Thursday, June 22, 2023

திமுக அமைச்சராக நடைபெற்ற ஊழலுக்காக இல்லை.

 அப்போதய எதிர்கட்சி தலைவர் தான் அதிமுக அமைச்சர் செந்தில்பாலாஜி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சொல்லி கைதுசெய்யப்படவேண்டுமென்று சட்டமன்றத்திலே முறையீடு செய்தார்.

திமுக அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கதுறை கைதுசெய்தது.
கைது நடவடிக்கை அதிமுக அமைச்சராக இருந்த போது நடந்ததுதானே.திமுக அமைச்சராக நடைபெற்ற ஊழலுக்காக இல்லை.
1967ல் திமுக ஆட்சியை பிடித்தபோது அண்ணாவால் உணவுதுறை அமைச்சராக பதவி வகித்தவர் கே.ஏ.மதியழகன் அண்ணா மறைவுக்கு பிறகு கருணாநிதி அமைச்சரவையிலும் பங்குபெற்றார்.அப்போது உணவுதுறையில் ஊழல் நடக்கிறது என்று குற்றம் சாட்டப்பட்டதும் தார்மீக பொறுப்பேற்று அமைச்சர் பதவியை துறந்து மீண்டும் தன்னை குற்றமற்றவர்என்பதை நிரூபித்துவிட்டுதான் மீண்டும் அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.
அப்போது கருணாநிதியால் மதியழகன் தும்பைப்பூ போன்றவர்என புகழாரம் சூட்டப்பட்டவர் மதியழகன்அவர்கள்.
ஆனால் இப்போது செந்தில்பாலாஜியை காப்பாற்ற அரசு தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்துகிறது.அப்போதிருந்த திமுகவேறு.இப்போதுள்ளதிமுக வேறு.இதையெல்லாம்வேடிக்கை பார்க்கும் ஏமாளிகள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...