Wednesday, June 28, 2023

தனி மனிதனாக இந்த இளையராஜாவுக்கு அல்ல.

 இந்தி இசை மேதை நௌஷாத் அலி “காலம் தான் இளையராஜாவின் இசைச் சாதனையை மதிப்பிட முடியுமே தவிர, வேறு யாராலும் அல்ல; வெளிப்படையாகச் சொல்வதென்றால் இந்தப் பிறவி மேதையிடமிருந்து (இளையராஜாவிடம்) நான் கற்றுக்கொண்டது நிறைய” என்று உங்களைப் பாராட்டினார். இப்படிப்பட்டவர்களும் உங்கள் பாடல்களைக் கேட்டுப் பெற்றுப் பயன்படுத்திய இசையமைப்பாளர்களும் பாலிவுட்டில் இருக்கத்தானே செய்கிறார்கள்..?

என் இசைக்குத்தான் எல்லாப் பெருமையுமே தவிர, தனி மனிதனாக இந்த இளையராஜாவுக்கு அல்ல. அவர்களைப் பொறுத்தவரை எனது இசையும் நானும் ஒன்று என்றே நினைத்துப் பாராட்டுகிறார்கள். உலகம் முழுவதிலும் அப்படியே நினைக்கிறார்கள். அது எனக்கு இறைவன் வழங்கிய அருட் கொடை.
நௌஷாத் அலி, என்னைக் குறித்து நிறைய விசாரித்துவிட்டுத்தான் என்னை அணுகி வந்தார். எத்தனையோ முறை சந்தித்திருக்கிறோம். ஒவ்வொரு முறையும் என்னை மிகவும் மரியாதையாக நடத்தினார். நான் சிறு வயது முதல் அவரது பாடல்களைக் கேட்டு ரசித்து, வளர்ந்தவன்.
-- இசைஞானி இளையராஜா
தி இந்து தமிழ் நாளிதழ் செவ்வியில்...
May be an image of 2 people
All reactions

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...