லைசன்சுக்காக கார் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடம் செல்வோம் நானும் பயிற்சியாளரும். அப்படித்தான் அந்த பெரிய அபார்ட்மென்ட் வளாகத்திற்குள் போனோம். அங்கே பார்க்கிங் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தேன். அந்த அபார்ட்மென்டிற்குள் நுழையும்போதே " இங்கே திருட்டு மோசமாக இருக்கும்னு கேள்விப்பட்டிருக்கிறேன். இங்கேயே நாம ஓட்டபோறோம்" என அவரிடம் கேட்டேன்.. அதெல்லாம் தைரியமா ஓட்டுங்கன்னு சொன்னார்.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Wednesday, June 28, 2023
ஏதோ சினிமால பாத்த எஃபெக்ட் ல இருந்துச்சு...
சில நொடிகள் பயந்தாலும். பின் சுதாரிச்சு மெல்ல காரை எடுத்தேன். அந்த பயிற்சியாளர்" LLR" கொண்டு வந்திருக்கீங்கள்ல? என கேட்டார். " வீட்ல வச்சிருக்கேன்" என சொன்னேன்.. " பத்திரமா வீட்டுக்குள்ள வச்சுக்கோங்க" என்பது போல் பார்த்துவிட்டு" போகட்டும். மொபைலையாவது வச்சிருக்கீங்களா? " என மெதுவா கேட்டார். ஆமான்னு சொல்லிட்டு வண்டிய எடுத்து மூணாவது ரவுண்ட் போனேன்.
அட சட்டுன்னு இயல்பாயிட்டோமே. பரவாயில்ல. நாம தைரியமான ஆளு போலன்னு என்னையே மெச்சிக்கிட்டேன். மூணாவது ரவுண்ட் முடிச்சிட்டு திரும்பி வர்றப்போ பாதி வழில திடுதிப்புன்னு நாலஞ்சு போலிஸ் மறுபடியும் என் கார் குறுக்கே வேகமா வந்தாங்க. இப்ப ஒரு பெண் போலிஸும் இருந்தாங்க..கையில சின்ன துப்பாக்கை நீட்டிகிட்டே ஓடினாங்க..(yea like Hollywood action movies )
அப்புறம் சினிமால வர்ற மாதிரி எனக்கு முன்னாடி ட்ரக், கார் அப்புறம் போலிஸ் கார்னு அடுத்தடுத்து மின்னல் வேகத்துல மூணு வண்டிங்க வந்து நின்னு அதிலிருந்து தபதபன்னு போலிஸா இறங்கினாங்க. நட்ட நடுவுல என் கார் போகமுடியாம நிக்குது என் முன்னையும் பின்னையும் துப்பாக்கியோட பத்து பதினஞ்சு போலிஸ் எப்படி இருக்கும்னு யோசிச்சு பாருங்க.
எனக்கென்ன பயம்னா, பயத்துல ப்ரேக்குக்கு பதிலா, அக்ஸ்லரேட்டரை மிதிச்சு என் கார் முன்னாடி நின்னிட்டு இருந்த அந்த லேடி போலிஸ் மேல ஏத்திடுவேன்னு பயத்துல உதற ஆரம்பிச்சுத்து. நம்ம கால எதுல வச்சிருக்கோம், ப்ரேக்கா, அக்ஸ்லரேட்டரான்னு குனிஞ்சு தேடிட்டே இருக்கேன். அந்த பயிற்சியாளர்" என்ன தேட்றீங்க?"ன்னு கேட்டார். " இல்ல கால் ப்ரேக்ல வச்சிருக்கேனா, ஸ்பீட்ல வச்சிருக்கேனான்னு பாத்தேன்" ன்னு சொன்னேன்.. " உனக்கு ட்ரையினிங் கொடுத்தது ஒரு குத்தமா" ங்கற மாதிரி சிரிச்சார்.
அந்த வளாகத்தோடு காம்பவுண்ட் ல ரொம்ப பெரிய தட்டி இருந்தது. எல்லாரும் சேர்ந்து அதை உடைச்சு அந்த பக்கம் போக முயற்சி செஞ்சுட்டு இருந்தாங்க.. அக்யூஸ்ட் அந்த பக்கம் தப்பிச்சுட்டான் போல..
இதுதான் சரியான சமயம் கிளம்பிடலாம்னு முடிவெடுத்து கிளம்பினோம்..”
“பயப்படாதீங்க மெல்லம்மா கிளம்புங்க, ஸ்பீடா போகாதீங்க. அப்றம் திருடன் நம்ம கார்ல இருக்கானோன்னு நம்மள சேஸ் பண்ண போறாங்க" என சிரிச்சுட்டே சொன்னார். ஒரு வழியா அந்த அபார்ட்மென்ட் விட்டு வெளில வந்துட்டோம். ஏதோ சினிமால பாத்த எஃபெக்ட் ல இருந்துச்சு...
கடைசிவரைக்கும் மட்ட மத்தியானத்துல, 105 டிகிரி வெயில்ல இத்தன போலிஸ் கண்ல மண்ண தூவின அந்த அக்யூஸ்ட்ட மட்டும் நான் பாக்கவேயில்லன்னு சின்ன வருத்தம் இருந்துச்சு..
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
No comments:
Post a Comment