Thursday, June 29, 2023

அப்படி யூனிபார்முடன் உள்ளே சென்று என்ன செய்தனர்?

 1. 1984ல் பொற்கோவிலில் ராணுவம் புகுந்து நடவடிக்கை எடுத்தது போல, இப்பொழுது போலீசார் சிதம்பரத்தில் நுழைந்துள்ளனர்.

2. ஆனால், இங்கு ஒன்றும் அத்தகைய நிலைமை இல்லை, மாறாக அறநிலையத் துறை அதிகாரிகள் தான் பிரச்சினை உண்டாக வழி வகுத்தனர்.
3. நான்கு நாட்களுக்கு ஜூலை 24-27 2023 கனகசபை மீது ஏறி வழிபட முடியாது என்று அறிவித்ததில் எந்த பிரச்சினையும் இல்லை.
4. ஜூலை 28 முதல் அவ்வழிபாடு அனுமதிக்கப் பட்டுள்ளது. ஆனால், முன்பே போலீஸார் உள்ளே செல்வது, வருவது என்று வீடியோவில் தெரிகிறது.
5. அப்படி யூனிபார்முடன் உள்ளே சென்று என்ன செய்தனர்? இதே போன்று போலீஸ் ஸ்டேஷனில் சில தடைகள் இருந்தால், மீற முடியுமா?
6. வைத்த அறிவிப்புப் பலகையை எடுத்த அதிகாரி, எந்த சட்டத்தை மீறினார், அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்க முடியும்?
7. மாறாக, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக தீட்சிதர்கள் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
8. எதற்காக விஷேச நாட்களில் அரசு அதிகாரிகள், போலீஸார் கோவிலுக்குள் சென்று இப்பிரச்சினையை ஏற்படுத்த வேண்டும்?
9. கூட்டம் அதிகமாக இருக்கும் பொழுது, அதைக் கட்டுப்படுத்த, நடைமுறையில் கோவிலுக்குள் சில மாற்றங்களை செய்வதில், ஏன் தலையிட வேண்டும்?
10. தொடர்ந்து இவ்வாறு பலவிதங்களில் சிதம்பரம் கோவில் விசயங்களில் அதிகாரிகள்-போலீஸார், வழக்குகள் என்றெல்லாம் நடப்பது திகைப்பாகத் தான் இருக்கிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...