Thursday, June 29, 2023

சுய மரியாதைக்காக...

 நான் ஒரு பெட்ரோல் பங்கில் எனது இருசக்கர வாகனத்திற்கு நேற்று பெட்ரோல் போட்டு விட்டு டயருக்கு காற்று அடிக்க பங்கில் உள்ள காற்று அடிக்குமிடத்திற்கு சென்று வரிசையில் நின்றேன். காற்று அடித்து கொண்டிருந்த பெட்ரோல் பங்க் பணியாளர் ஒருவர் காற்றடிக்க வரும், வாடிக்கையாளர்களிடம் முகம் சுளித்தபடியே வேலை செய்து கொண்டிருந்தார். எனக்கு முன்னால் நின்ற இளைஞரிடம் வண்டியை "இப்படி நிறுத்து அப்படி நிறுத்து" என்று கூறியவர் ஒரு கட்டத்திற்கு மேல் எரிச்சலைடைந்து, ஏய்யா காத்து அடிக்கறதே ஓசி". இதுல வேற ஏன்யா இப்படி போட்டு படுத்தற" என்றார். இளைஞனுக்கு அடுத்து நானிருக்கிறேன் சுளீரென்றது மண்டையில் உடனே நான்

"ஐயா எங்க வண்டிகளுக்கு நீங்க ஓசியில எல்லாம் காத்து அடிக்கல ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலுக்கும், டீசலுக்கும், பெட்ரோலிய நிறுவனம்.., ஐம்பது பைசாவை கழிவறையை சுத்தம் செய்யவும் வருகிற வாகனத்திற்கு காற்று அடிக்கவும் தருகிறது". எங்கள் பணத்திலிருந்து...,
"இனி யாரிடமும் ஓசி என வார்த்தையை விடவேண்டாம் முதலில் புரிந்து கொள்ளுங்கள் இல்லாவிட்டால் உங்கள் நிறுவன மேலாளரிடம் கேட்டுத்தெரிந்து தெளிந்து, வரும் வாகன ஓட்டிகளிடம் மரியாதையாக நடந்து கொள்ளுங்கள்". என்று, விவரம் கூறியது மட்டுமின்றி
பங்க் மேலாளரை அழைத்து புகார் கூறிவிடுவேன் எனவும் கூறினேன்.
நண்பர்களே! நாம் நம் வாகனத்திற்கு அடிக்கு பெட்ரோல் மற்றும் டீசலுக்கு ஒவ்வொரு லிட்டருக்கும் ₹ 2.50 ரூபாய் கமிஷனாகவும் மேலும் ஐம்பது பைசா கழிவறையை பராமரிக்கவும் காற்று அடித்துக்கொள்ளவும் பங்க் நடத்தும் ஏஜென்ஸிக்கு பெட்ரோலிய நிறுவனம் தருகிறது.
இந்த வசதியை வாடிக்கையாளருக்கு செய்து தர மறுக்கும் பங்க் மீது ஒருவாடிக்கையாளர் மெயில் மூலம் புகார் தரும்பட்சத்தில் அந்த பங்க் தற்காலிகமாக பெட்ரோலிய பொருட்கள் சப்ளை செய்வதை எண்ணெய் நிறுவனம் நிறுத்திவிடும்.! பிறகு உங்கள் சமாதான பதில் மெயிலுக்கு, பிறகே பங்க் விற்பனையை தொடங்கும், ஆகவே நண்பர்களே கார் பயணமோ இருசக்கர வாகன பயணமோ ஒரு வாடிக்கையாளருக்கு கழிவறையை மற்றும் காற்று அடிக்கவும் மறுக்கும் பங்க் மீது அங்கே பெயர் பலகையில் குறிப்பிட்டுருக்கும் மெயில் ஐடிக்கு புகாரளியுங்கள் .... உடனடி நடவடிக்கை எடுப்பார்கள்.
உங்கள் நலனில்..!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...