த மண்டபம் போன்றது. பெரும்பாலான கோயில்களில் அர்த்த மண்டபத்தில் மக்களை அனுமதிப்பதில்லை, அதில் மக்கள் உரிமைக் கோரவும் முடியாது. சில கோயில்கள் அனுமதிக்கின்றன என்றாலும் கட்டுப்பாடுகள் உண்டு. அவற்றை மதித்து தான் ஆக வேண்டும்‌.
ஆகவே சிதம்பரம் கோயில் சபைகளால் ஆனது, அதில் நடராஜா இருந்து செல்லும் அத்தனை சபைகளும் புனிதம் மிக்கவை. அவற்றில் ஏற வேண்டாம் என்று கூறவில்லை, அவற்றின் புனிதத் தன்மைக்கு களங்கம் கற்பிக்க வேறு எண்ணங்களோடு ஏற வேண்டாம் என்பதே வேண்டுகோள்.
முக்கியமாக கனகசபை இறைவனை அருகில் காண ஏதுவாக உள்ள ஒரே காரணத்தினால் பொதுமக்களால்‌ விரும்பப்படுகிறது. அதிலும் முதல்முறை வருபவர்களுக்கு அந்த curiosity இருக்க தான் செய்யும், அதனை நடராஜரே உணர்ந்து தான் மேலே அனுமதிக்கிறார்.
அடிக்கடி வருபவர்களுக்கு மேலே சொன்ன தத்துவார்த்தங்கள் புரிந்தால், மேலே ஏறி தான் அவரை தரிசிக்க வேண்டும் என்ற ஆசை காணாமல் போகும். நான் நினைத்த‌ நேரங்களில் கனகசபையிலிருந்து தான் இறைவனைப் தரிசிப்பேன், அங்கிருந்து தான் தேவாரம் திருவாசகம் பாடுவேன் என்பதெல்லாம் வீண் ஆசை. அப்படிப்பட்டவர்களை ஒருபோதும் மேலே சேர்க்கமாட்டார் நடராஜா.
இந்த இரு விதமான ஆசைகளுக்கும் வித்தியாசம் இருக்கிறது‌. இரண்டையும் பாகுப்படுத்தி தக்கார்க்கு தக்கஞ் செய்ய தான் இந்த பிரச்சினையில் நடராஜா எத்தனித்திருக்கிறார்‌. உங்களுடைய ஆசை என்ன என்பதை அவர் அறிதலிலே நீங்கள் மேலே ஏறுவதும் கீழே நிற்பதும் நடக்கும்!
கடைசியாக, ஒன்றைக் கூற விரும்புகிறேன்! சிதம்பரம், நடராஜரின் நித்திய வாசத்தை உணர்த்தக்கூடிய இடம். மற்ற கோயில்களில் காசு தந்தால் எந்த இராஜாவையும் அருகில் சென்று பார்க்கலாம். இங்கே அவர் நினைத்தால் மட்டுமே, அவரைக் காண முடியும்! அதுவும் அவர் உங்கள் இடம் தேடி வருவார்(விழாக்காலங்களில் கூட்ட நெரிசல் இதனை விளக்கும்). அப்படியாக கனகசபை மேல் ஏறுவது/இறங்குவது என்பது எந்த மனிதனாலும் விதிக்கப்பட்ட கட்டுப்பாடு அல்ல‌ என்பதனை உணர வேண்டும்.
இங்கே ஒருவரே இராஜா, அவர் நடராஜா!

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...