Sunday, June 25, 2023

காமராஜ் கைது செய்யப் படவில்லை . இந்த வருத்தத்தில் வேதனையில் மூன்றே மாதங்களில் மறைந்தார்.

தன்னைப் பிரதமராக்கிய காமராஜரை சிறையிலடைத்த எமர்ஜென்சியை இந்திராகாந்தி கொண்டுவந்த தினம் 25/06/1975
-அமித்ஷா
விரிவான தகவல் கீழே....
டெல்லி: நெருக்கடி மனநிலை காங்கிரஸ் கட்சிக்கு இப்போதும் அகலவில்லை என்றும்,. ஒரு குடும்பத்தின் நலன்தான் காங்கிரஸ் கட்சியின் நலனாகவும், தேசத்தின் நலனாகவும் இருப்பதாகவும் உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார்.
48 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாளில் தான், ஒரு நாள் இரவில் இந்த தேசம் சிறைச்சாலையாக மாறியது என்றும் ட்விடில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டது குறித்து அமித் ஷா காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரலி தொகுதியில் இந்திரா காந்தி வெற்றி பெற்றது செல்லாது என்று அவரது எம்பி பதவியை பறித்து அலகபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் கடந்த 1975-ம் ஆண்டு ஜூன் 24ம் தேதி உறுதி செய்தது.
எனினும் இந்திரா காந்தியை பிரதமராக தொடர உச்ச நீதிமன்றம் அனுமதித்தது.
அதற்கு மறு நாள் ஜூன் 25 ஆம் தேதி நள்ளிரவில் இந்தியாவில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டது. நாட்டில் அவசரநிலை 1975 ஜூன் 25-ம் தேதி முதல் 1977-ம் ஆண்டு மார்ச் 21-ம் தேதி வரை அமலில் இருந்தது.
இந்த காலக்கட்டத்தில் பத்திரிக்கை சுதந்திரம் பறிக்கப்பட்டது. கருத்துச்சுதந்திரம் பறிக்கப்பட்டது, எதிர்க்கட்சித் தலைவர்கள், அரசை விமர்சிப்பவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். இந்திய வரலாற்றில் கறுப்பு நாட்களாக இந்த அவசர நிலை பார்க்கப்படுகிறது. இந்நிலையில். நாட்டில் அவசர நிலை கொண்டுவந்து இன்றோடு 48 ஆண்டுகள் ஆகின்றன.
சிறைச்சாலையானது
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவரும்ன அமித் ஷா அவசர நிலை குறித்து பதிவிட்டு காங்கிரஸை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் தனது பதிவில். ''ஒரு குடும்பத்தின் அதிகாரப் பேராசையால் இந்த நாளில், 48 ஆண்டுகளுக்கு முன் இந்த தேசத்தில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டது. ஒரு நாள் இரவில் இந்த தேசம் சிறைச்சாலையாக மாறியது. இந்த காலக்கட்டத்தில் பத்திரிகை, நீதிமன்றம், பேச்சு சுதந்திரம், அனைத்தும் காலில் போட்டு மிதிக்கப்பட்டன. ஏழைகள், விளிம்புநிலைச் சமூகத்தில் இருப்பவர்கள் மீது அட்டூழியங்களும், அடக்குமுறைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டன. பல லட்சம் மக்களின் மிகப்பெரிய முயற்சிகளால் தேசத்தில் அவசர நிலை நீக்கப்பட்டு, ஜனநாயகம் மீண்டது. ஆனால், இன்னும் காங்கிரஸ் கட்சியில் இன்னமும் ஜனநாயகம் இல்லாமல்தான் உள்ளது.
சுதந்திரம் இல்லை
ஒரு குடும்பத்தின் நலன்தான் காங்கிரஸ் கட்சியின் நலனாகவும், அதுவே தேசத்தின் நலனாகவும் இருந்தது. இந்த கவலை தரும் நிலை இன்றும், இன்றைய காங்கிரஸில் இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டம் அண்மையில் நடந்தது அதில் மூத்த தலைவர்கள், இளம் தலைவர்கள் சிலப் பிரச்சினைகளை எழுப்பி இருக்கிறார்கள் ஆனால், அவர்கள் பேச்சு கவனிக்கப்படவில்லை. காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மரியாதையின்றி நீக்கப்பட்டார். வேதனைக்குரிய உண்மை என்னவென்றால், காங்கிரஸில் உள்ள தலைவர்கள் தங்களால் எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்க முடியவில்லை. அதற்கு சுதந்திரம் இல்லை என்று தெரிவிக்கிறார்கள்.
காங்கிரஸ் கேள்வி
ஏன் எமர்ஜென்சி மனநிலையில் இன்னும் இருக்கிறோம் என இந்தியாவின் எதிர்க்கட்சிகளில் ஒன்றான காங்கிரஸ் கட்சி, தனக்குத்தானே கேள்வி கேட்டுக்கொள்வது அவசியம்
ஒரு குடும்பத்தின் வாரிசுகளை தவிர மற்ற தலைவர்களால் ஏன் கட்சிக்குள் பேச முடியவில்லை என்பதை காங்கிரஸ் கேட்க வேண்டும்? காங்கிரஸ் கட்சியில் உள்ள தலைவர்கள் ஏன் மனம் வெறுக்கிறார்கள் என்று அந்த கட்சி தனக்கு தானே கேட்டுக்கொள்ள வேண்டும்.? மக்களுக்கும் காங்கிரஸ் கட்சிக்குமான இடைவெளி அதிகரித்துக் கொண்டே செல்கிறது இது பற்றி அந்த கட்சி கேட்க வேண்டும்?''. இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார். அமித் ஷாவின் கருத்தால் காங்கிரஸ் கட்சியின் கொந்தளித்து போய் உள்ளனர். அவரது கருத்துக்கு பதிலடி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
May be an image of 1 person
All react

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...