அமலாக்கத்துறையின் விசாரணையை தவிர்க்கவே நீதிமன்ற வழக்குகள், மருத்துவமனை நாடகங்கள் நடந்தேறுகின்றன. 15 நாட்கள் அவர்களின் கஸ்டடியில் இருந்தால் விசாரணையில் உண்மையை கக்கவைத்துவிடுவார்கள். கைது செய்த உடனே அந்த 15 நாள் கணக்கு ஆரம்பம். ஆட்கொணர்வு மனுவும் இதே காரணத்துக்குத்தான். ஏதாவது சாக்குபோக்கு சொல்லி கடத்திவிட்டால் கஸ்டடி விசாரணை முடியாது என்பது செபா தரப்பின் எண்ணம். பிரபல வக்கீல்களை வைத்து வாதாடினால் இது முடியும் என்பது அவர்கள் எண்ணம். பணம் ஏகப்பட்டதை இறைத்தால் பாதாளம் வரை பாய்ந்து நினைத்ததை சாதித்துவிடலாம் அல்லவா? பிணம்கூட வாயைப்பிளக்கும்போது இவர்கள் எம்மாத்திரம் என்பது அவர்கள் கணக்கு.
உச்சநீதிமன்றத்தில் வேறு ஒரு வழக்கில் இப்படி 15 நாள் காலாவதி ஆகி் கஸ்டடி விசாரணைக்கு காலம் கடந்துவிட்டது என்ற தீர்ப்பை மேற்கோள்காட்டி தப்பிக்க முயற்சி நடக்கும். உயர்நீதி மன்றத்தில் இது நிலுவையில் இருப்பதாலும், உயர்நீதிமன்ற தீர்ப்பு எப்படி இருந்தாலும் எதிர்தரப்பு மேல்முறையீடு செய்யும் என்பதாலும், உச்சநீதி மன்றம் வழக்கை ஜூலை முதல்வாரத்துக்கு ஒத்தி வைத்துள்ளது.
இத்தகைய குழப்பங்கள் இதுவே முதல்முறையாக இருப்பதால் இந்த வழக்கு பசி யின் வழக்கு போல ஒரு முன்னுதாரணமாக பிற்காலத்தில் மேற்கோள் காட்டப்படும். செபாவின் பெயர் காலம்காலமாக அழியாமல் (பொன் எழுத்துக்களால்) பொரிக்கப்படும் என்பது மட்டும் நிச்சயம்.
ஜூலையில் உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பு கிடைக்கும் வரை இந்த வழக்கில் ஓசை அடங்காது. அதற்குள் அவரின் உடம்பும் தேறிவிடும். விசாரணைக்கு தயாராகி விடுவார் (என எதிர்பார்க்கலாம்)! ஏனெனில் அவருக்கு வேறு ஏதாவது உடம்புக்கு வரலாமே?


No comments:
Post a Comment