Wednesday, June 21, 2023

வேறு எந்த ஒரு நாட்டிலுமே இப்படி குற்றவாளிகளை தங்க தட்டில் தாங்குவதில்லை . இதனை முதலில் சமன் செய்ய வேண்டும்.

 நான்கு அடைப்புகளுக்கு பைபாஸ் க்ராப்டிங் செய்திருக்கிறார்கள். நலமுடன் மருத்துவமனையிலிருந்து வரவாழ்த்துக்கள். உண்மையியே அடைப்புதான் போலிருக்கிறது. அமலாக்கத்துறை அதிகாரிகளும் நம்மைப்போல்தானே, அவர் நடிக்கிறார் என்று தோன்றி இருக்கலாம். அதே அடிப்படையில் நீதிமன்றமும் ஒரு முடிவுக்கு வரக்கூடாது. இன்றைக்கு விசாரிப்பதற்கு பதில் நாளை, அதன் மறுநாள் என்ன குடியா முழுகப்போகிறது. தர்மம் நின்று கொல்லுமாமே? சட்டம் அப்படி கொல்லுமோ என்பது சந்தேகம்தான்!

இது ஒருபுறம் இருக்கட்டும். சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்று சொல்லப்படுகிறதே? அது எவ்வளவு தூரம் உண்மை?
விசாரணைக்கைதி நோய்வாய் பட்டால் அரசுமருத்துவமனையில்தான் சிகிச்சை அளிப்பார்கள் - தனியார் மருத்துவமனைக்கு அனுமதி சாமானியர்களுக்கு தரமாட்டார்கள்! அதனால்தான் இலாக்கா இல்லாத மந்திரியோ?
ஒருவேளை உயர்நீதி மன்றமும் ஒருவித பதட்டத்தில் இருக்கிறதோ? முந்தைய தீர்ப்பிலேயே கடுமையாக விமர்சிக்கப்பட்டது மறந்திருக்காது - இப்போதும் உச்ச நீதிமன்றம், உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை உன்னிப்பாக கவனிக்கிறது. ஒருதலை பட்சமாக இருந்தால் தடலடி நடவடிக்கை நிச்சயம் - நீண்ட கயிரை விட்டிருக்கிறார்கள் என்பது போல் தோன்றுகிறது!
ஆனாலும் இளவரசர் அமலாக்கத்துறை நடவடிக்கைகள் ‘ஜாலியாக’ போய்க்கொண்டிருக்கிறது என்பது அரைவேக்காட்டுத்தனம். சினிமா வசனங்களை அரசியல் வாழ்க்கையிலும் கைதட்டலுக்காக பேசலாம் என்று நினைக்கிறார் போலும்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...