Sunday, June 25, 2023

நரசிம்மர் உங்களை கைவிடமாட்டார் .

 ஒருவன் பல நாட்களால் பசியில் வாடினான். எங்கேயாவது சாப்பாடு கிடைக்குமா என்று ஏங்கினான். கடைசியில் ஒரு இடத்தில் சாப்பாடு பொட்டலம் இருந்தது. இவனும் உடனே உட்கார்ந்து அந்த பொட்டலத்தை விரித்து சாப்பிட ஆரம்பித்தான். அதிலும் அவனுக்கு பிடித்த இனிப்பு வகைகள் வேறு இருந்தன.

நன்றாக சிந்தித்து பாருங்கள். பல நாட்களாக சாப்பிட வில்லை. அப்படியென்றால் அவனுக்கு எவ்வளவு பசித்து இருக்கும். மேலும் அவனுக்கு பிடித்த இனிப்பு வகைகள் வேறு இருந்தன. சட்டென்று அவன் மனம் "சீக்கிரம் சாப்பிடு." என்று கட்டளை பிறப்பிக்க உடனே கையும் அந்த இனிப்பை வாயை நோக்கி கொண்டு சென்றது.
இந்த நேரத்தில் அவனால் அவன் மனதை கட்டுப்படுத்த முடியுமா? பொதுவாகவே மனதை கட்டுப்படுத்த முடியாது. அதுவும் பல நாட்களாக சாப்பிடாமல் கண் முன்னால் பிடித்த உணவு இருந்தால் மனதை கட்டுப்படுத்த இயலுமா?
ஆனால் அந்த நேரத்தில் ஒரு குரல். "அதை சாப்பிடாதே. விஷம் உள்ளது." என்றது. அவ்வளவுதான். அவன் புத்தி மனதிடம் "சாப்பிட்டால் இறந்து விடுவாய். அமைதியாக இரு." என்று மனதிடம் சொல்ல அடுத்த க்ஷணம் அவன் அந்த பொட்டலத்தை மூடினான். பசியை தியாகம் செய்தான். கோடி ருபாய் கொடுத்தாலும் அவன் அந்த உணவை சாப்பிட மாட்டான்.
எப்படி மனம் கட்டுப்பட்டது? அதுவும் ஆசையின் உச்சக்கட்டத்தில் எப்படி மனம் அடங்கியது? புத்திக்கு அவ்வளவு சக்தியா? மனதை அடக்கிவிட்டதே. காரணம் "அடுத்த முறை நீ சாப்பிட இருக்க மாட்டாய் " என்பதை உணர்ந்தது மனம். அது போல் "உலக விஷயம் இன்பம் என்று சிக்கிவிடாதே. அது துன்பத்தை விளைவிப்பது" என்று நம் மனதும் உணர்ந்தால் நல்லதுதானே?
அது சரி. விஷம் உணவில் கலந்ததை நீ பார்த்தாயா?. இல்லை. சரி யார் அதை கூறினார். ஒரு குரல் வந்தது. அந்த குரல் என்ன உண்மையை மட்டும்தான் கூறுமா? அது தெரியவில்லை. விஷத்தை இதற்கு முன்னால் பார்த்து இருக்கிறாயா? அருந்தி இருக்கிறாயா? இல்லை.
யாரோ தெரியாதவன் நீ பார்க்காத அனுபவிக்காத விஷத்தை பற்றி கூறும்போது நீ உன் பசியையும் உணவையும் துறக்கும் போது, பல ஞானிகள் நீ அனுபவிக்காத கண்ணனை அனுபவிக்கும் படி கூறும்போது நீ உன் உலக விஷயங்களை துறக்க முடியாதா? கோடி ரூபாய் கொடுத்தாலும் அல்லது புலன்கள் விரும்பும் எந்த விஷயத்தை கொடுத்தாலும் கண்ணன்தான் வேண்டும் என்று முடிவு எடுக்க முடியாதா?
முடியும். எப்படி? "இந்த விஷ உணவை சாப்பிட்டால் உயிர் போய்விடும் என்ற ஞானம் க்ஷணத்தில் எப்படி தோன்றியதோ அவன் பசியையும் உணவையும் துறந்தான். அது போல இந்த உலக விஷயங்கள் இன்பமும் துன்பமும் கலந்தவை என்ற ஞானம் தோன்றினால் நாமும் இந்த உலக விஷயங்கள் மீதுள்ள பந்தத்தை துறக்கலாம்தானே.........
May be an image of 1 person, temple and text that says '@Mahabharat_ satyatmarasevakaru satya marasea evakaru நிச்சயமாக ஏதாவது ஒரு ரூபத்தில் நான் உனக்கு துணையாக இருப்பேன். நம்பிக்கையுடன் நகரு.!'
All reactions

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...